பாக்கியலட்சுமி: மாற்றப்பட்ட கதை.. ஈஸ்வரி செய்த சத்தியம்! மனம் திருந்திய கோபி! பாக்யாவின் புது அவதாரம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி 15 ஆம் தேதிக்கான எபிசோடில் ராதிகா தன்னை விவாகரத்து செய்த பிறகு பாக்யாவை கோபி புரிந்து கொள்கிறார். அதே நேரத்தில் ஈஸ்வரி, ராமமூர்த்தி மீது சத்தியம் செய்கிறார் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஈஸ்வரி கோர்ட்டில் நடந்த விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நான் அன்னைக்கு பாக்கியாவுக்கு துரோகம் பண்ணுனது தான் எனக்கு இன்னைக்கு நடந்திருக்குது. ராதிகா என்னை வேணாம்னு தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டா. அந்த இடத்தில் பாக்கியா ராதிகாவை பார்க்க வந்தபோது நான் பாக்யாவின் வெள்ளந்தி மனசை ஏமாற்றி டைவர்ஸ் வாங்குனது தான் எனக்கு ஞாபகம் வந்தது.

எனக்கு டைவர்ஸ் நடக்கப் போகிறது என்று தெரிஞ்சுதான் நான் கோர்ட்டுக்கு போனேன், அதுவே எனக்கு அவ்வளவு வலி இருந்துச்சு. ஆனால் என்னை முழுசா நம்பி என் கையை புடிச்சுட்டு பாக்கியா கோர்ட்டுக்குள் வந்தா. அவளுக்கு அங்கு வைத்து தான் டைவர்ஸ் என்ற விஷயமே தெரியும். அப்போ அது பாக்கியாவிற்கு எவ்வளவு வலி கொடுத்து இருக்கும் என்று நான் இப்போ புரிஞ்சு கொண்டேன் என்று அழுது கொண்டிருக்கிறார்.
பிறகு கோபி அங்கு இருந்து போனதும் ஈஸ்வரி ராமமூர்த்தியின் போட்டோ முன் வந்து நின்று நம்ம பையன் பாக்யாவிற்கு சென்ற துரோகத்தை உணர வேண்டும் என்று சொன்னிங்களே? ஆனா இப்போ அவன் துரோகத்தை உணர்ந்துட்டான். பாக்யாவின் நல்ல மனசை புரிஞ்சிகிட்டான்.

ராதிகா கோபி வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் பாக்கியா மேல இருக்கிற பழைய வெறுப்போட தான் வாழ்ந்து இருப்பான். இப்போ அவன் மனசார திருந்தி இருக்கிறான். கண்டிப்பா கோபியையும் பாக்யாவையும் சேர்த்து வச்சிட்டு தான் உங்க கூட வருவேன் என்று சத்தியம் செய்கிறார்.
அடுத்ததாக எட்டு மாதங்களுக்கு பிறகு என்று கதை தொடங்குகிறது. அப்போது பாக்யா புது சேலை அணிந்து கொண்டு ஆளே மாறி வருகிறார். அப்போது புது ட்ரெஸ் போட்டுக் கொண்டு வந்த இனியாவை பார்த்து நீ சூப்பரா இருக்க என்று சொல்ல, இனியாவும் நீயும் சூப்பரா இருக்க என்று இருவரும் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்.
அடுத்ததாக எடுத்த புகைப்படங்களை எல்லாம் இனியா யாருக்கோ அனுப்பி கொண்டிருக்கிறார். பிறகு இருவரும் சேட் செய்கின்றனர். அப்போது இனியா சிரித்துக்கொண்டே இருக்கிறார். அடுத்ததாக கோபியும், ஈஸ்வரியும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். ஈஸ்வரி செழியன் வந்துட்டானா என்று கேட்கிறார்.

ஆடியோ ரிலீஸ் சவுண்ட் அதிகமாக இருக்கும்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல, ஈஸ்வரி செழியன் குழந்தைகளை பாக்கணும் போல இருக்கு என்று சொல்கிறார். உடனே கோபி அதுக்கு என்னம்மா பங்க்ஷன் முடிஞ்ச உடனே ஜெனியோட குழந்தைகளை பார்த்துட்டு வரலாம் என்று சொல்கிறார். அடுத்ததாக எல்லோரும் ஃபங்ஷனுக்கு கிளம்புகின்றனர்.
அப்போது கோபி, ஈஸ்வரி, இனியா மூன்று பேரும் காரில் கிளம்ப செல்வியும் பாக்கியாவும் வேறொரு காருக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் பாக்யா தெருவில் இருப்பவர்களிடம் எல்லாம் ஆடியோ ரிலீஸ் வந்துடுங்க என்று கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்.
அதற்கு செல்வி அதான் ஏற்கனவே சொல்லிட்டியே அக்கா அப்புறம் எதற்காக கூப்பிட்டு இருக்க, அவங்க வந்தாலும் கண்ணு பட்டுரும் என்று சொல்ல, அதற்கு பாக்கியா உன் பையன் படமே பண்ண மாட்டான், அவன் எதுக்காக இப்படி வேலை வெட்டிக்கு போகாமல் இருக்கான்னு சொன்னவங்க அவனோட சக்சஸ் பார்க்கணும் என்று சொல்கிறார்.

மறுபக்கத்தில் ஆடியோ ரிலீஸ் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது அமிர்தா நிலா பாப்பாவோட அங்கு வருகிறார். புரொடியூசர் எழிலிடம் உங்க வீட்டில் இருந்து எல்லாரும் வந்தாச்சா ஆரம்பிச்சிடலாமா என்று கேட்டதும், இன்னும் பத்து நிமிஷத்தில் வந்துருவாங்க என்று எழில் சொல்கிறார். அதற்கு அவர் கோபியும் வருவாரா என்று கேட்க, கண்டிப்பா வருவாரு என்று எழில் சொல்கிறார்.
அப்போது ஜெனியும் செழியனும் முதலில் வருகின்றனர். அடுத்ததாக கோபி வருகிறார். கோபி எழிலுக்கு கை கொடுத்து கண்கலங்க, எழிலும் அவரை கட்டிப்பிடித்து அணைத்துக் கொள்கிறார். இதனால் கோபி சந்தோசத்தில் இருக்கிறார். இதை பார்த்து ஈஸ்வரியும் சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications