நாம அவங்க முன்னாடி தோற்க கூடாது.. பாக்கியாவிற்காக பழனிச்சாமி எடுத்த முடிவு..கோவிலில் புலம்பும் கோபி
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 29ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியாவிற்கு ராதிகா புதியதாக டாஸ்க் ஒன்று கொடுத்திருக்கிறார்.
பாக்யா ராதிகா முன்னாடி தோற்றுவிடக்கூடாது என்று பழனிச்சாமி அவருக்கு உதவியாக வீடியோ காலில் கேக் செய்ய சொல்லி கொடுக்கிறார்.

தொடங்கிய பிரச்சனைகள்
பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பார்த்த திருப்பங்கள் தற்போது வர தொடங்கியிருக்கிறது. இதுவரைக்கும் பாக்கியாவும் ராதிகாவும் அந்த அளவிற்கு பெரிய அளவில் மோதிக் கொள்ளாமல் எப்போதும் முறைத்தபடி இருந்தனர். தற்போது நேரடியாகவே பாக்யா மற்றும் ராதிகா இருவரும் மோதிக் கொண்டிருக்கின்றனர். ராதிகாவின் ஆபீஸில் கேண்டினில் ராதிகா ஆர்டர் எடுத்ததுமே அதை தடுப்பதற்காக எத்தனையோ வேலைகளை ராதிகா செய்து வந்தார். ஆனால் பாக்யா வெற்றி பெற்றதால் தற்போது அதை பழி வாங்குவதற்காக ராதிகா புதுசு புதுசாக வேலை செய்து வருகிறார்.

அடுத்த டாஸ்க்
முதலில் அனைவரும் சுடிதார் யூனிபார்ம் ஆக போட வேண்டும் என்று ராதிகா சொல்ல, அதற்கு பாக்யா தன்னுடைய மாமியாரின் சப்போர்ட்டோடு அந்த டாஸ்க்கில் ஜெயித்து விடந இப்போது மீண்டும் பாக்கியாவிற்கு ராதிகா புதிய டாஸ்க் கொடுத்து இருக்கிறார். கேண்டினில் பல வகையான கேக் இருக்க வேண்டும் என்றும் ஆனால் அந்த கேக் வகைகள் எங்கேயும் வாங்க கூடாது நீங்களே தான் செய்து வைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

தோள் கொடுக்கும் நண்பன்
இதைப்பற்றி பழனிச்சாமியிடம் கூறும் பாக்யா ராதிகா வேறு யாரும் இல்லை என்னுடைய முன்னாள் கணவரின் இந்நாள் மனைவி. அதனால் தான் என்னிடம் இப்படி நடந்து கொள்கிறார் என்று சொல்ல, அதற்கு நாம தோற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முன்பு நாம் தோற்கவே கூடாது அவர்கள் முன்பு கொத்தாக வாழ வேண்டும் என்று மாஸ் வசனம் எல்லாம் பேசி வீடியோ காலில் பாக்யாவிற்கு கேக் செய்வதற்கு பழனிச்சாமி சொல்லிக் கொடுக்கிறார். இது தற்போதைய பிரமோ வில் ஆகி இருக்கிறது.

கதை குளறுபடி
இந்த சீரியலில் சில சொதப்பல்களும் இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே பாக்யாவின் வீட்டில் ஜெனி கேக் செய்து அசத்தியிருக்கிறார். பாக்கியாவிற்கு கேக் செய்ய தெரியவில்லை என்றால் ஜெனி இடம் கேட்டிருக்கலாம் ஆனால் பழனிச்சாமிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள் என்று தெரிய வருகிறது. அது மட்டும் அல்லாமல் ராதிகா செய்யும் செயல்களை எல்லாம் பாக்கியா நேரடியாக அந்த ஆபீஸ் எம்டி இடம் பேசலாம். ஆனால் அப்படி பேசாமல் ராதிகாவிற்கு போட்டியாக பாக்யாவும் நடந்து கொண்டிருக்கிறார். சீரியலில் விறுவிறுப்பிற்க்காக இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள் போல, ஆனால் எந்த ஒரு ஐடி கம்பெனியிலும் இப்படி எல்லாம் டாஸ்க் கொடுத்து இருக்க மாட்டாங்க. ஹெச் ஆர் கூட புடவை கட்டி வரும் நிலையில், கேண்டினில் வேலை செய்பவர்கள் சுடிதாரில் வரவேண்டும் என்று சொல்கிறார்கள். அதே நிலையில் கேக் வெளியே வாங்க கூடாது நீங்கள் தான் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இதுதான் எந்த ஊர் கதை என்று தெரியவில்லை.

புலம்பித் தவிக்கும் கோபி
இந்த நிலையில் இந்த சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ் ஏற்கனவே ராதிகாவிடம் மாட்டிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறார். பாக்யா பழனிசாமி இடம் பேசுவதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கோவிலில் இருந்தபடி யாருக்கோ பயந்து பயந்து அந்த பக்கம் இந்த பக்கம் பார்த்துக்கொண்டு பிறகு கோவிலில் சாமி கும்பிட்டபடி இருக்கும் வீடியோ ஒன்றையும், கோவிலில் இவர் ஊரை தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் என்று தத்துவ பாடல் விரக்தியில் பாடுவது போன்றும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இது தற்போது வைரலாகி பரவி வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications