பாக்கியா கொடுத்த பதிலடி.. வீட்டை விட்டு கிளம்ப ரெடியான ராதிகா.. கோபிக்கு வந்த புது பிரச்சனை
சென்னை: பாக்கியா வீட்டை விட்டு வெளியேற ராதிகா முடிவெடுத்து இருக்கிறார்.
ராதிகாவின் அம்மா அப்பா ராதிகாவை அப்படி செய்யக்கூடாது என்று கூறுகிறார்.
ராதிகாவால் கோபி சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினியாக இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஏப்ரல் 29ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் ராதிகா மயூவை பார்க்க வீட்டிற்கு வந்து அப்போது அம்மாவிடம் அந்த வீட்ல என்னை யாருமே மதிக்க மாட்டேங்குறாங்க, அங்கே இருக்கவே புடிக்கல நான் அங்கிருந்து வந்து விடலாம் என்று நினைக்கிறேன் என்று சொல்கிறார்.
பாக்கியாவிற்கு பழனிச்சாமி கொடுத்த அட்வைஸ்..ஈஸ்வரியிடம் பிரச்சனை செய்யும் ராதிகா..கோபி எடுத்த முடிவு
அவரது அம்மா நீ வந்ததும் உன்னை ஆரத்தி எடுத்து வர வைத்து மரியாதை கொடுப்பாங்கன்னு நினைச்சியா? உன்னுடைய வாழ்க்கையே தக்க வச்சிக்க நீ இதெல்லாம் கொஞ்சம் நாளைக்கு பொறுத்துக்கிட்டு தான் ஆக வேண்டும் என்று ஏத்தி விடுகிறார். சரி என்று ராதிகா அங்கிருந்து ஆபீசுக்கு கிளம்பி செல்ல ஆபீஸில் பாக்கியா செல்வி எல்லாரும் கேண்டிலில் பிஸியாக இருக்கின்றனர். அப்போது அங்கு வரும் ராதிகா காபி கேட்டு பாக்யாவிடம் என்னமோ சுயமரியாதை அது இது எல்லாம் பேசுவீங்க. இப்போ எப்படி இன்னும் அந்த வீட்டில் இருக்கிங்க என்று கேட்கிறார்.

அதற்கு பாக்யா சுயமரியாதை எனக்கு மட்டும் கிடையாது. எல்லோருக்கும் இருக்கு. அந்த வீட்ல ஒருத்தர் கூட உங்கள மதிக்கல. அப்படி இருக்கும் போது உங்களுக்கு பிடிக்காத உங்க வீட்ல நீங்க எப்படி இருக்கீங்க? உங்களுக்கு சுயமரியாதை இல்லையா? என்று கேட்டு பதிலடி கொடுக்கிறார்.
இதனால் கடுப்பாகும் ராதிகா காபி நல்லாவே இல்லை என அங்கிருந்து எழுந்து போகிறார். அடுத்ததாக வீட்டில் பாக்கியா எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறி கொண்டு இருக்க, சாப்பாடு சூப்பர் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் கோபி அதை பார்த்து இந்த குடும்பத்தையா விட்டு விட்டு போனோம் என்று வருத்தப்படுகிறார். பிறகு ரூமிற்கு வந்ததும் ராதிகா டம்ளரில் தண்ணி கொண்டு வந்து கொடுக்க, என்ன டம்ளர் தண்ணி எடுத்துட்டு வர்ற டின்னர் இல்லையா? என கேட்க இன்னைக்கு சாப்பாடு இந்த தண்ணி தான் குடிச்சிட்டு படுத்து தூங்குங்க என்று கூறுகிறார்.

இந்த வீட்டில யாரும் என்ன மதிக்க மாட்டேங்கிறாங்க கிச்சனுக்குள்ளேயே விட மாட்டேங்கிறாங்க, எப்பவும் பாக்கியா கிச்சனில் நின்னுகிட்டே இருக்காங்க என்று கோபியிடம் கம்ப்ளைன்ட் செய்ய அதுக்குத்தான் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிக்கலாம் என்று சொன்னேன் என்று சொல்கிறார். பிறகு எனக்கு இந்த வீட்டில் ஒரு கிச்சன் ஏற்பாடு பண்ணி கொடுங்க என கேட்க, நீ சொல்ற மாதிரி எல்லாம் செய்ய முடியாது பாக்கியா, என கோபி பாக்கியாவின் பெயரை உலற, ராதிகா இன்னுமும் உங்க மனசுல பாக்கியா தான் இருக்காங்க என சத்தம் போடுகிறார்.
கோபி இல்ல இல்ல நான் அதுக்காக தான் சொல்ல வந்தேன். ஆனா பசியிலே இருக்கேன். அதனால தான் இப்படி ஏதோ பேசிட்டேன். நான் இப்பவே ஆன்லைன்ல ஆர்டர் பண்றேன் என்று சொல்லி, கோபி நைஸ் ஆக வெளியே வந்து இவ கூட வாழவே முடியாது போல, செத்துப் போயிடலாம் போல, என புலம்பி தவிக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications