ஈஸ்வரியால் கோபியை பாடாய் படுத்தும் ராதிகா.. அவமானப்படுத்தும் பாக்யா.. வீட்டிற்கு வந்த புது பிரச்சனை
சென்னை: கோபியை ஈஸ்வரி தன்னுடைய வீட்டிற்கு ராதிகாவை விட்டு விட்டு வரும்படி சொன்னதை கேட்டு ராதிகா கோபியை திட்டுகிறார்.
பாக்கியாவை அவமானப்படுத்திய ராதிகாவிற்கு கடைசியில் பதிலடி கொடுத்து பாக்கியா அவமானப்படுத்துகிறார்.
ராதிகாவிற்கு ஆதரவாக ராதிகாவின் அம்மா வீட்டிற்குள் வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 12ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் கோபியிடம் ஈஸ்வரி ராதிகாவை விட்டு விட்டு வீட்டிற்கு வந்துவிடு என்று சொல்லியதை கேட்டு கோபி அமைதியாக காருக்கு வர அங்கிருந்து டக் என்று ராதிகா காருக்குள் வந்துவிட கோபி பயந்து விடுகிறார். பின்பு இங்கே எதற்காக வந்தாய் என்று கோபி கேட்க, நான் எல்லாத்தையும் கேட்டுட்டு தான் இருந்தேன். எனக்கு உங்க அம்மா சொன்னது கூட பயம் இல்லை ஆனா நீங்க அமைதியாக இருந்தது தான் எனக்கு பயமாய் இருக்கிறது என்று கோபியை ராதிகா திட்டுகிறார்.
அடுத்ததாக வீட்டில் அனைவரும் டைனிங் ஹாலில் இருக்க இனியா எனக்கு கதை சொல்லுங்க தாத்தா என்று கேட்க, ராமமூர்த்தி சொன்ன கதையை கேட்டு எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்க ஈஸ்வரி எல்லாரையும் திட்டுகிறார். இப்படி நீங்க சிரிச்சுகிட்டு இருக்கீங்க. இங்க என்ன பிரச்சனை போய்கிட்டு இருக்கு, அப்ப உங்களுக்கு யாருக்கும் கவலை இல்லையா? என்று திட்ட, அதற்கு செழியன் என்ன பாட்டி சிரிக்கிறது கூட தப்பா என கேட்கிறார்.

ஈஸ்வரி பாக்யாவிடம் நீயும் எழிலும் தானே கோபியை போய் கூட்டிட்டு வந்து இருக்கீங்க, உங்களுக்கு கூட வருத்தமா இல்லையா? என்று கேட்க அதற்கு எழில் அவர் இந்த வீட்டை விட்டு வெளியே போகும் போது எங்களை பத்தி கவலைப்பட்டாரா? என்று கேட்க ,இப்போ நான்தான் அவன் இங்கு கூப்பிட்டு இருக்கேன். ராதிகாவை விட்டுவிட்டு அவன் வந்து விடுவான் என்று சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு ஜெனி அவர் இங்கே வந்தா அத்தை என்ன நினைப்பாங்கன்னு நினைச்சீங்களா? என்று கேட்க நான் ராதிகாவை விட்டுட்டு தானே வர சொல்லி இருக்கிறேன் என்று ஈஸ்வரி செல்கிறார்.
கோபி வீட்டிற்கு கண்டிப்பா வருவான் என்று ஈஸ்வரி உறுதியாக சொல்கிறார். அடுத்ததாக கேண்டினில் ராதிகா ஒரு நபரோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியாவை சொடக்கு போட்டு கூப்பிட்டு ஜூஸ் கொண்டுவர சொல்கிறார். பிறகு எல்லோரும் நீங்க ரொம்ப திறமைசாலின்னு சொல்றாங்க. ஆனா நான் அதை நம்ப மாட்டேன் நீங்க ரொம்ப இன்னசென்ட் என்று சொல்ல, என்ன இன்னசென்ட்ன்னு சொல்லி சொல்லி போற வர்றவங்க எல்லாம் தலையில மிளகாய் அரைக்கிறாங்க என்று பாக்கியா கூறுகிறார்.

நீங்க அதற்கு ராதிகா நீங்க கேட்டரிங் ஆரம்பித்ததற்கு பதிலா நடிக்கப் போயிருக்கணும் என்று சொல்ல, ஏன் நான் அவ்ளோ அழகா இருக்கனா? என்று பாக்கியா, கேட்டு எனக்கு இவ்வளவு பாராட்டுனதுக்கு தேங்க்யூ மேடம் என்று சொல்கிறார். பிறகு உங்க மாமியார் என் புருஷனை கூப்பிட்டு பேசுறாங்க, ராதிகாவை விட்டுட்டு வந்துடுன்னு சொல்றாங்க என்று கோபத்தோடு திட்ட நான் தொலைச்ச பொருளை தேடி வந்துடுவேனு நினைக்காதீங்க நான் கண்டிப்பா வரமாட்டேன். நான் வேண்டாம்னு தூக்கி போட்ட பொருளைத்தான் நீங்க யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று பாக்கியா கோபத்தோடு பேசிக்கொண்டு கிளம்புகிறார்.
அடுத்ததாக கோபி வீட்டில் உட்கார்ந்திருக்க ராதிகா டீ போட்டுக் கொண்டு கொடுத்துவிட்டு, நீங்க சரியான பிராடா இருக்கீங்க, பாக்கியா உங்க கூட எப்படி வாழ்வது என்று நினைத்து நல்ல எஸ்கேப் ஆயிட்டாங்க என்று சொல்லித் திட்ட, எதுக்கு டென்ஷன் ஆக்குற நீ டென்ஷன் ஆனா உன்னோட அழகான முகம் அப்படி ஒரு மாதிரி பயங்கரமா ஆகிறது என்று சொல்லிக் கொண்டிருக்க, வெளியே காலிங் பெல் சத்தம் கேட்கிறது. கோபியை திட்டியபடியே ராதிகா போய் கதவை திறக்க, அங்க ராதிகாவின் அம்மா வீட்டு வாசலில் நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications