Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டை விட்டு கிளம்ப ரெடியாகும் பாக்கியா..ஜெனி எடுத்த திடீர் முடிவு..கோபியை மிரட்டும் ராதிகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா உங்க அம்மா என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிட்டாங்க. எனக்குன்னு கேட்க யாரும் இல்லை என்று என்று அழ கோபி சமாதானம் படுத்துகிறார்.

அதே நேரத்தில் பாக்கியா நான் இந்த வீட்டை விட்டு போய்விடுகிறேன் எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை என்று கூறுகிறார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியான ஈஸ்வரி நீ இந்த வீட்டை விட்டு போகக்கூடாது என்று சத்தியம் வாங்குகிறார்.

Baakiyalakshmi Serial 2023 June 9th Episode full update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூன் 9ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் கோபியும் ராதிகாவும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு என்னோட நிலமை புரியுதா? எனக்கு என்று கேட்க இந்த வீட்டில யாருமே இல்ல என்று ராதிகா அழுகிறார்.

அதற்கு கோபி ஏன் நான் இருக்கேன். உனக்காக நான் கேள்வி கேட்பேன் என்று சொல்ல, அதற்கு ராதிகா பாக்கியா தான் இன்னும் என் மருமக என்று உங்க அம்மா சொல்லிட்டு இருக்காங்க. என்னை கழுத்தை புடிச்சு வெளிய தள்ளுனாங்க என்று பேசிய படியே, கோபியின் கழுத்தை பிடித்து தள்ள கோபி வலியில் துடிக்கிறார். அதற்கு உங்களுக்கே இப்படி வலிக்கிறது என்றால் அப்ப எனக்கும் இப்படித்தானே வலித்து இருக்கும் என்று ராதிகா கோபத்தோடு பேசுகிறார்.

பிறகு இனி இந்த மாதிரி நடக்காமல் நான் பார்த்துகிறேன் என்று கோபி சொல்லி ராதிகாவை சமாதானப்படுத்துகிறார். அதே நேரத்தில் பாக்கியா ஈஸ்வரியிடம் பாத்தீங்களா? நான் இப்படி எல்லாம் நடக்கும்ங்குறதுக்காக தான் நான் அப்பவே வீட்டை விட்டு போறேன்னு சொன்னேன். ஆனா நீங்க தான் என்னை விடாமல் தடுத்து நிறுத்திட்டீங்க.

Baakiyalakshmi Serial 2023 June 9th Episode full update

இன்னைக்கு கண்டவங்க எல்லாம் வந்து என்னை கேள்வி கேக்குறாங்க. இந்த வீட்டில் ராதிகா என்கிட்ட நடந்துக்கிற விதமும் பேசுகிற விதமும் கொஞ்சம் கூட எனக்கு பிடிக்கல. இங்க இருக்கிற ஒவ்வொரு நாளும் எனக்கு நரக வேதனையாக தான் இருக்கு. அவர் இந்த வீட்டுக்கு திரும்பி வந்த போதே நான் போறேன்னு சொன்னேன். அப்பவே விட்டிருந்தால் இன்னைக்கு இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என்று சொல்ல,

அதற்கு ஈஸ்வரி நான் இப்பவும் சொல்கிறேன் இந்த வீட்டை விட்டு நீ போகக்கூடாது. இது என் மேல சத்தியம் என்று சொல்லி பாக்கியாவை தடுத்து நிறுத்தி, கண்டிப்பாக பாரு இன்னும் கொஞ்ச நாளில் ராதிகா இந்த வீட்டை விட்டு போயிருவா, என்று பாக்யாவை சமாதானம் செய்ய, ராமமூர்த்தியும் நாங்க ஏற்கனவே கஷ்டத்துல இருக்கோம் நீயும் இந்த வீட்டை விட்டு போயிட்டா நாங்க உடைந்து போய் விடுவோம் என்று பீல் பண்ணி பேசுகிறார்.

இதைத்தொடர்ந்து எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து பேசி கொண்டிருக்கும் போது, ராதிகா மயூவுடன் வெளியே போய்விட்டு வீட்டிற்கு வருகிறார். மயூ வீட்டிற்குள் வருவதற்கு தயங்கியபடி நிற்க, நீ பயப்படாத இது நம்ம வீடு, இனி இங்கே நம்ம ராஜ்ஜியம் தான் நடக்கணும் என்று பேசியபடி, ஈஸ்வரியை வம்பு இழுக்கிறார். பிறகு இனி நீ எங்கேயும் போய் வரலாம் உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.

Baakiyalakshmi Serial 2023 June 9th Episode full update

அப்படி யாராவது தடுத்தாங்கன்னா அவங்கள போலீஸ் புடிச்சுட்டு போயிடுவாங்க. நீ ரூமுக்குள் மட்டும் இருக்கத் தேவையில்லை. சுதந்திரமா எங்க வேணாலும் போகலாம் என்று சொல்கிறார். இதைத் தொடர்ந்து பாக்கியா, அமிர்தா, ஜெனி, எழில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது ஜெனி இனி நாம இந்த வீட்டை விட்டு வெளியே போயிடுவோமா? வேற எங்கேயாவது போய் இருப்போமா? என்று கேட்கிறார்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாக்யா நாம இந்த வீட்டை விட்டு ஈசியா போயிடலாம். ஆனா அத்தை மாமாவால இங்கிருந்து போக முடியாது. அதனால இந்த முடிவை நாம பொறுத்துதான் எடுக்கணும் என்று ஜெனியை சமாதானப்படுத்துகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+