பொய் சொல்லி மாட்டிக்கொள்ளும் செழியன்..நடு ரோட்டில் பாக்யாவுக்கு வந்த பெரிய பிரச்சனை..திடீர் டுவிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 4 ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

இதில் இனியாவை ட்ரிப்புக்கு கூட்டிட்டு போய்க் கொண்டிருந்த பாக்யாவிற்கு நள்ளிரவு நேரத்தில் நடுரோட்டில் பிரச்சனை வருகிறது.

Baakiyalakshmi Serial 2023 September 4th Episode full update

அதுபோல செழியன் மாலினி உடன் இருந்து கொண்டு வீட்டில் இருப்பதாக பாக்யாவிடம் பொய் சொல்ல பாக்கியாவிற்கு சந்தேகம் ஏற்படுகிறது.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஹோட்டலில் செல்வி, பாக்கியா, ஈஸ்வரி, இனியா நான்கு பேரும் சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது சாப்பாடு வருவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் என்று சொன்னதால் நான் அதற்குள் வீட்டிற்கு போன் செய்து விட்டு வருகிறேன் என்று பாக்கியா அந்த இடத்தை விட்டு தள்ளி வந்து செழியனுக்கு போன் செய்கிறார்.

அப்போது செழியன் மாலினியுடன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதால் போனை அட்டென்ட் பண்ணாமல் கட் பண்ணி விடுகிறார். அதைத்தொடர்ந்து வீட்டில் எழிலும் அமிர்தாவும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்க அந்த நேரத்தில் ராமமூர்த்தி அங்கே வர இதை பார்த்ததும் பதறிப்போன ராமமூர்த்தி அங்கிருந்து கிளம்பும், அந்த நேரத்தில் பாக்யா போன் பண்ணுகிறார்.

பிறகு எழில், ராமமூர்த்தி அமிர்தாவிடமும் பாக்யா டிரைவர் பாதியிலே விட்டுவிட்டு போய்விட்டதை சொல்லி, அதற்குப் பிறகு நான் தான் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லுகின்றார். அதை கேட்டு அமிர்தாவும் ராமமூர்த்தியும் ஆச்சரியப்படுகின்றனர். பிறகு பேசிக் கொண்டிருக்கும் போது செழியன் வீட்டில் இருக்கிறானா? என்று கேட்க இல்லை, இங்கு வரவில்லை. ஜெனி வீட்டுக்கு எதுவும் போயிருப்பான்னு நினைக்கிறேன் என்று எழில் சொல்கிறார்.

அந்த நேரத்தில் மாலினி எதுக்காக போனை கட் பண்ணீங்க. ஏதாவது அவசரமா இருக்க போகுது. உங்க அம்மாகிட்ட என்னன்னு கேளுங்க என்று சொல்ல, செழியன் பாக்கியாவுக்கு போன் பண்ணுகிறார். பிறகு வீட்டுக்கு சீக்கிரமா போ என்று சொல்ல செழியன் நான் வீட்டில் தான் இருக்கிறேன் என்று ஏமாற்றுகிறார். இதை கவனித்த பாக்கியா செழியன் சொல்லும் பொய்யை பற்றி யோசிக்கிறார்.

அதைத்தொடர்ந்து பெட்ரூமில் அமிர்தா யோசித்துக் கொண்டிருக்க எழில் என்னாச்சு என்று விசாரிக்க, அமிர்தா ஒன்றும் இல்லை என்று சொல்லிவிடுகிறார். அதைத் தொடர்ந்து அமிர்தாவின் அத்தை மாமாவுக்கு எழில் போன் செய்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய மகனின் நினைவு நாள் என்று சொல்ல, அவர்களை எழில் சமாதானப்படுத்துகிறார். அதைத்தொடர்ந்து அமிர்தாவையும் சமாதானப்படுத்தி விட்டு இதை நீ முன்னமே சொல்லியிருந்தால் அவர்களுக்கு நாம நேரில் போய் ஆறுதலாக இருந்திருக்கலாம் என்று எழில் பேசிக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 4th Episode full update

அடுத்ததாக ஃபங்ஷன் முடிந்ததும் கோபி இனியாவுக்கு போன் பண்ணி பேசுகிறார். அப்போது இனியா ரூமுக்கு போயிட்டு இருக்கோம் என்று சொல்ல, இனிதான் ரூமை தேடி பிடிக்க போறீங்களா என்று கோபி கேட்க, அதற்கு பாக்கியா ஏற்கனவே எழில் ரூம் புக் பண்ணிட்டான் நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம் என்று பாக்கியா சொல்வதைக் கேட்டு கோபி அமைதி ஆகிறார்.

பிறகு கோபி போனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ராதிகா எப்ப பாத்தாலும் நீங்க அவங்க கிட்ட போன் பேசிக்கிட்டே இருக்கீங்க 0 உங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று திட்டுகிறார். அடுத்ததாக எல்லோரும் காரில் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று கார் ரோட்டில் நின்று விடுகிறது.

என்ன ஆச்சு என்று தெரியவில்லையே என்று பாக்கியா சொல்ல, ஈஸ்வரி கோபிக்கு போன் போடுகிறேன் என்று சொல்ல, அதுவெல்லாம் வேண்டாம் என்று பாக்கியா சொல்லி நானே பார்த்துக்கொள்கிறேன் என்று வண்டியை விட்டு இறங்குகிறார். அப்போது எல்லோரும் கீழே இறங்கி பார்க்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

அதைத்தொடர்ந்து அங்கு ஒரு நபர் ஹெல்மெட் அணிந்தபடி இவர்களை முறைத்து பார்த்தபடி ரோட்டில் நிற்கிறார். இப்படியாக நாளைக்கு ஆனா ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+