பாக்யா நிலைமையை பார்த்து கோபி சொன்ன வார்த்தை.. காப்பாற்ற வரும் பழனிச்சாமி.. இனி இதுதான் கதையா?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா இனியாவிற்கு பாராட்டு விழா நடக்கும் மேடைக்கு வராததை நினைத்து ராதிகாவும் கோபியும் சந்தோஷப்படுகின்றனர்.
அதே நேரத்தில் பாக்கியாவை காப்பாற்றுவதற்காக பழனிச்சாமியும், ராமமூர்த்தியும் மண்டபத்திற்கு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூலை 21ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் இனியாவிற்கு ஸ்கூலில் பாராட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது இனியா பாக்கியா வருவதற்காக காத்துக் கொண்டே இருக்கிறார்.
பாக்யா வராததால் பீல் பண்ணிக் கொண்டிருக்கும்போது, ஜெனி பாக்யாவுக்கு போன் செய்து பார்க்கிறார். ஆனாலும் பாக்கியாவின் போன் வேலை செய்யவில்லை. அதே நேரத்தில் கோபி இனியாவை கூப்பிட்டு கூட்டத்தினர் அனைவர் முன்னாடியும் வாழ்த்துகிறார். என்னால தான் உன்னால சரியா படிக்க முடியாமல் ஆகிட்டு. ஆனாலும் நீ அதுலயும் கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் படிச்சு முன்னேறி இருக்க, எல்லாமே உன்னோட முயற்சி தான் என்று வாழ்ந்தி கொண்டிருக்கிறார்.
பிறகு மேடையில் இனியாவை அழைத்து மாலை போட்டு கௌரவிக்கிறார்கள். அப்போது மேடையில் இனியாவின் டீச்சர்ஸ் இனியாவின் பேரன்ஸ் வாங்க என்று சொல்ல கோபி ராதிகாவை மேடைக்கு அழைக்கிறார். அதற்கு ராதிகா நான் வரவில்லை உங்கள் வீட்டில் உள்ளவங்க எல்லாரும் இருக்காங்க என்று சொல்ல, கோபி நீ அவளை நல்லாதானே பாத்துகிட்ட. அவ படிக்கும் போது நல்லா பாத்துக்கிட்டா. அதனால நீ மேலே வரலாம் என்று சொல்லி ராதிகாவை மேலே கூப்பிட்டு போகிறார்.
பிறகு மேடையில் போட்டோ எடுத்து விட்டு கீழே வந்ததும் ராதிகா கோபி இடம் பாக்யா வரவில்லை என்பதை கவனிச்சீங்களா? என்று கேட்க, அந்த இடியட் வரல அது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. எவ்வளவு தலை போற வேலைய இருந்தாலும் வந்துடுவா. இப்ப ஏன் வரலன்னு தெரியல என்று சொல்லி, அவ வரல என்கிறது எனக்கு சந்தோசம் தான். சரி வா நாம வீட்டுக்கு போகலாம் என்று சொல்லி ராதிகாவராதிகாவை கைய பிடித்து வெளியே கூப்பிட்டு போகிறார்.
பிறகு அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர். எழில் தனக்கு வேலை இருப்பதாக கூறி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதைத் தொடர்ந்து வீட்டிற்கு பழனிச்சாமி வருகிறார். அவர் இனியாவிற்கு கிப்ட் கொடுத்துவிட்டு இனியாவை பாராட்டுகிறார். அப்போது பாக்கியா மட்டும் இல்லையே என்று கேட்க, ராமமூர்த்தி பாக்யா சமைக்க போயிருக்கிறார் என்று சொல்ல, எதனால் இன்னும் வரவில்லை என்பதை போய் பார்த்துவிட்டு வரலாம் என்று ராமமூர்த்தி பழனிச்சாமியும் கிளம்புகின்றனர்.
மண்டபத்திற்கு வந்ததும் அங்கே நிச்சயதார்த்த வீட்டில் சண்டை நடந்து கொண்டிருப்பதை பார்த்து பழனிச்சாமி அதிர்ச்சியடைகிறார். பிறகு பாக்கியா சமைக்கும் இடத்திற்கு சென்று தரையில் உட்கார வைத்திருப்பதை பார்த்து என்ன நடந்தது என்று கேட்க, பாக்கியா எல்லாவற்றையும் சொல்கிறார். இதனால் பழனிச்சாமி அங்கு தனக்குத் தெரிந்த ஒருவர் இருப்பதை பார்த்து அவரை கூப்பிட்டு விசாரித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications