பாக்கியலட்சுமி: நறுக்குன்னு ஆகாஷ் அப்பா கேள்வி.. ஈஸ்வரி எடுத்த முடிவு! கோபியிடம் இனியா சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 24ஆம் தேதிக்கான எபிசோடில் ஆகாஷின் அப்பா வீட்டிற்கு வந்து பாக்கியா குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதைத் தொடர்ந்து கோபியும் ஈஸ்வரியும் பாக்யாவின் வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுக்கிறார்கள்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் குடும்பத்தில் இருக்கும் எல்லாரையும் கூப்பிட்டு வைத்து கோபி நான் இந்த வீட்டை விட்டு போக போறேன் என்று சொல்ல, அதற்கு யாரும் எதுவும் பேசாமல் இருக்கும்போது பாக்கியா பேசாமல் கிளம்பி விடுகிறார். பிறகு ஈஸ்வரி நீ எதுக்கு கோபி இந்த முடிவு எடுத்த? குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கத்தான் செய்யணும் அதுக்காக நீ போகணும் என்று முடிவு எடுக்கக் கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது அவர் எங்கே இருக்கணும்னு விருப்பப்படுறாரோ அங்கேயே இருக்கட்டும் என்று செழியன் சொல்லி விடுகிறார்.

இனியா சொன்ன வார்த்தை
இதனால் ஈஸ்வரி இன்னும் அதிர்ச்சி அடைகிறார். அப்போது எல்லா பிரச்சனைக்கும் காரணம் இவதான். இவளாலத்தான் இப்படி ஆச்சு என்று இனியாவை பார்த்து திட்ட, அதற்கு இனியா என்னை யாரும் கம்பல் பண்ணுனா பிடிக்காது. அதுபோல நானும் யாரையும் கம்பல் பண்ண விரும்பல என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.
இதுவும் உண்மைதான்
உடனே கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் அதிர்ச்சியாகி ரூமிற்கு போகிறார்கள். அங்கு கோபி ஈஸ்வரி இடம் என்னை ஒரு நல்ல புருஷன் இல்லை என்று பாக்கியா சொல்லி இருக்கா, அதுபோல ராதிகாவும் சொல்லியிருக்கிறா. ஒரு நல்ல பையன் இல்லைன்னு அப்பாவும் சொல்லி இருக்காரு நீங்களும் சொல்லி இருக்கீங்க. ஆனா நான் என்னுடைய பசங்களுக்கு எப்பவும் நல்ல அப்பாவா இருந்திருக்கிறேன்.
கோபியின் புலம்பல்
செழியனோட பிசினஸுக்கும் சரி எழிலுடைய பட வேலைக்கும் சரி என்னால் முடிந்ததை செஞ்சேன். அதுபோல இனியா விஷயத்திலும் இந்த மாதிரி வேறு யார் வீட்டில் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஆனாலும் நான் இனியா மேல கோபப்படல. ஏன் இதை எப்படி சால்வ் பண்ணலாம் என்று தான் நான் யோசிச்சிட்டு இருந்தேன். அவளுக்கு ஏன் என்னை புரிஞ்சுக்க முடியல என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
வீட்டை விட்டு கிளம்பும் கோபி
பிறகு நான் இங்கே இருந்தா சரிப்பட்டு வராதுமா என் பிரண்டு மூலமா ஒரு அப்பார்ட்மெண்ட் பார்த்திருக்கிறேன் என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி அப்போ என்னை ஒரு ஆசிரமத்தில் விட்டு விடு. நீ இல்லாத இடத்தில் என்னாலும் இருக்க முடியாது. உனக்கு எப்போ என்ன நடக்குமோனு பயந்துக்கிட்டே நான் வாழ்வதற்கு தனியா போயிடுறேன் என்று சொல்ல, அதற்கு கோபி நீங்க எதுக்கு ஆசிரமத்தில் போய் இருக்கனும்னா, நீங்க என் கூடவே வந்துருங்க என்று சொல்கிறார்.
ஆகாஷ் அப்பா என்ட்ரி
பிறகு அடுத்த நாள் காலையில் ஈஸ்வரி ஹாலில் உட்கார்ந்து இருக்கும்போது கோபி வருகிறார். நான் வெளியே போயிட்டு கொஞ்சம் திங்ஸ் வாங்கிட்டு வரேன் என்று சொல்ல ஈஸ்வரி நானும் வரட்டுமா என்று கேட்கிறார். வேண்டாம் என்று சொல்லிவிட்டு கோபி வாசலுக்கு வரும்போது ஆகாஷின் அப்பா வாசலில் வந்து நிற்கிறார்.
கோபிக்கு கிடைத்த அதிர்ச்சி
அவரை பார்த்ததும் கோபி யார் என்று தெரியாமல் நீங்க யார் என்று கேட்க அதற்கு என்ன எப்படி உங்களுக்கு தெரியும்? என் பையனை நீங்க அடிச்சு போட்டு இருக்கீங்க என்று திட்டிக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரிக்கு எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது. எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று ஈஸ்வரி சொல்ல நாங்க ஏழைங்க.. இல்லாத பட்டவங்க அதனால உங்களுக்கு நினைவு இருக்காது என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.
செழியனின் திமிர் பேச்சு
அப்போது குடும்பத்தினர் எல்லோரும் வந்து விடுகிறார்கள். எல்லோரையும் பார்த்ததும் ஆகாஷின் அப்பா என்னுடைய பையனுக்கு எவ்வளவு நல்ல பெயர் தெரியுமா? அவன அடிச்சிருக்கீங்க இனி ஒரு தடவை அப்படி செய்யணும்னு நினைச்சாலே என்ன நடக்கும் தெரியுமா என்று மிரட்ட அதற்கு செழியன் உங்க பையனை மட்டும் இல்ல உன்னையும் அடிப்பேன் என்று திமிராக பேசுகிறார்.
அசிங்கப்படுத்தும் ஆகாஷின் அப்பா
அப்போது ஆகாஷின் அப்பாவும் அடிச்சு பாரு என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வருகிறார். பிறகு வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் செழியனை பிடித்துக் கொள்கிறார்கள். அப்போது ஆகாஷின் அப்பா எல்லாரையும் மிரட்டி விட்டு போகிறார். பிறகு தோபியும் ஈஸ்வரியும் நாம இன்னைக்கே வீட்டை விட்டு கிளம்பி போயிடலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications