பாக்கியலட்சுமி: ரெஸ்டாரண்ட் எனக்கு வேண்டும், சுதாகருக்கு இனியா அதிர்ச்சி.. ஈஸ்வரியால் குழப்பம், பாக்யா எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மே 20 ஆம் தேதிக்கான எபிசோடில் ரெஸ்டாரண்ட் பற்றி இனியா கேட்ட கேள்விக்கு சுதாகர் அதிர்ச்சி ஆகி இருக்கிறார். அதே நேரத்தில் பாக்யா குடும்பத்திற்குள் ஈஸ்வரி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இதனால் பாக்கியா முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு வரும் ரவுடிகள் வழக்கம் போல பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு முட்டை வேண்டும், தோசை வேண்டும் என்று பிரச்சனை செய்து கொண்டிருக்க பாக்கியா அமைதியாகவே எல்லாவற்றையும் செய்கிறார். கடைசியில் அவர்களிடம் பில்லை கொடுக்க இவ்வளவு காசா இப்போ இல்ல, கணக்குல வச்சுக்கோங்க என்று சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பி விடுகிறார்கள்.

கோபத்தில் செல்வி
இதனால் செல்வி கோவப்பட அதற்கு சரி இன்னைக்கு குடிச்சு எதுவும் பஞ்சாயத்து பண்ணலையேன்னு சந்தோஷப்படுவோம். போனா போகட்டும் என்று பாக்கியா சொல்லி விடுகிறார். மறுபக்கத்தில் எழிலும் ஈஸ்வரியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது எழில் குழந்தையால் இரவு முழுக்க சரியாக தூங்க முடியல ஆனா அதை புரிஞ்சுக்காம எழில் ஜெனி வேலை செய்யலன்னு கோபப்படுறா என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, எல்லாத்துக்கும் காரணம் உங்க அம்மா தான், அவ வீட்டில் இருந்தா இந்த பிரச்சனை எல்லாம் வராது என்று ஈஸ்வரி ஏத்தி விட்டு கொண்டிருக்கிறார்.
குடும்பத்தில் பிரச்சனை
பிறகு பாக்கியா வீட்டிற்கு வந்ததும் ஈஸ்வரி உன்னால வீட்டில் சண்டை வரப்போகுது, எழில் என் பொண்டாட்டி மட்டும்தான் வேலை செய்யுறானு கோவப்படுறான் என்று சொல்ல, அதற்கு என்ன பண்ணனுமோ அத நான் பாத்துக்குறேன் என்று பாக்யா பதில் கொடுக்கிறார். பிறகு அடுத்த நாள் காலையில் பாக்யா வீட்டிற்கு வேலை பார்ப்பதற்காக ஒரு பெண்ணை கூட்டிக்கொண்டு வருகிறார். இந்த பெண்ணுக்கு சம்பளம் யார் கொடுப்பா என்று ஈஸ்வரி கேட்க, அதற்கு வீட்டுக்கு செலவா பார்த்துகிறேன் என்று சொன்ன என்னுடைய பசங்க பாத்துக்குவாங்க என்று சொன்னதும் எழிலும் செழியனும் என்று சொல்கிறார்கள்.
பாக்கியா எடுத்த முடிவு
அதற்கு ஈஸ்வரி நீ வீட்டில் இருந்து எல்லாத்தையும் பாத்துக்குவேன்னு பார்த்தா நீ வேலைக்கு ஆள் வச்சிருக்க, வீட்டு வேலையை இவங்க பாத்துக்கிட்டா என்னை யாரு பாத்துக்குறது? உன்னுடைய பேர பசங்களை யார் பாத்துக்குவாங்க என்று கோபப்பட, அதற்கு பாக்கியா நீங்க உங்களுடைய குழந்தைகளை பாத்துக்குவீங்களா? என்று அமிர்தா மற்றும் ஜெனி இடம் கேட்க அவர்கள் இருவரும் பார்த்துக் கொள்வோம் என்று சொல்கிறார்கள். அதனால் பிரச்சனை முடிஞ்சது என்று சொல்லி பாக்கியா அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
ஈஸ்வரியால் பிரச்சனை
மறுபக்கத்தில் பாக்கியா ஹோட்டலில் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கிறார். எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்ததும் ஒருவர் வருகிறார். அவருக்கு சாப்பாடு இல்லாமல் இருக்கிறது. கொண்டுவந்த சாப்பாடு எல்லாம் இன்னைக்கு தீர்ந்துவிட்டது எக்ஸ்ட்ரா சாப்பாடு கூட போட்டு இருக்கிறோம் என்று பாக்கியாவும், செல்வியும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
குழப்பத்தில் செழியன்
மறுபக்கத்தில் எழில் வீட்டிலிருந்து ஆபீஸ் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி வந்து எழிலிடம் மெதுவாக பேச்சு கொடுக்கிறார். உங்க அம்மா வேலைக்கு போறதுனால நீங்க தான் வீட்டு வேலை பாக்குறவஙகளுக்கு பணம் கொடுக்கணும், அதோடு வீட்டில் பொருட்கள் வாங்குவதறகும் அதிகமா பணம் ஆகும் என்று பயமுறுத்த அதனால் செழியனுக்கு குழப்பம் ஏற்படுகிறது.
சுதாகர் மனைவிக்கு பயம்
மறுபக்கத்தில் சுதாகர் வீட்டில் குடும்பத்தினர் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இனியா மட்டும் இல்லை என்பதால் சுதாகரின் மனைவி இந்த இனியா எப்போதும் அவங்க அம்மா வீட்டில் பேசிக்கொண்டே இருக்கிறா, ஏதாவது சொல்லி மனதை மாத்திடுவாங்களோனு பயமாயிருக்கு என்று சொல்ல, அதை பார்த்துக்கலாம் என்று சுதாகர் சொல்லிக் கொண்டிருக்கும் போது இனியா வருகிறார்.
இனியா கேட்ட கேள்வி
பிறகு எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது இனியா பாக்யாவின் ரெஸ்டாரண்டை பற்றி விசாரிக்கிறார். அதற்கு அந்த ரெஸ்டாரண்டின் வேலை போயிட்டு இருக்குது அது முடிஞ்சதும் ஓபன் பண்ணனும் என்று சொல்ல, அந்த ரெஸ்டாரண்ட்டை நானே கவனிக்கிறேன் என்று இனியா சொன்னதும் சுதாகர் உட்பட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications