பாக்கியலட்சுமி: கடைசி நேரத்தில் ராதிகா எடுத்த முடிவு.. குழப்பிய பாக்கியா.. கோபிக்கு தரமான சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி 14ஆம் தேதிக்கான எபிசோடில் ராதிகா மற்றும் கோபிக்கு விவாகரத்து ஆகிவிடுகிறது. அதே நேரத்தில் பாக்யா கேட்ட கேள்விக்கு ராதிகா முக்கிய முடிவு எடுக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராதிகாவுக்கும், கோபிக்கும் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. அப்போது கோபி விவாகரத்துக்கு சம்மதம் சொல்கிறார். அதைத்தொடர்ந்து ராதிகாவிடமும் சம்மதம் கேட்க அவருக்கு பதிலாக அவருடைய வழக்கறிஞர் ராதிகாவிற்கு மனப்பூர்வமாக விவாகரத்துக்கு சம்மதம் என்று சொல்கிறார். இதைக் கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு கோபியிடம் இருந்து ஜீவனாம்சம் எதுவும் வேண்டுமா? என்று கேட்க, ராதிகா எதுவுமே வேண்டாம் எனக்கு டைவர்ஸ் மட்டும் போதும் என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து ராதிகா வெளியே வர அங்கு பாக்கியா அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார். பிறகு ராதிகாவிடம் நீங்க ரெண்டு பேரும் மீண்டும் சேர்ந்துருவீங்க ஏதாவது அதிசயம் நடக்கும் என்று நான் நினைத்தேன் என்று சொல்கிறார்.
அதற்கு ராதிகா அதற்கு சான்சே இல்ல. இனி இன்னொரு ரிலேஷன்ஷிப்பில் நான் சிக்க மாட்டேன் நான் கோபியை திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தது மயூவிற்காக தான். ஆனால் நான் எடுத்த முடிவால் அதிகமாக கஷ்டப்பட்டது மயு தான். அவளை இன்னும் கஷ்டப்படுத்த நான் விரும்பல என்று
சொல்கிறார்.
மேலும் இருவரும் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ராதிகா இனி நான் மொத்தமாக மாறப்போறேன் நான் பழைய ராதிகாவாக இருக்க வேண்டும் என்னுடைய முடியை கூட ஷார்ட்டா கட் பண்ண போறேன் என்று சொல்ல, அதற்கு பாக்கியா உங்களுக்கு ஷார்ட் கட்டு ரொம்ப நல்லா இருக்கும் என்று சொல்கிறார்.
பிறகு நீங்க நம்பரை மாற்றினீர்கள் என்றால் எனக்கு கட்டாயம் தாங்க என்று பாக்யா சொல்கிறார். அதைத்தொடர்ந்து ராதிகா தனியாக இருக்கும்போது கோபி அவரிடம் சென்று பேசலாமா என்று கேட்க, பாக்கியாவும் சரி என்று சொல்கிறார். பிறகு தினமும் உன்னை பற்றி தான் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
பாக்கியலட்சுமி இனியாவிற்கு நடந்த அவலம்.. கதை என்றாலும் இப்படியா பண்ணுவீங்க? இதை கவனிச்சிருக்கலாமே!
நான் நிறைய தப்பு செஞ்சு விட்டேன். கடந்த காலத்துக்கு போக முடியும் என்றால் எல்லாவற்றையும் சரி செய்வேன் என்று சொல்ல, அதற்கு ராதிகா கடந்த காலத்துக்கு போவது என்றால் தப்புக்கு மேல் தப்புதான் செய்வீங்க என்று பதிலடி கொடுக்கிறார். பிறகு உனக்கும் மயுவிற்க்கும் நான் ஏதாவது செய்ய வேண்டும். என்ன வேணாலும் கேளு என்று கோபி சொன்னதும் ராதிகா எனக்கு ஒரே ஒரு ஆசைதான் கடைசியா உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்று சொல்கிறார்.

அதற்கு கோபியும் சரி என்று சொல்லி காரில் ராதிகாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறார். அப்போது வெள்ளைப்புறா ஒன்று என்ற பாடல் காரில் ஒலிக்கிறது. அந்த பாடலை கேட்டதும் இந்த பாட்டு உனக்கு ஞாபகம் இருக்கா என்று கோபி கேட்க, அதற்கு ராதிகா இது எப்படி மறக்க முடியும்? நாம காலேஜ் படிக்கிற காலகட்டத்தில் இந்த பாட்டு தானே அடிக்கடி கேட்டு இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்போது கோபி அந்த நேரத்தில் நம்மளுக்குள் காதல் துளிர்விட்டது. ஆனால் அதை இருவரும் ஒருவருக்கொருவர்வர் சொல்லிக் கொள்ளவில்லை. நம்முடைய வாழ்க்கையும் எப்படியோ மாறிவிட்டது. ஆனால் நீ என்னுடைய வாழ்க்கையில் திரும்ப வருவேன்னு நான் எதிர்பார்க்கலை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு ராதிகா இந்த பேச்சை நிறுத்தி விடலாம் வேற ஏதாவது பேசலாம் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications