விஜய் டிவியில் மீண்டும் “அது இது எது”.. ஆரம்பமே சிறகடிக்க ஆசை பிரபலங்கள்.. முத்து செய்த அட்ராசிட்டி
சென்னை: விஜய் டிவியில் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "அது இது எது" ஷோ மீண்டும் இப்போது புதியதாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் இந்த வாரத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
நடிகர் "சிவகார்த்திகேயன்" தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் "சிரிச்சா போச்சு" என்ற ரவுண்டு பெரிய அளவில் பேசப்பட்டது. அது இப்போது மீண்டும் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது.

அதே நேரத்தில் விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது நிகழ்ச்சிக்கு மேலும் வரவேற்பை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் அமுதவாணன், ராமர், நாஞ்சில் விஜயன் உட்பட இன்னும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
சிறகடிக்க ஆசையில் டுவிஸ்ட்.. அடுத்து நடக்கப்போவது? முத்து கொடுத்த அப்டேட்.. பிரச்சனை நடந்துடுச்சா?
அந்த வகையில் விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் ஒரு நிகழ்ச்சி தான் அது இது எது நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் தான் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.

ஆரம்பத்தில் விஜய் டிவியில் போட்டியாளராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பிறகு தொகுப்பாளராக மாறி இருந்தார். இப்போது வெள்ளி திரையில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியை அதிகமான ரசிகர்கள் மிஸ் பண்ணி வந்தனர். மீண்டும் இது போன்ற ஒரு சிரிப்பு நிகழ்ச்சி வேண்டும் என்று பலர் ஃபீல் பண்ணி வந்திருந்த நிலையில் இப்போது இந்த நிகழ்ச்சியை பட்டி டிங்கரிங் செய்து மீண்டும் ஒளிபரப்புகின்றனர்.

அதில் இந்த வார சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் முத்து, மீனா, விஜயா மற்றும் ரோகினி போன்றார் நிகழ்ச்சியில் செம ஆட்டம் போட்டு இருக்கின்றனர். அப்போது "சிரிச்சா போச்சு" என்ற ரவுண்டில் எல்லோரையும் சிரிக்க வைப்பதற்காக அமுதவாணன், ராமர், நாஞ்சில் விஜயன் போன்றோர் காமெடி செய்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் மீனா யார் என்ன காமெடி செய்தாலும் நான் சிரிக்க மாட்டேன் என்று கெத்து காட்டிக் கண்டிருக்கும் போது, முத்து அங்கு சிரித்து ரகளை செய்து கொண்டிருந்தார். இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications