பாக்கியலட்சுமி: ராதிகாவிடம் கோபி சொன்ன வார்த்தை.. ஈஸ்வரிக்கு பாக்யா கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 4ஆம் தேதிக்கான எபிசோடில், மயக்கத்தில் இருந்து கண்விழித்த கோபி ராதிகாவிடம் சொன்ன வார்த்தையை கேட்டு ராதிகா அதிர்ச்சியில் இருக்கிறார். அதே நேரத்தில் ஈஸ்வரியும் ராதிகாவை பாடாய்படுத்துகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி சில மாதங்களுக்கு முன்பு ராதிகாவின் அம்மா தன்னை ஜெயிலுக்கு அனுப்பி விட்டார் என்று ராதிகா மீதும் கோபி மீதும் கடும் கோபத்தில் இருந்தார். கோபி என்னுடைய பிள்ளையே கிடையாது என் மீது தப்பு இல்லை என்று நம்பியது பாக்கியா தான். அதனால் இனி பாக்யா பக்கம் தான் நான் நிற்பேன் என்று சவால் விட்டிருந்தார்.

தன்னுடைய புருஷன் இறந்தபோது கூட கோபியை கொள்ளி வைக்க விடவில்லை. ஆனால் கோபி இப்போது ஹாஸ்பிடலில் இருக்கிறார் என்றதும் மீண்டும் பழையபடி மாறிவிட்டார். கோபியை பார்ப்பதற்காக ராதிகா ஹாஸ்பிடலுக்கு வர ஈஸ்வரி பார்க்க விடாமல் தடுக்கிறார். எங்க அப்பா இங்கேதான் நிம்மதியா இருக்காங்க இங்கேயும் வந்துட்டீங்களா என்று இனியாவும் ராதிகாவிடம் வாக்குவாதம் செய்கிறார்.
ராதிகா ஒருமுறை அவரை பாத்துட்டு போயிடுறேன் என்று கெஞ்சி கொண்டிருக்க, அதற்கு ஈஸ்வரியும் இனியாகவும் விடாமல் தடுக்கிறார்கள். அந்த நேரத்தில் பாக்கியா ஈஸ்வரியை சமாதானம் செய்து சாப்பிட கூட்டிக்கொண்டு போகிறார். பிறகு இனியாவையும் மிரட்டியதால் இனியா கோபத்தில் நிற்கிறார்.

பிறகு ராதிகா கோபியை பார்க்கப் போகிறார். அப்போது கோபி கண்விழித்து பார்க்க அங்கு ராதிகா நிற்பது பாக்கியா போல தெரிகிறது. ரொம்ப நன்றி பாக்கியா, உனக்கு எவ்வளவு கெடுதல் செஞ்சேன். ஆனா நீ என்னை காப்பாற்றிருக்க.. நீ மட்டும் அங்க வரலைன்னா நான் செத்துப் போய் இருப்பேன் என்று கோபி பேச ராதிகா அதிர்ச்சியாகி நிற்கிறார்.
அந்த நேரத்தில் ஈஸ்வரி உள்ளே வந்து ராதிகாவை இழுத்துக்கொண்டு வெளியே வந்து விடுகிறார். உனக்கு எத்தனை வாட்டி சொன்னாலும் புரியாதா? அவனே இப்போ தான் செத்து பொழச்சிருக்கிறான் அவனை போய் எதுக்கு தொந்தரவு பண்ணிட்டு இருக்க நீ வெளியே போ என்று திட்டுகிறார். அப்போது அங்கு வந்த செழியனும் எதுக்கு இங்க வரீங்க கொஞ்ச நாளைக்கு அமைதியாக தான் இருங்களேன், சரியானதுக்கப்புறம் பேசிக்கலாம் என்று சொல்ல எழில் மட்டும் ராதிகாவிற்கு ஆதரவாக பேசுகிறார்.

மறுபக்கத்தில் பாக்கியா கேப் வராததால் அடுத்த கேப்புக்கு போன் பண்ணி விசாரித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஹாஸ்பிடல் விட்டு வெளியே வந்த ராதிகாவிடம் நீங்க கோபியை பார்த்தீர்களா என்று கேட்க, பார்த்தேன் ஆனா அவர் உங்களை தான் கேட்டார் என்று சொல்கிறார். அதோடு அவரைப் பார்ப்பதற்கு நான் அனுமதிச்சதுக்கு நன்றி என்று ராதிகா சொல்ல, உங்க புருஷனை பார்ப்பதற்கு எனக்கு எதுக்கு நன்றி சொல்றீங்க என்று பாக்கியா சொல்கிறார்.
இனிமே நான் இங்க இருக்க மாட்டேன். அவரை டிஸ்சார்ஜ் பண்ணிட்டு உங்க வீட்டுக்கு வந்துருவாரு கவலைப்படாதீங்க என்று பாக்கியா ஆறுதலாக பேச ராதிகா அங்கிருந்து கிளம்புகிறார். இறுதியாக பாக்கியா வீட்டில் இருக்க, அங்கு வந்த ஈஸ்வரி எதுக்காக நீ ஹாஸ்பிடலுக்கு வரல? உனக்கு கொஞ்சமாவது மனசு உறுத்தலையா? என்று பாக்கியாவை பார்த்து கேட்க, அதற்கு பாக்கியா, நான் என்ன அவருடைய பொண்டாட்டியா? அவருடைய உயிரை காப்பாற்றினேன் அவ்வளவுதான் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications