கோபியை அவமானப்படுத்தும் பழனிச்சாமி..ராதிகாவுக்கு கிடைத்த ஏமாற்றம்..பாக்யா எடுத்த முடிவு
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமி தான் பெண்பார்க்க வந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்தப் பொண்ணு அதிகமா படிச்சுருக்கிற மாப்பிள்ளைய எதிர்பார்ப்பதால பழனிச்சாமி இது எனக்கு செட்டாகாதுன்னு சொல்கிறார்.
வீட்டிற்கு வந்த கோபியை பாக்கியா முன்பு பழனிச்சாமி அவமானப்படுத்துகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 14 ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் பழனிச்சாமியும், பாக்கியா பார்த்து வைத்த பெண்ணும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த பெண் பழனிச்சாமியின் சொத்து விவரங்கள், பிசினஸ் லாபங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.
அதோடு பழனிச்சாமியின் குடும்பத்தை பற்றி விசாரித்து கொண்டிருந்த அந்த பெண் பழனிச்சாமியின் அக்கா, தங்கைகள் அவர்களுடைய குழந்தைகள் எல்லாம் நான்தான் பார்க்கணுமா? என்று கேட்க அதைக் கேட்டு பழனிச்சாமி அதிர்ச்சி அடைகிறார்.
அதே நேரத்தில் கோபி காரில் சென்று கொண்டிருக்கும்போது மயூ நாம எங்கேயாவது ஜாலியா போயிட்டு வரலாம் என்று சொல்ல, இன்னைக்கு புயல் மழை எல்லாம் வரப்போகுது எங்கேயும் போக முடியாது என்று அடுக்கடுக்காக பொய் கூறிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ராதிகாவும் மயூவும் சரி எங்களை எங்க வீட்டிலேயே கொண்டு விட்டுருங்க என்று கூறுகின்றனர்.
அதைத்தொடர்ந்து பாக்யா வீட்டில் பாக்யா, ஈஸ்வரி, ராமமூர்த்தி, பழனிச்சாமியின் அம்மா அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இந்த திருமணம் எப்படியும் முடிந்துவிடும் என்று உறுதியாக கூறிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் வரும் பழனிச்சாமி இது எனக்கு சரிபட்டு வரும்னு தோணல, அந்த பொண்ணுக்கு என்னை விட நல்ல படிச்ச மாப்பிள்ளை கிடைக்கும். அந்த பொண்ணு படிச்ச மாப்பிள்ளை தான் விரும்புகிறது.

அதனால இதை பத்தி இதுக்கு மேல இனி பேசாதீங்க என சொல்ல எல்லோரும் அதிர்ச்சியானாலும் பிறகு இந்த பொண்ணு இல்லன்னா பரவாயில்ல எப்படியும் உங்களுக்கு நாங்க கல்யாணம் பண்ணி வைக்காம விட மாட்டோம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு பழனிச்சாமி சரி நான் வீட்டுக்கு கிளம்பறேன்னு அம்மாவை கூட்டிக்கொண்டு வெளியே வர அவர் பேக்கை மறந்துவிட்டு வந்து விட்டதை நினைவுபடுத்தி வீட்டிற்குள் மீண்டும் எடுக்க செல்கிறார்.
வாசலில் பாக்கியாவும் பழனிச்சாமியும் பேசிக் கொண்டிருக்க அந்த நேரமாக வரும் கோபி இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். ஐயோ இவன் வேற இன்னும் போகல போலையே என்று புலம்பியபடி இருக்க அப்போது அவரைப் பார்த்த பழனிச்சாமி கோபி இடம் என்ன ஞாபகம் இருக்குதா? என்று விசாரிக்க கோபி அதிர்ச்சியடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications