மிரட்டும் போலீஸ்..கோபி சொன்ன வார்த்தை..குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி..பரபரப்பான திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபியிடம் போலீஸ் யார் உங்க மனைவி என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு கோபி ராதிகா தான் நான் தாலி கட்டிய மனைவி என்று சொல்கிறார்.
அப்போ இனி ராதிகா தான் இந்த வீட்டில் இருக்கணும் அதை யாரும் தடுக்கக் கூடாது என்று போலீஸ் மிரட்டுகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 8 ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் ஈஸ்வரி தொடர்ந்து ராதிகா இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று கூறிக்கொண்டே இருப்பதால் கோபி இடம் போலீஸ் யார் உங்க மனைவி என்று கேள்வி கேட்கின்றனர்.

அதற்கு கோபி அமைதியாக இருப்பதை பார்த்து ராதிகாவின் அம்மா என்ன நீங்க தடுமாறுறீங்க என்று கேள்வி கேட்க, அதற்கு கோபி நான் தான் ராதிகாவுக்கு தாலி கட்டினேன் என்று சொல்ல, ராதிகாவின் அம்மா இரண்டாவது கல்யாணம் ஆகி வந்த பிறகு மூத்த மருமக வீட்டில தான் இருக்கா, அவளும் இந்த வீட்டை விட்டு போறதா இல்ல என்று கோபத்தில் திட்ட அதற்கு போலீஸ் ராதிகா அம்மாவை திட்டுகின்றனர்.
மூத்த பொண்டாட்டிக்கு டைவர்ஸ் கிடைச்ச பிறகு எப்படி அவர் எந்த வீட்டில் இருக்கலாம்? இந்த வீடு கோபி பேருல தானே இருக்கு என்று போலீஸிடம் ராதிகா அம்மா வாக்குவாதம் செய்ய, எழில் இந்த ஆளு பண்ணின வேலைக்கு எல்லாம் எங்க அம்மா வீட்டை விட்டு போக முடியாது என்று சொல்ல, போலீஸ் வீடு யாரு பேர்ல சார் இருக்கு என்று கேட்க என் பேர்ல தான் இருக்கு என்று கோபி சொல்லுகிறார்.
போலீஸ் உங்க புருஷனுக்கு தான் வேற கல்யாணம் முடிஞ்சிடுச்சு இல்ல அப்புறம் நீங்க எதுக்கு இங்க இருக்கீங்க என்று பாக்கியாவிடம் கேட்க, பாக்யா அந்த இடத்தை விட்டு கோபமாக போய் வீட்டிற்குள் வந்து அமர்ந்து கொண்டு பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். பிறகு போலீஸ் ராதிகா இந்த வீட்டுல தான் இருப்பாங்க யாரும் அவர்களை வெளியே போக சொல்ல கூடாது என்று சொல்றாங்க.
அதைத்தொடர்ந்து ராதிகா கெத்தா வீட்டிற்குள் வந்து பாக்யாவை முறைத்தபடி மேலே செல்கிறார். பிறகு போலிஸ் யாரும் இனி ராதிகாவை வெளியே போங்கன்னு சொல்லக்கூடாது. அப்படி யாராவது சொன்னால், மொத்தமா குடும்பத்தோட தூக்கி உள்ள வச்சுருவேன் என்று மிரட்டி விட்டு போகின்றனர்.

பிறகு கோபி ஈஸ்வரி இடம் வந்து அம்மா இனி இந்த மாதிரி நடக்காது என்று கெஞ்ச, செழியன், எழில் ராமமூர்த்தி என அனைவரும் கோபியை திட்டுகின்றனர். இதனால் கோபமான கோபி ராதிகாவை திட்டுவதற்காக ரூமிற்குள் கோபமாக வருகிறார். வந்ததும் ராதிகாவிடம் நீ எதுக்காக இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்று கோபமாக திட்டுகிறார்.
அப்போ ராதிகா தேவையில்லாத பொருளை தூக்கி போடுற மாதிரி உங்க அம்மா என்னையும் தூக்கி போட்டுருவேன்னு சொன்னாங்க என்று சொல்ல, கோபி இதுவெல்லாம் நடந்திருக்கா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications