பாக்கியலட்சுமி சீரியல் சொதப்பல்.. எத்தனை வருஷமா இப்படி..? இதை கொஞ்சம் கவனிச்சி இருக்கலாமே..!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும் இந்த சீரியலிலும் சில சொதப்பல்கள் இருக்க தான் செய்கிறது. அதை சீரியல் ரசிகர்கள் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி பல வருடங்களாக கர்ப்பமாகவே இருந்து கொண்டிருக்கிறாரே அதை கவனித்தீர்களா?.. அது பற்றிய சொதப்பல்களை விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்து அதிகமான ரசிகர்களால் பாராட்டப்படும் சீரியலாக பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். பெண்களுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் பாக்யாவின் வாழ்க்கை பலருக்கும் எடுத்துக்காட்டாகவும் ரோல் மாடலாகவும் இருக்கிறது.
ஒரு குடும்பப் தலைவி தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் எடுத்து வைக்கும் முயற்சிகளும் அதில் சந்திக்கும் தோல்விகளும் அவமானங்களும் பற்றி தான் பாக்கியலட்சுமி சீரியல் ஒவ்வொரு நாளும் பயணிக்கிறது. இதனாலேயே இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். எந்த சீரியலில் பாக்கியா ஜெயிப்பதை கூட பல பெண்கள் தாங்களே ஜெயித்தது போன்று இந்த சீரியலுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த சீரியலிலும் சில சொதப்பல்கள் இருக்கத்தான் செய்கிறது. அதை சீரியல் அணியினர்கள் கண்டுகொண்டு கவனிக்காத மாதிரி இருக்கிறார்களா? அல்லது இன்னும் சில வருடங்கள் போகட்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? என்று தான் தெரியவில்லை. பொதுவாக கர்ப்பமாக இருப்பவர்களுக்கு பத்து மாதத்தில் குழந்தை பிறந்துவிடும். ஆனால் கர்ப்பமாக இருப்பதாக நடிப்பவர்களுக்கு வருட கணக்கை தாண்டியும் குழந்தை மட்டும் பிறக்காது என்று பல சீரியல்களில் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள்.
அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலும் அந்த வரிசையில் இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் அவருக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இனியா பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே ஜெனி கர்ப்பமாக இருப்பதாக கதை தொடங்கியது. இப்போது இனியா 12 ஆம் வகுப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கும் போய்விட்டார். ஆனால் ஜெனி இன்னும் கர்ப்பமாகத்தான் இருக்கிறார். இந்த லாஜிக்கை சீரியல் டீம் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் போல.

அல்லது இனியாவை பார்த்து அதிகமான ரசிகர்கள் இன்னுமா இவர் ஸ்கூல் படிக்கிறாரா? என்று மீம்ஸ்களில் போட்டு கலாய்த்து கொண்டிருந்தனர். அதனால் இனியா கதையில் மட்டும் வருடத்தை கூட்டியவர்கள் அதே வீட்டிற்குள் இருக்கும் ஜெனியை பற்றிய கதையை கவனிக்க மறந்து விட்டார்கள் போல.. ஏற்கனவே இப்போதுதான் ஜெனியின் வளைகாப்பு பற்றி பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது இந்த நிலையில் ஜெனிக்கு வளைகாப்பு முடிந்தததும் குழந்தை பிறக்குமா? இல்லை இன்னும் பல வருடங்கள் ஆகுமா என்று பொறுத்து இருந்து பார்த்தால் தான் தெரியும்.
ஏற்கனவே விஜய் டிவியில் பெரும்பாலான சீரியல்களில் தடுக்கி விழுந்து வயிறு வலி வந்து குழந்தை பிறந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஜெனிக்கு ஏற்கனவே தடுக்கி விழுந்து வயிறு வலி வந்து விட்டது. ஆனால் அப்போதும் குழந்தை பிறக்கவில்ல. இதனால் இனி என்ன மாதிரி சூழ்நிலையில் ஜெனிக்கு குழந்தை பிறக்கும் என்றும் ரசிகர்கள் கிண்டலோடு கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றையும் இன்னும் சில நாட்களுக்கு பொறுமையாக இருந்தால்தான் தெரியும்.












Click it and Unblock the Notifications