பாக்கியலட்சுமி: சுதாகருக்கு பாக்யா வைத்த செக்.. செல்வி கேட்ட கேள்வியால் எடுத்த புதிய முடிவு.. பரபரப்பான கதை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மே ஒன்றாம் தேதி மற்றும் இரண்டாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் செல்வி கேட்ட கேள்வியால் பாக்யா முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். இதுவரைக்கும் பாக்யாவை ஏமாற்றிக் கொண்டிருந்த சுதாகருக்கு இப்போது பாக்கியா சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.
பாக்யலட்சுமி சீரியல் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இதனாலேயே இந்த சீரியலின் கதைக்களம் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. பாக்யாவின் ரெஸ்டாரண்டை சுதாகர் ஏமாற்றி வாங்கி இருக்கிறார். முதல் ரெஸ்டாரண்ட் இனியா பெயரை சொல்லி சுதாகர் கைப்பற்றியதும் கோபத்தில் சுதாகரை பாக்கியா சரமாரியாக திட்டி இருந்தார்.

சுதாகர் நாடகம்
இதனால் கோபமான சுதாகர் பாக்யாவின் இன்னொரு ரெஸ்டாரண்டையும் ஓனரிடம் பேசி முடித்து விலைக்கு வாங்கிவிட்டார். இது பற்றி பாக்கியாவை நேரில் சந்தித்து வெறுப்பேற்றி இருந்தார். ஆனால் கோபியிடம் பாக்யாவுக்கு இன்னொரு ரெஸ்டாரண்ட் எங்கே இருக்கிறது என்றே எனக்கு தெரியாது, எனக்கும் அந்த ரெஸ்டாரன்ட் வாங்கியதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சுதாகர் நாடகம் போட அதையே கோபி, ஈஸ்வரி, செழியன் மூன்று பேரும் நம்பிக்கொண்டிருக்கிறனர்.
பணம் கேட்ட பாக்யா
முதலில் சுதாகர் மீது கோபிக்கு சந்தேகம் வந்தது. ஆனால் சுதாகர் போட்டோ நாடகத்தை பார்த்து கோபியும் இப்போது நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் சுதாகர் இன்று பாக்கியா வீட்டிற்கு வந்து குடும்பத்தினர் முன்பு பாக்கியாவை அசிங்கப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்தார். ஆனால் பாக்கியா தன்னுடைய ரெஸ்டாரண்டுக்கு நீங்க பணம் தரேன்னு சொன்னிங்களே எனக்கு இப்போ பணம் கொடுங்க என்று கேட்கிறார்.
செல்வி கேட்ட கேள்வி
இதற்கு என்ன சொல்ல என்று தெரியாமல் இருந்த சுதாகர் சரி உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்க, எனக்கு நஷ்டம் வராத அளவிற்கு நீங்க பணம் கொடுங்க என்று பாக்கியா சொல்லி இருக்கிறார். இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் இனி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். பிறகு பேங்குக்கு சென்று தான் இன்னும் எவ்வளவு பணம் தர வேண்டும் என்று விசாரிக்கிறார்.

பாக்கியா வைத்த செக்
அப்போது அங்கு 41 லட்சம் ரூபாய் தர வேண்டியது இருக்கு என்று சொல்கிறார்கள். பிறகு செல்வியுடன் பேசிக்கொண்டு வருகிறார். அப்போது செல்வி உனக்கே 41 லட்சம் கடன் இருக்கு இனி நீ கடனை அடைப்பியா இல்லை வேலை கொடுப்பியா என்று கேட்க, அதற்கு பாக்கியா நான் உனக்கும் சரி நம்ம கிட்ட வேலை பார்த்தா யாரையும் நான் அப்படியே விட்டுட மாட்டேன் என்று சொல்கிறார். அடுத்ததாக சுதாகர் ஆஃபீசுக்கு பாக்கியா போகிறார்.
பாக்கியாவின் பதிலடி
அங்கு பாக்கியாவிடம் சுதாகர் உங்க ரெஸ்டாரண்டுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்க அதற்கு பாக்கியா 60 லட்சம் வேண்டும் என்று சொன்னதும் சுதாகர் அதிர்ச்சியில் யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. சுதாகரிடம் பணம் கேட்டதற்காக ஈஸ்வரி, கோபி, செழியன் மூன்று பேரும் இன்று வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தனர்.
உங்கள் கருத்து
அப்போது நான் கடன் வாங்கி தான் ரெஸ்டாரண்ட் திறந்து இருந்தேன் அந்த ரெஸ்டாரண்டுக்கு 41 லட்சம் கடன் இருக்கிறது இப்போ ரெஸ்டாரண்ட் என் கைவசம் இல்ல இனி அந்த கடனை யார் கட்டுவா? நீங்க கட்டுவீங்களா? என்று அவர்களை வாய் அடைக்க செய்திருக்கிறார். இதனால் சுதாகருக்கு பதிலடி கொடுத்து அவரிடமிருந்தே பணம் வாங்கி புதிய பிசினஸ் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாக்யா எந்த முயற்சியில் ஜெயிப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்ல இதில் பாக்யாவின் குடும்பத்தினர் ஏதாவது குட்டையை குழப்புவார்கள் என்று நினைக்கிறீர்களா பாஸ்?












Click it and Unblock the Notifications