பாக்கியலட்சுமி: குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த கோபி.. இனியா செய்த குழப்பம்! பாக்யா போட்ட போடு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 6ஆம் தேதிக்கான எபிசோடில் கோபியிடம் மீண்டும் தன்னோடு வரும்படி ஈஸ்வரி கூப்பிடுகிறார். அதுபோல ராதிகாவும் தன்னோடு வரும்படி கூப்பிடுகிறார். ஆனால் அதற்கு கோபி என்ன பதில் சொன்னார் என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராதிகா கோபியிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது அங்கு வந்த ஈஸ்வரி, ராதிகா கத்தி கத்தி சண்டை போட்டுக்கிட்டே இருந்தா அதனால்தான் நான் உள்ளே விடல என்று ராதிகாவின் மீது பழியை போடுகிறார்.

உடனே நர்ஸ் வந்து திரும்பவும் பிரச்சனை ஆரம்பிச்சிட்டீங்களா? ஹாஸ்பிடல்னு தெரிஞ்சுக்கோங்க என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி இவளை முதலில் வெளியே போக சொல்லுங்க. இவ இருந்தாலே டென்ஷன் தான் என்று சொன்னதும் ராதிகா வெளியே சென்று விடுகிறார்.
பிறகு கோபியிடம் இவ கூட வாழ்றதுக்காவடா எங்க எல்லாரையும் விட்டுட்டு வந்த என்று கேட்க கோபி கண்கலங்கிறார். எப்ப பார்த்தாலும் கத்திகிட்டே இருக்கா என்று சொல்லிக்கொண்டு, உன்னை இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க நீ நேரா வீட்டுக்கு வந்துடு என்று சொல்கிறார். ஆனால் கோபி தயங்க செழியன் மற்றும் இனியா இருவரும் வந்து கோபியை தங்களோடு வரும்படி கெஞ்சுகின்றனர்.
அதோடு நீ அங்க போனா உன்னையும் சாவடிச்சிடுவா.. எனக்கு ஏற்கனவே என் புருஷன் போய்ட்டாரு உன்னையும் இனி அப்படி விட மாட்டேன் என்று சொல்லி ஈஸ்வரி அழுகிறார். அந்த நேரத்தில் டாக்டர் வந்து செக் பண்ணிவிட்டு கோபி நன்றாக இருக்கிறார். அவருக்கு டயட் ஃபுட் கொடுத்து நிறைய வேலை வாங்காம பத்திரமா பாத்துக்கோங்க என்று சொல்கிறார் .

அதற்கு ராதிகா ஆம்புலன்ஸ் அரேஞ்ச் பண்ணவா? இல்ல காரில் கூட்டிட்டு போகவா? என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி நீ எதற்கு அதைப் பற்றி கவலை படுற? அவனை நாங்க தான் கூட்டிட்டு போக போறோம் என்று சொல்கிறார். அதற்கு எழில் பாட்டி நீங்க எப்படி கூட்டிட்டு போக முடியும்? அவங்க தானே கூட்டிட்டு போகணும் என்று சொல்கிறார்.
ஹாஸ்பிட்டலில் பில் வரவும் ராதிகா நான் காட்டுறேன் என்று சொல்ல, செழியன் நான் கட்டுறேன் என்று பில்லை வாங்கிக் கொண்டு போகிறார். உடனே இங்கே நடக்கும் கலவரம் பற்றி எழில் மகேஷ் பாக்யாவுக்கு போன் போட்டு சொன்னதும் பாக்கியா அங்கு வருகிறார். பாக்கியா அவரை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியாது என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி நான் வேணா அந்த வீட்டுக்கு வரல என்னுடைய மகனோடு நான் தனியாக இருக்கிறேன்.அதற்கு ஒரு வீடு பாருடா என்று சொல்கிறார்.
அப்போது ராதிகா அவருடைய பொண்டாட்டி நான் தான் அவரை கூட்டிட்டு போவேன் என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி கலுத்துல தாலி கட்டிட்டா மட்டும் பொண்டாட்டியா? உயிருக்கு போராடிட்டு இருக்கும்போது போன் பண்ணா நீ எடுத்தியா என்று கேட்கிறார். பிறகு ராதிகா உங்க மகன் என் கூட வரமாட்டேன் என்று அவரா சொன்னாரா? என்று கேட்க, ஈஸ்வரி நீயே அவனிடம் போய் கேளு என்று சொல்கிறார்.
பிறகு ராதிகா கோபியிடம் இனி உங்களிடம் சண்டை போட மாட்டேன் என் கூட வந்துருங்க கோபி என்று சொல்கிறார். பிறகு ராதிகா போனதும் ஈஸ்வரி, எழில், செழியன் எல்லோரும் வந்து எங்களோடு வந்திருந்திருங்க என்று கெஞ்சுகின்றனர். கோபி யாரோடு வரப் போகிறார் என்று தெரிந்து கொள்வதற்காக எல்லோரும் இருக்கும்போது கோபி நான் அம்மாவோடு போகிறேன் என்று சொன்னதும் ராதிகா அதிர்ச்சி அடைகிறார். அதுபோல பாக்யாவும் அதிர்ச்சியில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications