பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபி இவர்தானாம்! பேசி தீர்த்துக்கோங்க,என நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோ
சென்னை; விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து கோபி கேரக்டரில் நடித்து வந்த சதீஷ் விலகப் போகிறேன் என வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இனி கோபியாக நடிகர் பப்லு நடிக்க போகிறார் என்ற தகவல்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இத நிலையில் தற்போது கோபியாக நடித்து வரும் சதீஷ் உருக்கமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவருடைய மனதிலும் இருக்கிறது. இனி பாக்கியா என்ன மாதிரி முடிவு எடுக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் கோபியாக நடித்து வரும் சதீஷ் இந்த சீரியலை விட்டு நான் விலகப் போகிறேன் என்று வீடியோ வெளியிட்டு இருக்கிறார். 10, 15 எபிசோடுகளில் நான் இருக்க மாட்டேன் என்று அவர் கூறியதை கேட்டு ரசிகர்கள் பீல் பண்ணி சமூக வலைத்தளத்தில் அவருக்காக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் கோபி கேரக்டரில் இனி யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது. அதில் நடிகர் பப்லுவின் பெயர் இப்போது அதிகமாக அடிபட்டு கொண்டிருக்கிறது. ஏற்கனவே அவர் நடித்து வந்த கண்ணான கண்ணே சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதே நேரத்தில் கோபியாக இப்போது வரைக்கும் நடித்து வரும் சதீஷ் உருக்கமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் சில தருணங்களில் நாம தனியாக இருப்போம் நமக்கு வேண்டப்பட்டவங்க நமக்கு பின்னாடி இருப்பாங்க, இல்லனா நமக்கு முன்னாடி இருப்பாங்க. நமக்கு பின்னாடி இருக்காங்கன்னா நம்ம அவங்கள தாண்டி வந்துட்டோம்.
அது அறிவாலையும், ஆணவத்தாலையோ, அனுபவத்தாலையோ இருக்கும் நமக்கு முன்னாடி அவங்க வந்துட்டாங்கன்னா நாம அவங்க கூட சண்டை போட்டு ஏதோ ஆணவத்தாலையோ, ஈகோவாலையோ நாம பின்னாடி தங்கிட்டோம். எப்படி பார்த்தாலும் தனிமை தனிமை தான். ஆனால் வாழ்க்கையில் பேசிட்டு தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இல்லை.
எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நண்பர்களுக்குள், நமக்கு வேண்டப்பட்டவங்க கூட உட்கார்ந்து பேசினால் தெளிவு கிடைக்கும் என்று உங்களுக்கு புரிகிறதா என குதர்க்கமாக பேசி இருக்கிறார். இது யாருக்கோ இவர் கொடுக்கும் அறிவுரையா? அல்லது தகவலா? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications