பாக்கியலட்சுமி: ஈஸ்வரியை கதறவிட்ட பாக்யா.. முயற்சியால் மீண்டும் கிடைத்த வெற்றி.. எழிலுக்கு சரியான பதிலடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மே 6ஆம் தேதிக்கான எபிசோடில் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் வேறு பாக்கியா புதியதாக பிசினஸ் தொடங்குகிறார். அதே நேரத்தில் அவமானப்படுத்தி கொண்டிருந்த ஈஸ்வரிக்கு சரியான பதில் கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா மீண்டும் ரெஸ்டாரண்ட் தொடங்க வேண்டும் என்பதற்காக ஒரு இடத்தை பார்க்க வந்திருக்கிறார். ஆனால் அந்த இடத்தின் ஓனர் லேடிஸ் நடத்தினால் நான் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டு பாக்யாவின் குடும்ப விஷயத்தைப் பற்றி கேட்டுக்கொண்டே இருக்க அதனால் கோபமான பாக்கியா எங்களுக்கும் இந்த இடம் வேண்டாம் என்று கிளம்பி விடுகிறார்.

சுய கௌரவம்
பிறகு பாக்கியாவும் செல்வியும் ஜூஸ் குடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாக்கியாவை பற்றி செல்வி பெருமையாக பேசுகிறார். இனி பிசினஸ் எதுவும் தொடங்க மாட்ட என்று நினைத்தேன். ஆனா நீ பழைய மாறி மீண்டும் எழுந்துட்ட என்று பாராட்டுகிறார். அதற்கு பாக்கியா எங்க வீட்டுல எல்லாரும் இனி எந்த வேலையும் பார்க்க வேண்டாம் வீட்டிலேயே பிள்ளைகளை பார்த்துட்டு இருங்கன்னு சொல்றாங்க.
தன்னம்பிக்கை
25 வருஷமா புருஷனிடம் காசுக்காக கையேந்தி இருந்துட்டு திடீர்னு ஏழு வருஷம் சுயமா சம்பாதித்து இருக்கிற சந்தோஷத்தை நான் அனுபவிச்சிருக்கிறேன். இப்போ பசங்க கிட்ட கையேந்தி நிற்க முடியாது. அதனாலதான் நைட்டெல்லாம் யோசிச்சு என்ன பிசினஸ் பண்ணனும் என்று முடிவு எடுத்தேன் என்று பாக்கியா சொல்ல, இப்போ தான் நீ பழைய பாக்கியாவை பாக்குற மாதிரி இருக்கு. நீ பிசினஸ் பண்ண போற விஷயத்தை வீட்ல சொல்லிட்டியா என்று செல்வி கேட்கிறார்.
பாக்கியா பாராட்டு
அதற்கு பாக்கியா, நான் இடத்தை பார்த்து அட்வான்ஸ் கொடுத்துட்டு சொல்லலாம்னு இருக்கிறேன் என்று சொல்ல, அப்போ இன்னும் இடத்தை பார்க்க போறோமா என்று கேட்டது மாமா ஏழு இடம் பார்த்து வைத்திருக்கிறேன் அடுத்தடுத்து போகலாம் என்று பாக்கியா கூட்டிக்கொண்டு போகிறார். பிறகு ஒரு இடத்தை பார்க்கிறார்கள் ஆனால் அந்த இடம் சின்னதாக இருந்ததும் செல்விக்கு அது பிடிக்கவில்லை. ஆனால் பாக்கியாவிற்க்கு பிடித்து விடுகிறது.
புதிய கடை
அதற்கு வாடகை எவ்வளவு என்று கேட்க, அட்வான்ஸ் ஒரு லட்சம் வாடகை 15000 என்று சொல்கிறார்கள். பிறகு பாக்யா வாடகைக்கு பேசிவிட்டு அட்வான்ஸ் கொடுத்து விட்டு போகிறார். அடுத்ததாக செல்வி வீட்டில் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செல்வி நம்ம அட்வான்ஸ் கொடுத்த கடைக்காரர் நீ பெரிய இடத்துக்கு போகணும்னு உன்ன வாழ்த்துனாரு ஆனா நீ பெரிய இடத்தில் இருந்துதான் இங்க வந்து இருக்கேன்னு அவருக்கு தெரியாதுல அக்கா.
செல்வியின் வருத்தம்
நீ அவ்ளோ பெரிய இடத்தில் இருந்து இப்போ இந்த சின்ன இடத்துக்கு வந்ததை பார்க்க எனக்கே கஷ்டமா இருக்கு என்று செல்வி சொல்ல, நாம எதிர்பாக்காத அளவிற்கு வேகமாக வளர்ந்தோம். ஆனா சதியால் கீழே விழுந்துட்டோம். இது கூட நாம நிறைய விஷயத்தை பார்க்கிறதுக்காக நமக்கு கிடைச்ச வாய்ப்பாக கூட இருக்கலாம். இனி படிப்படியா மேல போகலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
பாக்கியா பதிலடி
பிறகு வீட்டிற்கு வந்து எல்லாரையும் கூப்பிட்டு வைத்து தான் புதியதாக கடை தொடங்குவது பற்றி சொன்னதும் குடும்பத்தினர் எல்லோரும் வழக்கம் போல வேண்டாம் என்று சொல்கின்றனர். எழில் கூட நீங்க சின்ன இடத்தில் கடை திறக்க வேண்டாம் இன்னும் பெரிய இடமா திறக்கலாம் உனக்கு நான் பணம் தரேன் என்று சொல்ல, ஆனால் பாக்யா நான் யார்கிட்டயும் பணம் கேட்க போறது கிடையாது, உங்க கிட்ட பணம் இப்போ இருக்கு அதை நீங்க சேர்த்து வச்சுக்கோங்க என்று சொல்லிவிடுகிறார். ஈஸ்வரி திமிராக பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரிக்கும் பதிலடி கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications