Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக்கியலட்சுமி சீரியல் சொதப்பல்கள்.. இதை கூட கவனிக்கலையா? இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியா கோபியிடம் சவால் விட்டு தன்னுடைய வீட்டை தனக்கு சொந்தமாக்க வேண்டும் என்று மூன்று நாட்கள் தொடர்ச்சியாக சமையல் ஆர்டர் எடுத்து செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அந்த கல்யாண வீட்டு பங்க்ஷனில் மூன்று நாட்களுக்கு மூன்று வேளையும் 5000 சாப்பாடு சமைக்க வேண்டுமாம். ஆனால் பாக்யாவும் அவரோடு சேர்ந்த எட்டு பேரும் தான் அந்த மொத்த சமையலையும் செய்து முடிக்கிறார்கள்.

Baakiyalakshmi serial Baakiya and her eight companions finish cooking for 5000 people

இது குறித்துதான் தற்போது சமூக வலைதளத்தில் அதிகமான ரசிகர்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். அது மட்டும் எப்படி திமிங்கலம் இவங்களால எட்டு பேரால 5000 பேருக்கு சமைக்க முடிகிறது என்பது தான் பலருடைய கேள்வியாக இருக்கிறது.

விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த சீரியல்களின் வரிசையில் பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருகிறது. அதனால் தான் தற்போது சன் டிவி சீரியல்களை காட்டிலும் கடந்த வாரத்தில் நகர் புறங்களில் பாக்கியலட்சுமி சீரியல் முதல் இடத்தை பிடித்திருந்தது. ஆனாலும் இந்த சீரியலில் சில சொதப்பல்கள் இருப்பதை சீரியல் டீம் கவனிக்காமல் விட்டு விட்டார்கள் போல.

Baakiyalakshmi serial Baakiya and her eight companions finish cooking for 5000 people

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்யாவை விட்டுவிட்டு போன பிறகு தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக பாக்கியா அடுத்தடுத்து செய்யும் செயல்கள் எல்லாமே அவருடைய திறமையை வெளிக் கொண்டு வந்து பலருக்கும் முன்மாதிரியாக இருந்து வருகிறது. அதனாலயே இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பும் பிரபலமும் அடைந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும் சில நேரங்களில் பாக்யாவை டாப்பில் காட்ட வேண்டும் என்பதற்காக சில அபத்தமான செயல்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள். கோபி பாக்கியா எனக்கு வேண்டாம் என்று விவாகரத்து செய்யும்போது பாக்கியா எனக்கு நஷ்ட ஈடு வேண்டும் என்று கேட்டிருந்தால் தற்போது அவர் இருக்கும் வீடு பாக்யாவிற்கு வந்து சேர்ந்திருக்கும் ஆனால் அது வேண்டாம் என்று பாக்யா மறுத்துவிட்டார்... சரி அப்படி வேண்டாம்னு சொன்னது கூட தன்மானத்திற்காக என்று சொல்லலாம்.

Baakiyalakshmi serial Baakiya and her eight companions finish cooking for 5000 people

ஆனால் இப்போது தன்னுடைய மொத்த குடும்பத்தோடு பாக்யா இருக்கும் வீட்டிற்கு எனக்கு பணம் வேண்டும் என்று கோபி கேக்கும் போது கூட தன்னுடைய மகன்கள் தனக்கு கொடுக்கும் பணத்தை கூட எனக்கு வேண்டாம் என்று பாக்யா சொல்வது தான் கொஞ்சம் "ஓவராக" இருக்கிறது. ஏற்கனவே செழியன் வீட்டில் சாப்பாட்டிற்கும் எந்த செலவுகளுக்கும் பணம் செலவழிப்பதே கிடையாது. இப்படி ஒரு பிள்ளைகளை தற்குறியாக மாற்றுவது தான் ஒரு தாய்க்கு அழகா?

ஒவ்வொரு இடத்திலும் எழில் அம்மாவுக்கு சப்போர்ட்டாக இருக்கிறார். ஆனால் இப்போது பண விஷயத்திலும் எழிலின் உதவியும் பாக்கியா பெறப்போவதில்லை என்று கூறியிருக்கிறார். எழில் என்னால் முடிந்ததை நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் பிள்ளைகளை பொறுப்பாளராக ஆக்காமல் எல்லா சுமைகளையும் தன்னுடைய தலையிலே தூக்கி போட்டுக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi serial Baakiya and her eight companions finish cooking for 5000 people

இதை பார்க்கும் பெண்களும் மொத்த குடும்ப சுமையையும் தன்னுடைய தலையில் தூக்கி வைத்து இருப்பவர்தான் கதாநாயகி என்று வீட்டு பிரச்சனைகளை எல்லாம் தூக்கி வைத்துக் கொண்டு தேவை இல்லாத மன கஷ்டங்களை சுமந்து விட கூடும் என்றும் என்ன தோன்றுகிறது. சரி அதை விடுவோம் இப்போ கதைக்கு வருவோம். என்னன்னா பாக்கியா பாண்டிச்சேரியில் சமையல் பண்ண போயிருப்பது பெரிய இடமாக இருக்கிறது.

பணக்கார வீட்டு பங்க்ஷனுக்கு அதுவும் ஒரு நேரத்துக்கு 5000 பேருக்கு சமையல் செய்வதற்கு பாக்கியா கூட கூட்டிட்டு போய் இருக்குது எட்டே பேரு..!? அதுபோல அவர்கள் இருந்து சமையல் செய்யும் இடத்தில் அங்கே இங்கே எந்த ஒரு சின்ன காய்கறிகள் கழிவுகள் கூட இல்லை. இதுதான் பெரிய சாதனையாக இருக்கிறது. சும்மா நம்ம வீட்டுல பெண்கள் காலையில் கிச்சனில் வேலை பார்க்கும் போது அங்கே அல்லப்பட்டு வீடு அலங்கோலமாக மாறிவிடும். இரண்டு மூன்று பேருக்கு சமையல் செய்யும்போதே அந்த நிலைமை என்றால் இங்கு 5000 பேருக்கு சமையல் அப்புறம் எப்படி இருக்கும்னு நினைச்சு பாக்கணும்.

என்ன இருந்தாலும் சீரியலில் லாஜிக் பார்க்கக் கூடாது என்று இதையெல்லாம் கண்ணில் பட்டாலும் மனதிற்க்கும் பேசிக் கொண்டு தான் ஆக வேண்டும் ஆனாலும் 3 நாள் சமையலில் 18 லட்சம் ரூபாய் கிடைத்து கிடைத்து விடுமா? என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது. அப்படி எந்த சமையல்காரர்களுக்காவது மூன்றே நாளில் சமையலுக்கு 18 லட்சம் ரூபாய் கிடைத்தால் பல சமையல்காரர்கள் இங்கே கோடீஸ்வரர்கள் ஆகிவிடுவார்களே

அதுபோல இன்னொரு சந்தேகமும் இருக்கு பாக்கியா தன்னிடம் வேலை பார்க்கும் மொத்த பேரையும் கல்யாண வீட்டு பங்க்ஷனுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. இனி ஈஸ்வரி கேட்டரங்கில் சமைத்துக் கொண்டு இருப்பது யாராக இருக்கும்? அந்த ராதிகா கேண்டினில் சமையலுக்கு ஆள் ரெடி பண்ணிட்டு வந்து இருக்கிறாரா? என்று அடுக்கடுக்கான கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழுந்து கொண்டிருப்பது கமெண்ட்களில் தெரிகிறது. என்ன இருந்தாலும் இது சீரியல் என்பதை மனதில் வைத்துக் கொண்டு மனதை தேற்றிக்கொண்டு கதையை மட்டும் கவனித்து கருத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சீரியல் அணியினர் சொல்லாமல் சொல்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+