ராதிகாவுக்கு எதிராக களம் இறங்கும் அமிர்தா.. ஈஸ்வரியை கண்டு கோபத்தில் கோபி எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்கியா படிப்பதற்கு சம்மதித்த ஈஸ்வரி வீடியோவை பார்த்து ராதிகா மற்றும் கோபி அதிர்ச்சி அடைகின்றனர்.

அதோடு கேண்டினில் ராதிகா செய்யும் அலப்பறையை பார்த்து அமிர்தா கோபத்தில் புது முடிவெடுக்கிறார். இந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யா பழனிச்சாமியை சந்தித்து பழனிச்சாமிக்கு ஸ்வீட் கொடுத்து இன்னைக்கு எங்க அத்தை நான் காலேஜுக்கு போவதற்கு சம்மதிச்சுட்டாங்க என்று ஈஸ்வரி பேசிய வீடியோவை காட்டி எல்லாமே நீங்க ஐடியா கொடுத்ததுனால தான் இப்படி நடந்துச்சு. ப்ராப்ளம் இப்ப ஈஸியா சால்வ் ஆகிட்டு என்று நன்றி மேல் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு பழனிச்சாமி ஒரு குறிப்பிட்ட வயசுக்கு பிறகு அவங்களுக்கு நாம இருக்கிறோம். நீங்க தான் எங்களுக்கு முக்கியம் என்பது உணர்த்திட்டாலே அவங்க நமக்காக எதுவும் செய்வாங்க என்று பேசிக் கொண்டிருக்க, உண்மைதான் அவங்க பையனை விட நான் தான் முக்கியம் என்று எங்க அத்தை இப்படி மாறுவாங்கன்னு நான் நினைக்கல. ஆனா ரொம்ப நல்லவங்க என்று பாக்கியாவும் மாமியாரை பாராட்டி பேசிக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக கேண்டினில் செல்வி அங்கு இருக்கும் சக ஊழியர்களோடு பாக்கியா காலேஜுக்கு போவது பற்றி பேசிக் கொண்டிருக்க, அங்கு வரும் அமிர்தா அங்கிருக்கும் அனைவரிடமும் பாக்கியா பேசியதும், அதற்கு ஈஸ்வரி பதில் வீடியோ கொடுத்ததையும் காட்டிக் கொண்டு இருக்க எல்லோரும் அந்த வீடியோவை பார்த்து சந்தோஷமாக பேசி சிரித்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் சிரிக்கும் சத்தத்தை கேட்ட ராதிகா அங்கு வந்து என்ன சத்தம் இவ்வளவு சத்தமாக சிரிக்க கூடாது என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு செல்வி மேடம் இங்க பாருங்க எங்க அக்கா மாமியார் பற்றி பேசியதும், அவங்க மாமியார் எங்க அக்காவை புகழ்ந்து பேசியதும் எப்படி இருக்குன்னு பாருங்க என்று சொல்லி வீடியோவை காட்ட, அதை கேட்டு ராதிகா கோபப்படுகிறார். பிறகு மாமியார் மருமகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று செல்வி மேலும் ஏத்தி விட ராதிகா அங்கிருந்து கோபமாக கிளம்புகிறார். அதற்கு இப்படித்தான் எப்பவும் பண்ணுவாங்களா என்று கேட்க, சில நேரம் இன்னும் அதிகமாக திட்டுவாங்க என்று செல்வி சொல்கிறார்.
நாம கேண்டீன் ஆர்டர் எடுத்து இருக்கோம். அதுக்காக அவங்க இப்படி வந்து திட்ட வேண்டிய அவசியம் இல்ல. அவங்களுக்கு அந்த உரிமை கிடையாது. நான் இவங்களுக்கு என்ன பண்ணனுமோ அதை பண்ணுறேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து கோபி பாரில் தன்னுடைய நண்பரோடு குடித்துக் கொண்டிருக்க, ராதிகா கோபிக்கு போன் செய்து எங்க இருக்கீங்க என்று கேட்டுவிட்டு பிறகு பாக்கியா மற்றும் ஈஸ்வரி பேசிய வீடியோவை அனுப்புகிறார்.

பாக்கியா பேசிய வீடியோவையும் அதற்கு ஈஸ்வரி பாக்யாவை படிக்க வைப்பதற்கு சம்மதம் சொன்ன வீடியோவையும் பார்த்த கோபி அதிர்ச்சி ஆகி, என்னை பெத்த எங்க அம்மா கூட இப்படி மாறிட்டாங்களே? எல்லாரும் ஒன்னு சேர்ந்துட்டாங்க. இனி நான் என்னுடைய வேலையை காட்டுறேன் என்று கோபமாக அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications