பாக்கியலட்சுமி: பாக்யாவுக்காக கோபி செய்த செயல்.. காலில் விழுந்த சுதாகர்.. இனியாவின் பிடிவாதம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மே 19ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி பாக்கியாவிற்கு உதவி செய்வதற்காக முயற்சி செய்கிறார். அதே நேரத்தில் இனியா தன்னுடைய அம்மாவிற்காக தான் முக்கிய முடிவெடுக்க போவதாகவும் கூறியிருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி பாக்யாவின் ஹோட்டலுக்கு சாப்பிட வந்திருக்கிறார். அப்போது சாப்பிட்டுவிட்டு நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று கேட்க, என்னவென்று பாக்கியா கேட்கிறார். அதற்கு சுதாகர் சாரிடம் இருந்து வாங்கிய பணம் வைத்திருக்கியா? செலவு ஆகி விட்டதா என்று கேட்க, அதற்கு பாக்கிய சுதாகர் நான் கேட்டதை விட குறைவாக தான் கொடுத்தாரு.

கோபி கேட்ட கேள்வி
அந்த பணத்தை வைத்து நான் ஏற்கனவே வாங்குன பேங்க் கடனை அடைச்சிட்டேன் என்று பாக்யா சொன்னதும், அந்த பணத்தை வைத்து நீ பெருசா ஒரு ஹோட்டல் தொடங்கி இருக்கலாம். அதை வச்சு அந்த கடனை அடைச்சிருக்கலாம் என்று கோபி கேட்க, எனக்கு கடன் பிரஷரில் என்ன முடிவெடுக்கணும்னு தெரியல. அதனால நான் இப்படி செஞ்சிட்டேன் என்று பாக்கியா சொல்கிறார்.
பாக்கியா கேட்ட உதவி
சரி உனக்கு வேற ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்கிட்ட கேளு என்று கோபி சொன்னதும், நீங்க உங்க அம்மாவை மீண்டும் உங்கள் வீட்டுக்கே கூட்டிட்டு போயிடுறீங்களா? நான் எனக்கு பிடிச்ச வேலையை செய்யணும்னு நினைக்கிறேன். ஆனா அவங்க வீட்டில் இருந்து கொண்டு எனக்கு தொந்தரவாகவே இருக்கிறாங்க என்று சொன்னதும் கோபி நான் அம்மாவை அடிக்கடி கூப்பிட்டு பட்டு தான் இருக்கிறேன். ஆனா அவங்க வரமாட்டேன் என்கிறார்கள் என்று கூறுகிறார்.
சுதாகர் நாடகம்
மேலும் கோபி பேசும்போது, இன்றைக்கு இனியா வீட்டுக்கு போயிட்டு வரும்போது அம்மாவிடம் பேசி கண்டிப்பா நல்ல விஷயம் சொல்றேன் என்று சொல்லிவிட்டு போகிறார் அடுத்ததாக கோபியும் ஈஸ்வரியும் இனியா வீட்டிற்கு வருகின்றனர். அந்த நேரத்தில் சுதாகர், இனியா மற்றும் நித்திஷுக்கு வாங்கிய புது வீடு பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். ஈஸ்வரியை பார்த்ததும் ஈஸ்வரி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க ஈஸ்வரி சந்தோஷத்தின் உச்சிக்கு போய்விடுகிறார்.
கோபி செய்த செயல்
பிறகு இனியாவை சந்தித்து ஈஸ்வரி பேசுகிறார். அப்போது வழக்கம் போல பாக்யாவை பற்றி குறை பேசிக் கொண்டிருக்க இனியா அம்மா எனக்காக ஏற்கனவே எவ்வளவோ செஞ்சிருக்காங்க இப்ப எனக்காக தான் ரெஸ்டாரண்டையும் விட்டுக் கொடுத்து இருக்காங்க அவங்களை பத்தி நீங்க தப்பா பேசாதீங்க என்று திட்டி விடுகிறார். அதைத் தொடர்ந்து ஈஸ்வரியும் கோபியும் வெளியே வருகின்றனர். அப்போது இனியா பற்றியும் சுதாகர் பற்றியும் பெருமையாகவே ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்கிறார். பாக்கியா மீது மட்டும் கோபத்தை காட்டிக் கொண்டே வருகிறார். அதற்கு கோபி பாக்யா பற்றி நல்ல விதமாகவே ஈஸ்வரியிடம் சொல்ல, முதலில் ஈஸ்வரி பாக்கியா மீது கோபப்பட்டாலும் பிறகு ஓரளவிற்கு சமாதானம் ஆகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications