பாக்கியலட்சுமி: மீண்டும் பாக்கியா வீட்டுக்கு போன கோபிக்கு கிடைத்த அதிர்ச்சி.. எதிர்பாராத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 7ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி மீண்டும் பாக்கியா வீட்டிற்கு வந்திருக்கிறார். ஆனால் ராதிகாவும் அவருடைய அம்மாவும் பாக்யா மீது பழியை போடுகின்றனர்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி தன்னுடைய அம்மாவோடு கிளம்ப, பாக்யா ஈஸ்வரியிடம் அவரை மீண்டும் வீட்டுக்கு கூட்டிட்டு வர வேண்டாம் என்று கெஞ்சி பார்க்கிறார். ஆனால் என்னுடைய பிள்ளையின் உயிரில் விளையாடாதே என்று கையெடுத்து கும்பிட்டு எமோஷனலாக பேச பாக்கியா எதுவும் சொல்ல முடியாமல் நிற்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

கோபி ரூமை விட்டு வெளியே வரும்போது ராதிகா அங்கு நிற்பதை பார்த்ததும் கோபி நான் போயிட்டு வரேன் ராதிகா என்று சொல்லிவிட்டு தனது அம்மா பிள்ளைகளோடு காரில் ஏறி செல்கிறார். அப்போது செழியன் மற்றும் இனியா இருவரும் பாக்கியாவை விட்டுவிட்டு நீ தனியா வந்துருமா என்று சொல்லிவிட்டு போகிறார்கள்.

எழிலிடம் இவங்க ஏன் இப்படி பண்ணுறாங்கன்னு தெரியல இப்ப இவர் மீண்டும் அந்த வீட்டிற்கு வந்தால் என்னால் சமாளிக்க முடியாது என்று புலம்பி கொண்டிருக்கிறார். பிறகு எழிலும் போனதும் ராதிகா வந்து இதற்கு தானே ஆசைப்பட்டீங்க.. கோபி மேல உங்களுக்கு உள்ளுக்குள்ள பாசம் இருக்கு. அதனால தான் ஹாஸ்பிடலில் இருந்து பார்த்துக்கிட்டீங்க.

television baakiyalakshmi serial vijay tv

நீங்க என் மேல பாசம் இருக்கிறதாகவும், எனக்காக பேசுறதாகவும் நடிக்காதீங்க என்று சொல்கிறார். இதை கேட்ட பாக்யா நான் உங்களுக்காக தான் எங்க வீட்டுல சண்டை போடுறேன் எல்லாத்தையும் நேரில் இருந்து பார்த்துட்டு நீங்க இப்படி சொல்லுறீங்கன்னா உங்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது என்று பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அதைத்தொடர்ந்து கோபியை வீட்டிற்கு அழைத்து சென்றதும் ஜெனியை ஆரத்தி தட்டு எடுத்துட்டு வருமாறு ஈஸ்வரி சொல்ல, ஜெனி தனக்கு எதுவும் தெரியாது என்று மறுக்கிறார். இதனால் ஈஸ்வரியே ஆரத்தி தட்டு எடுத்துட்டு வந்து ஆரத்தி எடுத்து கோபியை உள்ளே அழைத்துச் செல்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

பிறகு பாக்கியா அங்கு வரவும் கோபிக்கு சாப்பாடு தனியாக செய்து கொடுக்குமாறு ஈஸ்வரி சொல்ல அதற்கு பாக்கியா கோபப்படுகிறார். நீங்க தானே கூட்டிட்டு வந்தீங்க நீங்கதான் அவரை பார்த்துக்கொள்ளனும் அவர் அந்த ரூமை விட்டு வெளியே வந்து அதை செஞ்சு கொடு, இதை செஞ்சு கொடு என்று கேட்கக் கூடாது. இந்த வீட்டு விஷயத்தில் எந்த நாட்டாமையும் பண்ண கூடாது என்று திட்டி விட்டு போகிறார்.

மறுபக்கத்தில் ராதிகா வீட்டிற்கு சென்றதும் அவருடைய அம்மா கோபிக்கு ஆரத்தி எடுப்பதற்காக ரெடி செய்கிறேன் என்று சொல்ல அதற்கு ராதிதா அவர் இங்க வரல அந்த வீட்டுக்கு போய்விட்டார் என்று சொல்ல மயூ நான் அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன். 4 நாளா பார்க்கல என்று ஃபீல் பண்ணுகிறார்.

television baakiyalakshmi serial vijay tv

நேத்ரனுக்கு சொந்த வீடு இல்லை.. அரசு மருத்துவமனையில் தான் ட்ரீட்மென்ட்.. கடைசி ஆசை! வருண் உருக்கம்
பிறகு ராதிகா கண்கலங்கி அழுததும் நான் உனக்காக இருக்கிறேன் அம்மா என்று மயூ சமாதானம் செய்து கொண்டிருக்கிறார். உடனே கமலா நான் போய் அவரிடம் பேசிட்டு வரேன் என்று கோபமாக அங்கிருந்து கிளம்புகிறார். அடுத்ததாக பாக்கியா வீட்டு வாசலில் ஜெனியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது கமலா அங்கு வந்து பாக்யாவை திட்டுகிறார்.

நீங்க நினைச்ச மாதிரி நடந்துச்சா என்று கேட்டு திட்டிக் கொண்டிருக்கும் போது பாக்கியா நீங்க என்ன திட்ட வேண்டிய அவசியம் இல்ல, உள்ள இருக்குறவங்கள போய் கேளுங்க என்று சொல்ல நீங்க எல்லாரும் கூட்டுக் களவாணி தானே என்று கமலா திட்டிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

television baakiyalakshmi serial vijay tv
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+