காலில் விழுந்து கெஞ்சும் பாக்கியா..சூழ்ச்சி செய்த கோபிக்கு இனியா கொடுத்த பதிலடி! எதிர்பாராத ஏமாற்றம்
பாக்கியா கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வரவேண்டும் என்று தன்னுடைய மாமியாரின் காலில் விழுந்து கெஞ்சுகிறார்.
சென்னை: பாக்யாவின் கேட்டரிங் திறப்பு விழாவிற்கு இனியாவை அனுப்பாமல் கோபி தடுத்து நிறுத்த பல முயற்சிகளை எடுக்கிறார்.
ராதிகாவிற்கு அவருடைய எம்டி போன் செய்து கேண்டின் திறப்பு விழாவிற்கு வரும்படி கூறுகிறார்.
கேண்டின் திறப்பு விழாவிற்கு வரும்படி பாக்கியா ஈஸ்வரி இடம் கேட்க அதற்கு ஈஸ்வரி வரமாட்டேன் என்று சொல்லுவதும் பாக்கியா காலில் விழுந்து கெஞ்சி கூப்பிடுகிறார்.

கோபியின் சூழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 8ஆம் தேதிக்கான இன்றைய எபிசொட்டின் ஆரம்பத்தில் கோபி ராதிகாவிடம் ரொமான்ஸ் ஆக பேச அப்போது ராதிகா, கோபி இடம் உங்க அப்பாவும் இனியாவும் பாக்யாவின் கேண்டின் திறப்பு விழாவிற்கு போவதற்காக கிளம்பிட்டு இருக்காங்க. ஊரே அதை பத்தி தான் பேசிக்கிட்டு இருக்காங்க என்று கூற, அதற்கு கோபி அப்பா போனால் போகட்டும் ஆனால் நான் இனியாவை விட மாட்டேன் என்று சொல்கிறார். அதே நேரத்தில் இனியாவும் ராமமூர்த்தியும் கிளம்பி வர இனியாவை நீ அங்க போகக்கூடாது டாடி உன்னை வேற இடத்துக்கு கூட்டிட்டு போறேன். 10 நிமிஷம் வெயிட் பண்ணு என்று சொன்னதால் ராமமூர்த்தி மட்டும் கிளம்பி செல்கிறார்.

கெஞ்சும் பாக்கியா
பிறகு பாக்யா வீட்டிலிருந்து எல்லாரும் திறப்பு விழாவிற்கு கிளம்பி கொண்டிருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி மட்டும் வரமாட்டேன் என்று அடப்பிடிக்கிறார். பாக்கியா காலில் விழுந்து கெஞ்சுகிறார். அத்தை நீங்க இல்லை என்றால் எனக்கு சந்தோஷம் இருக்காது. தப்பு பண்ணினால் திட்டுங்க, பேசாமல் கூட இருங்க ஆனால் வராமல் விட்டுறாதீங்க என்று கெஞ்சி கொண்டிருக்கிறார். அருகில் இருந்த எழிலும் சப்போட்டாக கெஞ்ச, ஈஸ்வரி இருவர் மீதும் கோபத்தோடு நான் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். அப்போது ராமமூர்த்தி அவா வரவில்லை என்றால் நீ விட்டுவிடு இவ்வளவு கெஞ்சிய பிறகும் அவள் வரவில்லை என்றால் நீ வா நாம போகலாம் என்று அங்கிருக்கும் அனைவரையும் கூட்டிக்கொண்டு செல்கிறார்.

ராதிகாவுக்கு கிடைக்கும் ஏமாற்றம்
அடுத்ததாக ராதிகாவுக்கு ஆபீஸிலிருந்து போன் பண்ணி நீங்க இந்த விழாவுக்கு கண்டிப்பாக வரணும் என்று எம்டி சொல்ல, அதற்கு ராதிகா மறுத்து விடுகிறார். இருந்தாலும் அவர் வற்புறுத்தி கட்டாயம் வரணும் என்று கூறுகிறார். பிறர் பாக்கியாவின் கேண்டினை பார்த்து எல்லோருமே அதிர்ச்சி அடைகின்றனர். அதிலும் செழியன் இவ்வளவு பெரிய கேண்டினா அம்மா எடுத்து இருக்காங்க? என்று வியப்போடு ஜெனி இடம் கேட்க, அதற்கு ஜெனி செழியனை கலாய்க்கிறார்.

இனியாவின் பதிலடி
அடுத்ததாக இனியாவும் கோபியும் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது இனியா பேசாமல் அமைதியாக இருக்க கோபி, ராதிகா பாவம்லா? ஏற்கனவே தாத்தாவும் பாக்யாவின் கேட்டரிங் திறப்பு விழாவுக்கு போயிட்டாங்க, நீயும் போனால் அவளுக்கு கஷ்டமாக தானே இருக்கும். அதான் உன்னை போக விடலை என்று சொல்ல, இனியா அப்போ அவங்க தான் உங்களுக்கு முக்கியம் நான் முக்கியம் இல்லையா? என்ன பத்தி எல்லாம் உங்களுக்கு கவலையே இல்லை என்று கோபப்பட்டு காரில் இருந்து இறங்குகிறார். கோபி இனியாவை சமாதானம் செய்ய முயற்சி செய்ய, இனியா அம்மா பங்ஷனுக்கு போகணும். என்னை கூட்டிட்டு போங்க. உங்களை எனக்கு பிடிக்கவே இல்லை, நீங்க நல்லவரு நினைச்சேன். ஆனால் அப்படி இல்லை என்று சொல்ல, கோபி வேறு வழி இல்லாமல் இனியாவை பங்க்ஷனுக்கு அனுப்ப ஓகே சொல்கிறார். பிறகு எல்லோரும் விவரமா தான் இருக்காங்க. நீ தான் முட்டாளா இருக்காடா கோபி என்று தனக்குத்தானே புலம்பி கொண்டிருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications