உதவி செய்த பாக்யாவை அசிங்கப்படுத்தும் ராதிகா.. போதையில் கோபி செய்த செயல்.. கலங்கும் எழில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் போதையில் தெருவில் விழுந்து கிடந்த கோபியை பாக்கியா வீட்டிற்கு கொண்டு விடுகிறார்.

கோபியோடு பாக்கியாவை பார்த்த ராதிகா கோபத்தில் பாக்யாவை திட்டுகிறார்.

தன்னுடைய மனதில் இருக்கும் கவலைகளை எல்லாம் கோபி போதையில் உளறி விடுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 April 7th promo and Episode Highlights

புலம்பும் கோபி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 7ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் போதையில் தெருவில் விழுந்து கிடந்த கோபியை காரில் ஏற்றுக்கொண்டு பாக்யா காரை ஓட்டிக்கொண்டு வருகிறார். அப்போது கோபி போதையில் உளறிக் கொண்டே இருக்கிறார். தான் பாக்யாவை விட்டுவிட்டு வந்தது ரொம்பவே தப்பு, ராதிகாவை கல்யாணம் செய்தது ரொம்பவே தவறு, ராதிகாவை கல்யாணமே பண்ணி இருக்கவே கூடாது என்று புலம்பிக்கொண்டே வருகிறார்.

ராதிகாவை பற்றி கம்பளைண்ட்:

ராதிகா அவளோட லைஃபை பார்த்து இருக்கணும், நான் என்னோட லைஃபை பார்த்து இருக்கணும். ஆனா தப்பு பண்ணிட்டேன். இது என்னோட தப்பு தான். வீட்டுக்கு போறது ஒரு ஸ்கூலுக்கு போற மாதிரி இருக்குது வீட்டுக்கு போனதும் கேள்வி கேட்கிறா? பெஞ்ச் மேல ஏரி நிற்காதது தான் குறை. எல்லாம் பண்ற அப்படி மிரட்டி வைக்கிறா! இப்படி எல்லாம் இருந்தா மனுஷனால வாழவே முடியாது. சத்தியமா மனுஷனால வாழ முடியாது என்று கோபி உளறிக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 April 7th promo and Episode Highlights

ராதிகாவிற்கு அதிர்ச்சி

இதுவரைக்கும் என் பொண்ணு என் கூட இருந்தா இப்போ அதுவும் போயிடுச்சு என்று புலம்பிக் கொண்டிருக்க, கோபியின் வீடு வந்து விடுகிறது. எழில் கோபியை காரில் இருந்து இறங்க வைக்க தெருவில் கோபி விழுந்து விடுகிறார். பிறகு கை தாங்கலாக கோபியை எழில் மற்றும் பாக்கியா இருவரும் கூட்டிக்கொண்டு ராதிகாவின் வீட்டிற்கு வருகின்றனர். ராதிகா கதவை திறந்து பார்க்கும் போது கோபி பாக்யாவின் தோளில் சாய்ந்து இருக்கிறார் அதை பார்த்து அதிர்ச்சி ஆகிறார்.

பாக்யாவின் பதிலடி:

வீட்டிற்கு வந்த கோபி மீண்டும் புலம்பிக்கொண்டே இருக்க, எனக்கு போன் வந்துச்சு அதனால நான் போய் கூட்டிட்டு வந்தேன் என்று பாக்கியா சொல்ல, நீங்க யாரு அவருக்கு என்று ராதிகா கேள்வி கேட்க, உங்க ஹஸ்பண்ட் ரோட்டில் மயங்கி கிடந்தாரு நீங்க வீட்டில தேடிகிட்டு இருப்பீங்கனு தோணிச்சு. நீங்க ஒரு காலத்துல என்னோட பிரண்டாக இருந்தீங்க. பிரண்டோட ஹஸ்பெண்ட் இப்படி ரோட்ல கெடக்கும்போது பார்த்துட்டு அப்படியே வர முடியுமா? அதனால தான் கூட்டிட்டு வந்தேன். பாத்துக்கோங்க என்று கோபத்தில் பேசிக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பி விடுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 April 7th promo and Episode Highlights

பீல் பண்றீங்களா பாக்கியா:

பிறகு போதையில் இருந்த கோபி இடம் ராதிகா நீங்க சொன்னீங்களாய அவளுக்கு போன் பண்ணுன்னு நீங்க சொன்னீங்களா? என்று கேள்வி கேட்க, கோபி ராதிகா கிட்ட போகாத அவ கத்துவ, காதுல ரத்தம் வர்ற அளவுக்கு கத்துவா, என்று ராதிகா விடமே புலம்பி கொண்டு இருக்க, ராதிகா கேட்டு மேலும் கோபம் அடைகிறார்.அதே நேரத்தில் பாக்யாவின் வீட்டில் எழில் நம்ம யாரும் வேண்டான்னு போனவங்கதானம்மா அவரு. எப்படியோ போகட்டும் என்று சொல்ல, எப்படிடா அப்படி விட முடியும் என்று பாக்கியா கேட்க?, நியாயமா இருந்தா சந்தோஷமா இருக்க முடியும் ஆனா அவர் தான் அப்படி நடந்துக்கவே இல்லையே. அதனால அவரை பற்றி யோசிக்காத என்று சொல்ல, அவரை அப்படிப் பார்க்கும்போது உனக்கு வருத்தமாகவே இல்லையா? என்று பாக்யா கேட்க எழில் பீல் பண்ணுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+