எழில் வீட்டை விட்டுபோனது இதற்காக தான்.. ஈஸ்வரி சொன்ன வார்த்தை.. தவிக்கும் பாக்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் பாக்யா சொன்ன வார்த்தையை கேட்டு எழில் எடுத்த முடிவை கேட்டு ஈஸ்வரி கதறி அழுகிறார்.
இந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் எழில் வீட்டை விட்டு கிளம்ப பெட்டியோடு வெளியே வர இனியா நீ வீட்டை விட்டு வெளியே போறியா அண்ணே என்று அழுகிறார். அதற்கு எழில் இனியாவை சமாதானம் செய்கிறார். பிறகு செழியன், ராமமூர்த்தி என எல்லோரும் எழிலை தடுக்க எழில் தான் வீட்டை விட்டு கிளம்புவதில் உறுதியாக இருக்கிறார். அதோடு ஈஸ்வரியிடம் உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என்று சொல்லி கண் கலங்குகிறார்.

ஈஸ்வரியும் நான் உன்னை வீட்டைவிட்டு வெளியே போக சொல்லல. சொல்லுறதை கேட்டு நடந்துக்கோ என்றுதானே சொல்கிறேன் என்று சொல்லி அழுது கொண்டு இருக்க, அதைத்தான் என்னால் இப்போது கேட்க முடியாதே என்று அழுது கொண்டிருக்கிறார். பிறகு ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி எழிலை கட்டிப்பிடித்து அழுகிறார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு பாக்கியா கிச்சனில் கண்கலங்கி நிற்கிறார்.
அப்போது ஈஸ்வரி என் மீது பழி விழ வேண்டும் என்று தானே நீ இப்படி பண்ற. கை குழந்தையோட வீட்டை விட்டு துரத்திட்ட என்று பெயர் எனக்கு வரவேண்டும் என்று தானே இப்படி செய்கிற.. நீ போகக்கூடாது என்று சொல்லி ரூமுக்குள் சென்று கதவை பூட்டி கொள்கிறார். பிறகு எழில் பாக்யாவிடம் சென்று நீ போக சொல்லிட்டலம்மா நான் போறேன் மா என்று கண் கலங்க பாக்கியா எழில் அமிர்தா நிலாவை கட்டிப்பிடித்து விட்டு மறுபடியும் எழிலை வீட்டை விட்டு போக சொல்கிறார்.
சிறகடிக்க ஆசை: மனோஜ் கேட்ட கேள்வி.. ரோகிணி மீது சந்தேகப்படும் விஜயா.. முத்து உடைத்த ரகசியம்
பிறகு செழியனிடம் குழந்தையை நன்றாக பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு அமிர்தா மற்றும் குழந்தையை கூட்டிக்கொண்டு எழில் வீட்டை விட்டு வெளியேறுகிறார். எல்லோரும் எழில் கிளம்பி போனதை நினைத்து வாசலில் நின்று அழுது கொண்டிருக்கும் போது ரூமிற்குள் இருந்த ஈஸ்வரி வெளியே வந்து எழில் போயிட்டானா? அவனை போக விட்டுட்டீங்களா? என்று பேசியதோடு மட்டுமல்லாமல் பாக்கியாவிடம் சென்று ஏன் இப்படி செய்தாய்?
நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு. உன்னால தான் இப்போ அவன் வீட்டை விட்டு போயிட்டான் என்று மொத்த பழியையும் பாக்கியா மீது தூக்கி போடுகிறார். அதற்கு ராமமூர்த்தி உன்னால தான் அவன் இந்த வீட்டை விட்டு போக முடிவெடுத்தான். செழியனும், ஜெனியும் இன்னொரு குழந்தை பெத்துக்க ரெடி ஆகிட்டாங்க என்பதற்காக நீ எழில் அமிர்தாவை வார்த்தைகளால் காயப்படுத்தினால் அவர்கள் எத்தனை நாளைக்கு தான் இதை தாங்கிக்கிட்டு இங்க இருப்பாங்க என்று திட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications