கோபிக்கு பாக்கியா கொடுத்த பதிலடி..கதறி அழும் ராதிகா.. எழில் கேட்ட கேள்வி.. பரபரப்பான திருப்பங்கள்
சென்னை: குடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த கோபி ராதிகாவை சமாதானப்படுத்துகிறார்.
கோபியை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என மொத்த குடும்பமும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
எழிலை திட்டிய கோபிக்கு பாக்கியா பதிலடி கொடுக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 26 ஆம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கோபியை ராதிகா நிறுத்திவைத்து குடிச்சிட்டு வந்திருக்கீங்களா, கோபி எதுக்காக இப்படி பண்ணுறீங்க என்று கேட்க, நான் நிறைய குடிச்சிட்டு இருந்தேன் இப்படி திடீர்னு விட முடியாது என்று கோபி கூறிக் கொண்டிருக்கிறார்.
பிறகு நான் கூடிய சீக்கிரம் குடியை விட்டு விடுவேன் என்று கோபி சத்தியம் செய்து கொடுக்கிறார். பிறகு குடித்த பிறகு தான் உன்னுடைய நியாயம் எனக்கு தெரிகிறது. நான் வருவதற்கு முன்பு நீ எப்படி கெத்தா இருந்தா, என்னால உன்னுடைய வாழ்க்கையே போய்விட்டது. நான் யாருகிட்டயும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறுகிறார். பிறகு நீ நான்,மயூ மூன்று பேரும் தான் நம்ம குடும்பம். மயூவையும் கூட்டிட்டு வந்துடலாம் என்று கோபி கூறிக் கொண்டிருக்கிறார்.

பிறகு மயூவை நீ பார்த்தியா என்று கோபி கேட்க, இல்லை நான் பார்க்கவில்லை என சொல்ல நான் நாளைக்கு போய் பார்க்கிறேன் என்று கோபி சொல்ல, பிறகு ராதிகா நீங்க மயூவை நன்றாக பார்த்துக்கொள்ளுவிங்க என்று தான் நான் கல்யாணம் பண்ணுனேன் ஆனா நீங்க அவளை அழ வைத்து விட்டீங்க என்று சொல்கிறார். ராதிகாவை சமாதானப்படுத்தி கன்னத்தில் முத்தம் கொடுத்துட்டு இருக்க அந்த நேரத்தில் பாக்கியா ரூமிற்குள் வருகிறார்.
பிறகு கோபியை பார்த்து அதிர்ச்சியாகி பாக்யா வெளியே போய்விட எதற்கு பாக்கியா நம்ப ரூமிற்கு வந்தா என்று கோபி கேட்க, அதற்கு ராதிகா நம்ம என்ன பண்றோம்னு வேவு பார்க்கிறதுக்காக வந்திருக்காங்க என்று திட்டிக் கொண்டிருக்கிறார். பிறகு கீழே வந்த பாக்கியாவிடம் ஈஸ்வரி பாக்யா எனக்கு மாத்திரையை கொடு என்று கூறுகிறார். அப்போது பாக்யா மேலே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பிறகு நானும் இனியாவும் இருக்கும் ரூமில் அவங்க இரண்டு பேரும் இருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் இருக்கிற இடத்தை தெரியாமல் நான் போய் கதவை திறந்து விட்டேன் என்று பாக்யா சொல்ல, நான் அவங்களை வீட்டை விட்டு வெளியே துரத்துரேன் என்று எழில் கிளம்ப, பாக்கியா தடுத்து நிறுத்துகிறார். பிறகு தலை எழுத்து என்று ஈஸ்வரி நொந்து கொண்டு இருக்கிறார்.

பிறகு நீயும் அம்மாவும் மேல தூங்குங்க நான் அமிர்தாவோடு கீழே படுத்துகிறோம் என்று எழில் சொல்ல ஜெனி எங்க ரூமில் படுத்துக்குங்க செழியன் வெளியே படுத்துக்குவான் என்று சொல்கின்றனர். ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாக்கியா நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறிவிட்டு கிளம்பி விடுகிறார். அப்போது ராமமூர்த்தி அவர்கள் எப்படி இந்த வீட்டுக்குள்ள வந்தாங்களோ அதே மாதிரி இந்த வீட்டை விட்டு வெளியே போயிடுவாங்க என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
பிறகு இரவில் தனியாக போன் பேசிக் கொண்டிருக்கும் கோபியிடம் எழில் எதற்காக எங்க அம்மா ரூமில் வந்து இருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு கோபி நீதான் என்னுடைய ரூமில் உட்கார்ந்து விட்டாய் நான் ராதிகாவுடன் வேறு எங்கே இருக்க முடியும் என்று திட்டகிறார். சொந்த வீட்டுக்கு காரங்ககிட்டயே பேசி வீட்டை வித்துக்கிட்டு இப்ப எதுக்கு இங்க வந்தீங்க என்று எழில் திட்ட, முழுசா பணத்தை கொடுத்தாதான் இந்த வீடு உங்க அம்மா பேருக்கு வரும் அதுவரைக்கும் இந்த வீடு என் பேர்ல தான் இருக்கு என்று திட்டுகிறார்.
அப்போது அங்கு வரும் பாக்கியா எழில் இவங்க கிட்ட எல்லாம் பேச வேண்டாம் என்று சொல்ல அதற்கு கோபி உங்க அம்மா வந்துட்டாங்க ஆட்டுக்குட்டி மாதிரி பின்னாடியே முந்தானைய பிடிச்சிட்டு போங்க என்று எழில் கிண்டல் செய்ய, பாக்யா சிலர் அல்பமா அசிங்கமா பேசிகிட்டு இருக்காங்க. அவங்க கிட்ட போயி நாம சண்டைக்கு நின்னுகிட்டு இருந்தா நமக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் இல்ல என்று பேசி விட்டு கிளம்பி விடுகிறார். கோபி கோபத்தில் தனியாக யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications