ஈஸ்வரியை அடக்கி பணிய வைத்த அமிர்தா.. ஒன்றாக சுற்றிய சரண், இனியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த பாக்கியா

அமிர்தாவை திட்டிக் கொண்டிருந்த ஈஸ்வரியை அமிர்தா மிரட்டி பணிய வைத்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் இனிப்பு பலகாரத்தை சாப்பிட்டு பழனிச்சாமி பாராட்டி இருக்கிறார்.

அவமானப்படுத்திய ஈஸ்வரியை அமிர்தா அடக்கி வைத்திருக்கிறார்.

இனியா மற்றும் சரண் இருவரும் ஒன்றாக சுற்றி கொண்டிருப்பதை பார்த்து பாக்கியா இருவரிடமும் பேசியிருக்கிறார்.

பாக்கியாவை பாராட்டிய பழனிச்சாமி

பாக்கியாவை பாராட்டிய பழனிச்சாமி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் இங்கிலீஷ் கோச்சிங் சென்டரில் பாக்கியா இருக்க, அங்கே இன்னொரு நபருடன் பேசிக்கொண்டு பாக்யாவின் அருகில் பழனிச்சாமி வந்து அமர்கிறார். பிறகு தன்னை பாக்கியாவிடம் அறிமுகம் செய்து கொள்கிறார். முதல் நாள் நடைபெற்றதை நினைவுபடுத்தி தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். பிறகு தான் செய்து கொண்டு வந்த இனிப்பு பலகாரத்தை பாக்யா பழனிசாமிக்கு எடுத்துக் கொடுக்க மிகவும் அருமையாக இருக்கிறது என்று பாராட்டியபடியே தன்னுடைய அம்மாவை நினைவு படுத்தி விட்டதாக உருக்கமாக பேசுகிறார்.

ஈஸ்வரிக்கு அமிர்தா கொடுத்த பதிலடி

ஈஸ்வரிக்கு அமிர்தா கொடுத்த பதிலடி

அடுத்ததாக ஈஸ்வரி தனியாக தன்னுடைய அறையில் போனை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது மதியம் ஒரு மணி ஆனதால் மாத்திரை கொடுக்க வேண்டும் என்று அமிர்தா தூங்கிக் கொண்டிருக்கும் ஜெனியை எழுப்பிக் முயற்சி செய்ய ஆனால் ஜெனி எழுந்திருக்கவில்லை. பிறகு அமிர்தா, ஈஸ்வரி ரூமுக்கு செல்ல ஈஸ்வரி வழக்கம் போல கோபப்பட்டு அமிர்தாவை திட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த முறை அமிர்தா பயந்து வெளியே வராமல் இப்ப மாத்திரை போட போறீங்களா? இல்லையா? என்று திட்டுகிறார். அப்பவும் ஈஸ்வரி மாத்திரை போட மாட்டேன் என அடம்பிடிக்க, அமிர்தா வாயைத் திறந்து மாத்திரையை போட்டு தண்ணீர் கொடுக்கிறார். இவ்வளவுதான் எதற்கு இந்த அளப்பறையா? என்று கேட்டபடியே இருந்து வெளியே வருகிறார்.

பாக்கியாவின் எதிர்பாராத செயல்

பாக்கியாவின் எதிர்பாராத செயல்

அடுத்ததாக பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் முடித்து வெளியே வருகிறார். அப்போது இனியா சரணுடன் பேசிக்கொண்டு இருவரும் சைக்கிளை தள்ளிக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் இருவரையும் பாக்கியா பார்த்து விடுகிறார். பாக்கியாவை பார்த்ததும் இனியா அதிர்ச்சி அடைகிறார். ஆனால் பாக்கியா எதுவும் பேசாமல் இனியாவிடம் நலம் விசாரித்துவிட்டு சரண் இடம் பேசுகிறார். பெயர் என்ன ஏது என்று சரணிடம் கேட்டுக் கொண்டு இனியா உடன் ஒருநாள் கண்டிப்பாக வீட்டுக்கு வரவேண்டும் என்று சரணிடம் சொல்ல, சரண் அதற்கு எந்த வீட்டுக்கு என்று கேட்கிறார். இதை கேட்ட பாக்கியா அதிர்ச்சியாக இனியா நான் தான் அப்பாவோடு இருக்கிறேன் என்பதை சொன்னேன் என்று சொல்ல, பிறகு நம்ம வீட்டுக்கு தான் வரணும் என்று பாக்கியா சொல்ல கண்டிப்பா வருகிறேன். பிரியாணினா எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்ல, வீட்டுக்கு வா நான் செஞ்சு தருகிறேன் என்று பாக்யா கூறிவிட்டு இனியாவை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

செழியனின் பொறாமை

செழியனின் பொறாமை

அடுத்ததாக வீட்டில் பாக்யா, ஜெனி, அமிர்தா, எழில் என எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செழியன் ஜெனியை வந்து படுத்து தூங்க சொல்கிறார். ஜெனி நீ போ நான் வரேன்னு சொல்லி அனுப்பினார். பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் செழியன் ரூமில் இருந்து ஜெனி வராததால் வெளியே வர, அப்போது அமிர்தா மற்றும் எழில் இருவரும் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கின்றனர். ஜெனி வராத காரணத்தினால் இவனெல்லாம் நல்ல ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு தான் இருக்கான். ஜெனிதான் ஒரு ஃபீலிங்கும் இல்லாமல் இருக்கா, என செழியன் புலம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+