அமிர்தாவை தேடி வந்த கணேசன்.. மறுபக்கம் மாலினி வீட்டில் சிக்கிய செழியன்.. பாக்யா சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 30ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் செழியன் வீட்டிற்கு வராமல் மாலினி வீட்டில் இருப்பது பற்றி பாக்யாவுக்கு தெரிய வருகிறது.

அதே நேரத்தில் பாக்யா கேட்டரிங் விஷயத்தில் தோற்றுப் போனதை வைத்து கோபி அவமானப்படுத்த கடைசியில் அவருக்கு பாக்யா பதிலடி கொடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா சோகமாக உட்கார்ந்து இருக்க, வெளியே போயிட்டு அமிர்தாவும் எழிலும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது எழில் பாக்கியாவிற்கு ஆறுதல் கூறி சாப்பிட வைக்கிறார். இனி வீட்டு கஷ்டம், பண விஷயத்தை பற்றி கவலைப்படாதம்மா நான் இருக்கிறேன். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என்று எழில் சொல்லிக் கொண்டிருக்க அதற்கு பாக்கியா சந்தோஷப்படுகிறார்.

அதைத்தொடர்ந்து கணேசன் அமிர்தாவை தேடி சென்னைக்கு போனதால் அவருடைய பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதோடு இந்த பிரச்சினையை பற்றி அமிர்தாவிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து செழியன் மாலினியுடன் அவருடைய வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
அப்போது பாக்கியா செழியனுக்கு போன் செய்கிறார். அப்போது செழியனிடம் எங்கே இருக்கிறாய் என்று பாக்யா கேட்க, அதற்கு நான் ஆபீஸில் தான் இருக்கிறேன் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் மாலினி வந்து தண்ணீர் வேண்டுமா என்று செழியனிடம் கேட்க, அந்த குரல் பாக்யாவிற்கு கேட்டு விடுகிறது. அதற்கு பாக்யா செழியனை நீ உடனடியாக வீட்டுக்கு வரவேண்டும் என்று சொல்கிறார்.

பிறகு செழியன் வீட்டிற்கு வந்து விட உனக்கு ஒரு பொண்டாட்டி இருக்கா, குழந்தை வரப்போகுது அதை எல்லாம் மறந்துடாத. நான் ஏற்கனவே கேள்வி கேட்காமல் விட்டு தான் என்னுடைய நிலைமை இப்படி ஆயிடுச்சு. நீ என்னுடைய மூத்த மகன் உன்னுடைய கடமையை மறந்துடாத என்று அட்வைஸ் கொடுக்கிறார். அதற்கு செழியன் நான் எந்த தப்பும் பண்ணலாமா என்று சமாளித்துவிட்டு அந்த இடத்தை விட்டு போகிறார்.

அதைத் தொடர்ந்து அடுத்த நாள் பாக்கியா தெருவில் சென்று கொண்டிருக்கும்போது கோபி வந்து நக்கல் அடிக்கிறார். அப்போது பாக்கியா இப்படியே என்னுடைய நிலைமை இருந்திடாது. கண்டிப்பா என்னுடைய நிலைமை மாறும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு கேண்டின் கைவிட்டுப் போயும் பாக்கியாவிற்க்கு திமிர் மட்டும் குறையவில்லையே என்று கோபி நக்கல் அடித்து விட்டு அந்த இடத்தை விட்டு போகிறார். அப்போது பாக்கியாவும் செல்வியும் யோசித்தபடி நிற்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications