மறவாத பாசம்.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகை தன் மகளுக்கு வைத்த சூப்பர் பெயர்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரித்திகா தன்னுடைய மகளுக்கு பெயர் சூட்டும் விழா கொண்டாடி இருக்கிறார். அப்போது தன்னுடைய மகளுக்கு தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பெயரை சூட்டி இருக்கிறார். அதை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
பொதுவாக ஒரு சில நடிகைகளை பார்க்கும் போது தான் பார்த்ததும் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு உணர்வு ஏற்படும். அதுபோன்ற நடிகை தான் ரித்திகா. இவர் விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்திருக்கிறார். அதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக வந்து அசத்தி இருந்தார்.

அது மட்டும் அல்லாமல் ராஜா ராணி சீரியல் மூலமாகத்தான் இவர் நடிகையாக அறிமுகமானார். ராஜா ராணி சீரியலில் முதல் பாகத்தில் சஞ்சீவ் தங்கை கேரக்டரில் தான் ரித்திகா நடித்திருந்தார். அந்த சீரியல் முடிவடைந்த பிறகு விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த சீரியலில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்தார். அமிர்தாவை எழில் காதலித்து பல போராட்டங்களுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்வார். தன்னுடைய மகள் நிலா மீது அதிகமான பாசம் வைத்த ஒரு அம்மாவாக அந்த சீரியலில் ரித்திகா நடித்திருந்தார்.

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் ரித்திகாவிற்கு திருமணம் நடந்தது. அவருடைய கணவர் விஜய் டிவியில் தான் பணியாற்றி வருகிறார். இருவரும் காதலித்த திருமணம் செய்து கொண்டாலும் திருமணத்திற்கு பிறகும் பாக்கியலட்சுமி சீரியலில் ரித்திகா நடித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். அதற்கான காரணம் கூட அவர் கூறவில்லை. அதற்கு பிறகு நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்த சட்டம் என் கையில் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை சமீபத்தில் பிறந்திருக்கிறது.

குழந்தையின் புகைப்படத்தை சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். நேற்று அந்த குழந்தைக்கு பெயர் சூட்டு விழா கொண்டாடி இருக்கிறார். அப்போது அந்த குழந்தைக்கு வைத்த பெயரையும் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

அதாவது அவருடைய குழந்தைக்கு "நிலா" என்ற பெயர் சூட்டி இருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் அவருடைய குழந்தையின் பெயர் நிலா என்பதால் அதையே தன்னுடைய நிஜ குழந்தைக்கு வைத்திருக்கிறார் என்று இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications