நடிகர் அஜித்குமார் இப்படிப்பட்டவர் தான்..என் கண்ணாலே பார்த்தேன்..உண்மையை உடைத்த சீரியல் நடிகர்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் நண்பனாக நடித்து வரும் நடிகர் அரவிந்த் நடிகர் அஜித்குமார் பற்றி பல தகவல்களை கூறியிருக்கிறார்.
நடிகர் அஜித்குமார் உடன் இணைந்து நடித்த அரவிந்த் அதற்கு முன்பே தனக்கு அஜித்குமார் பற்றி தெரியும் என்றும் கூறியிருக்கிறார்.
செய்த உதவி அடுத்தவர்களுக்கு தெரியாமல் செய்வதில் அஜித் குமார் போல யாரும் இல்லை என்று அரவிந்த் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் அவ்வளவு எளிதாக சின்னத்திரை ரசிகர்கள் மறந்து விட முடியாது. அந்த அளவிற்கு இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் மூலம் தான் பல நடிகர்கள் பிரபலமானார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் அரவிந்த்.
இந்த சீரியலில் கதாநாயகன் பிரகாஷின் அண்ணன் ராஜு கேரக்டரில் அரவிந்த் நடித்திருப்பார். அந்த கேரக்டரோடு ஒன்றி போன அவரை அதிகமான ரசிகர்கள் திட்டியும் பாராட்டியும் இருக்கின்றனர். இவர் எப்போது எப்படி மாறுவார் என்று கணிக்க முடியாத நிலையில் தான் அந்த சீரியலில் இவருடைய நடிப்பும் கேரக்டரும் இருந்தது.

இந்த நிலையில் பல வருடங்களாக சீரியலில் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் நண்பனாக அறிமுகமாகி இருக்கிறார். ஒரு சில எபிசோடுகளில் மட்டுமே இவருடைய சீன்கள் இருந்தாலும் இவர்தான் அடுத்த கோபி என்று இவரை பற்றி பல செய்திகளும் ஆரம்பத்தில் பரவி வந்தது.
இந்த நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து வீடியோ ஒன்றில் பல தகவல்களை கூறி இருக்கிறார். அதில் நடிகர் அஜித் குமார் பற்றியும் பேசி இருக்கிறார். நடிகர் அஜித்குமாரோடு இவர் கண்டு கொண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அதற்கு முன்பே எனக்கு அஜித்குமாரை நன்கு தெரியும். நானும் அவரும் ஒரே மெக்கானிக் செட்டில் தான் பார்த்துக் கொள்வோம்.
அப்போது அந்த மெக்கானிக் செட்டுக்கு அஜித்குமார் வந்தாலே தனியாக தெரியும். பைக்கை உர்..உர்... என்று உறுமியபடி வருவார். அதில் சைலன்சரை அப்படி மாற்ற வேண்டும் இதை இப்படி மாற்ற வேண்டும் என்று கூறுவர். இவருடைய தனித்துவம் அப்போதே தெரியும். யாருக்கு உதவி என்றாலும் செய்யும் ஒரு நல்ல குணம் அஜித்திடம் நிறையவே இருக்கிறது. அஜித் திருமணத்திற்கு எனக்கு இன்விடேஷன் கொடுத்திருந்தார்கள். நான் திருமணத்திற்கு போனேன் அப்போது என்னை கட்டிப்பிடித்து வரவேற்றார். எனக்கு அந்த நாளை மறக்கவே முடியாது என்று கூறியிருக்கிறார்.

அதுபோல சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது கூட அவரிடம் உதவி என்று யார் கேட்டாலும் அவர் உடனே செய்வதை நானே கண்ணால பார்த்திருக்கிறேன். லைட் மேன் என அவரோடு வேலை செய்யும் யார் மகளுக்கு திருமணம், அக்கா தங்கச்சிக்கு திருமணம் என்றும் படிப்பு செலவுக்கு ஆகவும் உதவி கேட்டாலும் உடனே செய்வார். ஆனால் இந்த கையில் செய்யும் உதவி அந்த கைக்கு தெரியக்கூடாது என்று அடக்கமாக வைத்துக் கொள்வார். யாரிடமும் அதைப்பற்றி கூறவே மாட்டார். கூட இருப்பவர்களுக்கு கூட தெரியாது அந்த அளவிற்கு எளிமையாக வைத்துக் கொள்வார்.
இப்போது நடிப்பில் அதிகமாக கவனத்தை செலுத்தாமல் அவருடைய ஃபேஷன், கனவான பைக் ரைடில் உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறார். அது அவருடைய தனித்துவமும் அவருடைய விருப்பமும் எப்போதும் நான் வியந்து பார்க்கும் ஒரு கேரக்டராக தான் அஜித்குமார் இருந்து வருகிறார் என்று பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோவை அஜித்குமாரின் ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications