பாக்கியலட்சுமி: சுதாகர் பற்றி கோபிக்கு தெரிய வந்த உண்மை.. இனியா கொடுத்த அதிர்ச்சி! செல்வி கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் மூன்றாம் தேதிக்கான எபிசோடில் இனியாவிற்கு திருமண ஏற்பாடுகள் தொடங்குகிறார்கள். அதற்கு இனியா எதிர்பார்க்காத விஷயத்தை சொல்கிறார். அதே நேரத்தில் கோபிக்கு சுதாகர் பற்றிய உண்மைகளும் தெரிய வருகிறது.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் இனியாவை பெண்பார்க்க பாக்கியாவின் ரெஸ்டாரண்டை விலைக்கு கேட்ட சுதாகர் குடும்பத்தினர் வந்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் எல்லோரும் நாங்க எல்லோரும் இங்கே பெண் பார்க்க வந்தது ஃபார்மாலிட்டிக்கு தான் எங்களுக்கு ஏற்கனவே பொண்ணை பிடிச்சிருக்கு அதனால ரெண்டு வாரத்தில் திருமணத்தை நடத்திவிடலாம் என்று சொல்ல மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

கல்யாண ஏற்பாடு
அப்போது பாக்கியா எதற்காக இவ்வளவு சீக்கிரமா கல்யாணத்தை வைக்கணும்? இனியா இப்போதான் வேலைக்கு சேர்ந்திருக்கா அதற்குள் கல்யாணமா? என்று கேட்க, சுதாகர் என்னுடைய மகன் அடிக்கடி வெளிநாட்டுக்கு போயிடுவான் இந்த முறை கல்யாணத்தை முடிச்சிட்டு போகலாம் என்று நினைக்கிறோம் என்று சொல்கிறார். அப்போது கோபி நானும் இவ்வளவு சீக்கிரமாக கல்யாணத்தை வைப்பீங்க என்ற என்று எதிர்பார்க்கல.
சந்தோஷத்தில் ஈஸ்வரி
ரெண்டு வாரத்தில் கல்யாணத்திற்கான அரேஞ்ச்மென்ட் எல்லாம் எப்படி பண்ண என்று கேட்க அதை எல்லாம் நான் பார்த்துக்கலாம் இன்னும் ரெண்டு வாரம் இருக்கு.. சீக்கிரமா கல்யாணத்தை பண்ணனும் என்று சொல்ல யோசிச்சு சொல்கிறோம் என்று கோபி குடும்பத்தினர் அனுப்பி வைக்கின்றனர். மாப்பிள்ளை வீட்டார் போனதும் ஈஸ்வரியும் கோபியும் சந்தோசமாக வீட்டிற்குள் வருகிறார்கள்.

கோபி கேட்ட கேள்வி
அப்போது எழில் எனக்கும் இந்த மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பேசுவது பிடிச்சிருக்கு. இவ்வளவு பெரிய பணக்காரங்க ஆனா எந்த பந்தாவும் இல்லாம இருக்கிறாங்க இனியா வாழ்க்கை நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி பாக்கியாவிடம் சுதாகர் சார் ஏற்கனவே உன்னை மீட் பண்ணி இருக்கிறாராமே என்று கேட்கிறார்.
பாக்கியா சொன்ன விஷயம்
நீங்க இவரை தான் இங்கு கூட்டிட்டு வருவீங்கன்னு எனக்கு எப்படி தெரியும்? அவர் என்னுடைய ரெஸ்டாரண்ட்டை விலைக்கு கேட்டாரு. நான் தர முடியாதுன்னு சொன்னேன். ரொம்ப மிரட்டுற மாதிரி பேசினாரு. ஆனா இப்போ இவ்ளோ இறங்கி வந்து பேசுறாரு இது எனக்கு நம்புற மாதிரி இல்ல. எனக்கு கல்யாணம் பண்றது சரின்னு தோணல என்று சொல்ல அந்த நேரத்தில் இனியாவும் வந்து எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் எனக்கும் கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை என்று சொல்கிறார்.
இனியாவின் பிடிவாதம்
நீங்க பொண்ணு பார்க்க வந்தா மட்டும் போதும்னுதான சொன்னீங்க நான் அதற்கு தான் சரின்னு சொன்னேன். ஆகாஷ் கூட பேச கூடாதுன்னு சொன்னீங்க ஆனால் என்னால் அவனை மறக்க முடியாது அவன் எப்படியும் ஒரு நாள் கலெக்டர் ஆகிவிடுவான். அவனத்தான் நான் கல்யாணம் பண்ணுவேன் என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி அதெல்லாம் இந்த ஜென்மத்தில் நடக்காது.
இனியா கொடுத்த அதிர்ச்சி
இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து கோபி இனியாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இனியா ஆகாஷை தான் கல்யாணம் செய்வேன் என்று உறுதியாக இருக்கிறார். ஆனால் செழியன் ஆகாஷால் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை உனக்கு தர முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் பாக்கியா சோகமாக இருக்கும் போது செல்வி வந்து என்ன விஷயம் என்று விசாரிக்கிறார்.
செல்வி கேட்ட கேள்வி
அப்போது மாப்பிள்ளை வீட்டார் வீட்டிற்கு வந்த விஷயத்தை பற்றி பாக்கியா சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு செல்வி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பெரிய இடத்துக்காரங்களா அக்கா என்று சோகமாக கேட்கிறார். அதற்கு பாக்யா எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications