ராதிகா வேலைக்கு ஆப்பு வைத்த பாக்கியா..பழனிச்சாமி கேட்ட கேள்வி..கடுப்பாகும் ஈஸ்வரி..திடீர் திருப்பம்
சென்னை: பாக்கியாவை ராதிகா ஆபீஸில் காக்க வைத்து அவமானப்படுத்த பாக்கியா கோபம் ஆகிறார்.
அங்கு வரும் எம்டி இடம் ராதிகாவை பற்றி பாக்கியா போட்டு கொடுக்க ராதிகா மன்னிப்பு கேட்கிறார்.
பாக்கியா சோகமாக இருப்பதை பார்த்து அதற்கு காரணம் ராதிகா தான் என்று தெரிந்து ஈஸ்வரி ராதிகாவை திட்டுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 23ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் பாக்கியா ஆபீஸில் ராதிகா ரூம்பிற்கு வெளியே காத்துக் கொண்டிருக்க ராதிகா வேண்டும் என்று பாக்யாவை அலட்சியம் செய்து கொண்டு அங்கே இங்கே என அழைத்துக் கொண்டிருக்கிறார்.

பின்னர் பாக்யா என்னை எதற்காக அழைத்தீர்கள் என்று மீண்டும் கேட்க சும்மாதான் உங்களை கூப்பிட்டேன். சாப்டீங்களா என்று நலம் விசாரிக்க அதனால் கடுப்பாகும் பாக்கியா எதற்காக என்னை இப்படி செய்றீங்க என்று கேள்வி கேட்க, நம்ம ரெண்டு பேருக்கும் நல்ல பாண்டிங் வர வேண்டும் என்று நான் இப்படி செய்கிறேன் என்று நக்கலாக சிரிக்கிறார். இதனால் கடுப்பாகி வெளியே வரும் பாக்கியா அப்போது செல்வி போன் பேச அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் அங்கே ஆபீஸ் எம்டி வருவதை பார்த்து அவரிடம் சார் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்ல, என்ன பேச வேண்டும் சொல்லுங்க என்று அவரும் கேட்க கேண்டினில் ராதிகா அடிக்கடி இது நல்லா இல்ல, அது நல்லா இல்லன்னு சொல்லிகிட்டே இருக்காங்க. இதெல்லாம் பொறுத்துக்கிட்டு தான் நான் இருந்தேன்.. இதெல்லாம் சின்ன சின்ன விஷயங்களுக்காக கோவப்படக்கூடாதுன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.
ஆனால் இன்று என்னை வெயிட் பண்ண வச்சு காலையில என்ன சமைச்சீங்க என்று என கேள்வி கேட்கிறாங்க என்று சொல்ல, அப்படி எல்லாம் செய்றவங்க ராதிகா கிடையாது என்று எம்டி சொல்ல, செய்கிறார்களே சார் என்று பாக்கியா சொல்ல நான் பேசுறேன் என்று ராதிகாவை போனில் வர வைத்து ராதிகாவிடம் விசாரிக்கிறார்.
ராதிகா ஆரம்பத்தில் இல்லை சார் நான் எதுவும் தப்பாக பேசவில்லை என்று சொல்ல, உங்களுக்கு இருக்கும் பர்சனல் கோபங்களை இங்கே காட்டக்கூடாது என்று ராதிகாவை எம்டி திட்ட பிறகு ராதிகா மன்னிப்பு கேட்டுவிட்டு இனி அப்படி செய்ய மாட்டேன் என்று கூறிக்கொண்டு வெளியே வருகிறார். வெளியே பாக்யாவிடம் என்ன போட்டு கொடுக்கிறீங்களா என்று கேட்கிறார்.
நீங்க பண்ற டார்ச்சர் எல்லாம் பொறுத்துக்கிட்டு இருக்கிறதுக்கு எனக்கு தேவையில்ல. சார் சொன்னதை கேட்டீங்க இல்ல இனிமே நீங்க ஏதாவது வம்பு பண்ணுனா என்னோட அடி பயங்கரமா இருக்கும் என்று கோபமாக பேசிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அடுத்ததாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு வந்த பாக்யா சந்தோஷமாக இருப்பதை பார்த்து எல்லோரும் என்ன என்று கேட்க, ரொம்ப நாளா முடிக்காமல் இருந்த ஒரு பிரச்சனைக்கு இன்று முடிவு வந்துவிட்டது என்று கூறுகிறார். பிறகு அங்கு இருக்கும் டீச்சர் இன்று கான்வகேஷன் ஆரம்பிக்கலாம் என்று சொல்ல பழனிச்சாமி நான் வருகிறேன் என்று ஒவ்வொரு வரிடமும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பிறகு பழனிச்சாமி பாக்கியாவிடம் இங்கிலீஷில் காலையில் என்ன சமைச்சீங்க என்று கேள்வி கேட்க, அதற்கு பதில் சொல்ல முடியாமல் முதலில் பாக்கியா திணறிக் கொண்டிருக்க பிறகு கொஞ்சம் கொஞ்சமாக யோசித்து பேசி சமாளிக்கிறார்.
அடுத்ததாக வீட்டிற்கு வரும் பாக்கியா எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா டல்லாக இருப்பதைப் பார்த்த எழில் நீ நல்லா இருக்கியா மா என்று கேட்க, நல்லாத்தான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க மீண்டும் மீண்டும் துருவி கேட்டுக் கொண்டிருக்க, ஆபீஸில் ராதிகா செய்ததை பற்றி பாக்கியா சொல்ல இன்னைக்கு ராதிகா வரட்டும் நான் பார்த்துக்கொள்வேன் என்று ஈஸ்வரி கோபமாக திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications