பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் சொதப்பல்.. கோபிக்கு மட்டும் இதே நிலைமையா? ஏன் இந்த கலவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் பத்தாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்க போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் செழியன் மீது ஜெனி அளவுக்கு அதிகமாக சந்தேகப்படுகிறார். அதே நேரத்தில் கோபி முன்பு பாக்யா மொத்த குடும்பத்திற்கும் சூப்பராக சமையல் செய்து அசத்த கோபி பொறாமையில் வெந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் செழியன் லேட்டாக வந்ததால் ஜெனி கோபத்தில் வேலை சென்று இருந்த நிலையில் மேலே வந்த செழியனிடம் ஜெனி கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். லேட் ஆகுச்சுனா ஒரு போன் பண்ணி சொல்ல மாட்டியா? உண்மையாவே நீ ஆபீஸ்ல தான் இருந்தியா? இல்ல வெளியே வேற யாரையாவது பார்க்க போயிட்டு வரியா? என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க செழியன் அமைதியாக சமாளிக்கிறார்.

Baakiyalakshmi Serial April 10th promo and episode full update

அடுத்ததாக எல்லோரும் சாப்பிட உட்கார வைத்து பாக்கியா சப்பாத்தி, சிக்கன் கிரேவி, சிக்கன் 65, பன்னீர் மசாலா என விதவிதமாக சமைத்து கொடுக்கிறார். அந்த நேரத்தில் ராதிகா மயூவை பார்க்க சென்று இருப்பதால் கோபி தனியாக உட்கார்ந்து இருக்கிறார். எல்லோரும் சப்பாத்தி சிக்கன் 65 என்று விதவிதமாக சாப்பிடுவதை வேடிக்கை பார்த்து எச்சி ஊறுகிறார். மறுபக்கத்தில் இனியா லெக் பீஸ் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிட கோபி டாடி பாவம்டா என்று புலம்பி கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் ராதிகா வீட்டிற்கு வருகிறார். அதோடு மயூ என் கூட சாப்பிடணும்னு சொல்லி ஆசைப்பட்டா அதனால அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்துட்டேன் உங்களுக்கும் கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்லி கோபியிடம் பேக்கை கொடுக்க, கோபி பேக்கை வாங்கி மோப்பம் பிடிக்க, மசாலா வாசனை வருது. அப்போ ஓட்ஸ் இல்ல என்று சந்தோஷப்படுகிறார். பிறகு ராதிகா பௌலை எடுத்துட்டு வந்து பேக்கை ஓபன் பண்ண கோபி என்ன சமையல் என்று கேட்க, ராதிகா ஓட்ஸ் என்று சொல்ல கோபி ஷாக் ஆகிறர்.

அதை பார்த்து ராமமூர்த்தி கோபியை வெறுப்பேற்றிக் கொண்டே சாப்பிடுகிறார். அப்போது பாக்யா நாளைக்கு பழனிச்சாமி சாருக்கு பிறந்தநாள் என்பதால் ஸ்வீட் செஞ்சு இருக்கிறேன் என்று சொல்லி ஸ்வீட்டை கொடுக்க இதை பார்த்து கோபி அவருக்கு பிறந்தநாள் என்றால் இவ எதுக்கு ஸ்வீட் செய்யணும் என்று புலம்பி கொண்டிருக்க, அதற்கு ராதிகா அடுத்த வீட்டு விஷயத்தில் நீங்க எதுக்கு மூக்கை நுழைக்கிறீங்க என்று திட்டுகிறார்.

அதற்கு கோபி இது என்னுடைய குடும்பம் என்று சொல்ல, அதற்கு ராதிகா இன்க்ளூடிங் பாக்கியாவுமா? என்று கேட்க, அதற்கு கோபி இல்ல எஸ்க்ளூடிங் பாக்கியா என்று பதில் கொடுக்கிறார். இதனால் கோபமான ராதிகா உங்களுக்கு போய் சாப்பாடு செஞ்சி கொண்டு வந்தேன் பாருங்க என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த மசாலா ஓட்ஸை பிடிங்கி கொண்டு போகிறார்.

பிறகு செழியன் தூங்கியதும் ஜெனி அவருடைய போனை எடுத்து மெசேஜை பார்த்து கொண்டிருக்கும் போது ஒருவருக்கு செழியன் டியர் என்று அனுப்பி இருப்பதால் செழியனை எழுப்பி யார் அவர் என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, செழியன் அது என்னுடைய பிரண்ட் விஷ்ணு அவனுக்கு டன் என்று அனுப்புவதற்கு பதிலா டியர் என்று அனுப்பி இருக்கிறேன் என்று சொல்ல அதை ஜெனி நம்ம மறுக்கிறார்.

பிறகு இரண்டு மணிக்கு அந்த பிரண்ட் விஷ்ணுவுக்கு போன் போடு என்று சொல்ல, அதற்கு செழியன் காலையிலேயே போடுறேன் என்று சொல்லி படுத்து தூங்குகிறார். ஆனால் ஜெனி காலை வரை தூங்காமல் இங்கும் அங்கும் நடந்து கொண்டே இருக்கிறார். செழியன் எழுந்ததும் முதல் வேலையாக அந்த நண்பருக்கு போன் போட சொல்கிறார்.

சரி என்று செழியன் போன் போட அவருடைய நண்பர் விஷ்ணு போனை எடுத்து பேச அதற்கு பிறகு நிம்மதியாகிய ஜெனி, நான் கொஞ்ச நேரம் தூங்குகிறேன். நீ பாப்பாவ பாத்துக்கோ என்று படுத்துக் கொள்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+