பாக்கியா பற்றிய ரகசியத்தை உடைத்த நிலா.. கோபி ஏற்படுத்திய பிரச்சனை.. கோபத்தில் ஈஸ்வரி எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பிப்ரவரி 14ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் நேற்று வரைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் மகா சங்கமம் நடைபெற்று முடிவடைந்தது. இந்த நிலையில் நிலையில் இன்று பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா வீட்டில் கதை பயணிக்கிறது.
அதில் சமையல் ஆர்டருக்கு போயிட்டு வீட்டுக்கு வந்த அமிர்தா மற்றும் நிலா சொன்ன பொய்யை கோபி வந்து உடைத்து இருக்கிறார். அதாவது மகா சங்கமத்தில் நடந்த பிரச்சனைகளுக்கு இன்று பூகம்பம் வெடிக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அமிர்தா செல்வி வீட்டிற்கு வர அப்போது செல்வி வீட்டுக்குள் வருவதற்கு பயந்து நைசாக நழுவி செல்ல முயற்சி செய்கிறார். அப்போது அமிர்தா உள்ளே வாங்க அக்கா எனக்கு பயமா இருக்கு என்று சொல்லி கொண்டிருக்க அப்போது ராமமூர்த்தி வந்து நிலாவை கூப்பிடுகிறார். பிறகு ஈஸ்வரி பாக்யா எங்கே என்று கேட்க அதற்கு அமிர்தா அம்மாவுக்கு இன்னும் வேலை முடியல மினிஸ்டர் மேடத்தை பார்க்கணும்னு சொன்னாங்க அதனால போயிருக்காங்க என்று சமாளிக்கிறார்.

அதற்கு ராமமூர்த்தி எல்லோரும் சேர்ந்து வர வேண்டியதுதானே என்று சொல்ல அதற்கு அமிர்தா நானும் அதை தான் சொன்னேன். ஆனா கூட வேலை பாக்குறவங்களால வர முடியல என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து நிலா பாப்பாவிடம் ராமமூர்த்தி நீங்க கடற்கரைக்கு போனீங்களா? ஜாலியா இருந்ததா? என்று கேட்க அதற்கு நிலா ஆமாம் புது மாமா புது அத்தை புது பாட்டி எல்லாம் பார்த்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்க இதை கேட்டு ஈஸ்வரிக்கு சந்தேகம் வருகிறது.

அதைத் தொடர்ந்து வீட்டிற்கு கோபி, ராதிகா, இனியா வந்து சேர கல்யாணம் நின்னு போய்விட்ட விஷயத்தையும் பாக்கியா தான் ராஜிக்கு வேறு கல்யாணம் செய்து வைத்த விஷயத்தை கோபி சொல்ல அதைக் கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். அதோடு ஈஸ்வரி செழியன் குழந்தையை தூக்கிக்கிட்டு குலதெய்வம் கோவிலுக்கு போனதையும் பாக்கியா அதை கெடுத்து குழந்தையை ஜெனி இடம் தூக்கிக் கொடுத்த விஷயத்தையும் சொல்கிறார்.
அதோடு பாக்கியாவால் எனக்கு ஒரே அவமானமா போயிடுச்சு என்று கோபத்தில் ஈஸ்வரி திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்யா வரட்டும் அவளை வச்சுக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அமிர்தா மாடியில் இருந்து கீழே இறங்கி வர பாக்கியா மீதுள்ள கோபத்தை அமிர்தாவிடம் ஈஸ்வரி காட்டுகிறார். பாக்கியா கலெக்டரை பார்க்க குன்னக்குடிக்கு எதுக்கு போகணும் என்று கேட்க அதை கேட்டு அமிர்தா அதிர்ச்சியாகி நிற்கிறார்.

அப்போது ராமமூர்த்தி கோபி போயிருந்த கல்யாண பொண்ணு தான் ராஜி என்ற உண்மையை சொல்கிறார். அதற்கு பிறகு கோபி செடி எண்ணெய் பார்ப்பதற்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது செழியன் வந்ததும் பாட்டி உனக்காக ஒரு விஷயம் பண்றாங்க அப்படின்னா நீ அவங்களுக்கு தானே முழு சப்போர்ட் கொடுத்து இருக்கணும் உங்க அம்மா கிட்ட எதுக்கு சொன்னே? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்கு தோணலையா? இப்போ உங்க அம்மாவால தான் பாட்டிக்கு அவமானம். உங்க அம்மா பண்ணுனது பெரிய தப்பு, துரோகம் என்று சொல்லி ஏற்றுவிடுகிறார். இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications