ராதிகா பற்றி செழியன் சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் கோபி.. உடைபட்ட உண்மை.. கோபத்தில் ஈஸ்வரி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 27ஆம் தேதி எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராதிகா தான் இனியாவை ஜெயிலுக்கு போகாமல் காப்பாற்றியது என்ற உண்மையைச் செழியன் மூலமாக கோபி தெரிந்து இருக்கிறார். அதே நேரத்தில் செழியன் மீது ஈஸ்வரி கோபப்படுகிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா இனியாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இனியா மீண்டும் மீண்டும் சாரிமா பிரெண்ட்ஸ் கம்பெல் பண்ணாங்க.. அதனாலதான் போனேன் என்று சொன்னதும் பிரண்ட்ஸ்ங்க கம்பெல் பண்ணா உனக்கு அறிவு எங்க போச்சு? என்று பாக்யா திட்டிக் கொண்டிருக்கிறார். அதைவிட நம்முடைய நல்ல நேரம் எதுவும் ஆகல.. ராதிகா மட்டும் அங்கு வரலைன்னா நீ ஜெயிலில் இருந்திருப்பா.

நாளைக்கு உனக்கு காலேஜில் டீசி கொடுத்திருப்பாங்க. இதெல்லாம் உனக்கு தேவையா? என்று கோபப்படுகிறார். அதோடு நீ எங்க போனாலும் உன் கூடவே வந்து நீ என்ன பண்ணுவேன்னு நான் பார்த்துக்கொண்டே இருக்கணுமா? போக கூடாதுன்னு சொன்னா நாங்க பழைய ஆளா தெரிவோம். நம்பி அனுப்பி வச்சா இந்த மாதிரி பிரச்சனையை கொண்டு வருவீங்க.. நாங்க என்னதான் பண்ணுறது என்று நேற்று போலவே இன்றும் தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார்.
அப்போது ஈஸ்வரி இந்த பிரச்சனை எல்லாத்துக்கும் காரணம் செழியன் தான். அவன் அப்பவே இனியா எங்க போனான்னு தெரியல என்று சொல்லி இருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என்று செழியன் மீது கோபப்பட செழியன் நீங்க பயப்படக்கூடாது என்று சொல்லாமல் இருந்திருப்பான் என்று எழில் சப்போர்ட் செய்ததும் ஈஸ்வரி கோபப்பட்டு ரூமுக்கு சென்று விடுகிறார்.

மறுபக்கம் வீட்டிற்கு வந்த கோபி ராதிகாவிடம் என்ன ஆச்சு என்ன பிரச்சனை என்று கேட்க, ராதிகா பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருக்க, உடனே பாக்கியா வீட்டிற்கு கிளம்பி வர, அங்கு கதவு பூட்டி இருப்பதை பார்த்து இனியாவுக்கு போன் செய்கிறார். ஆனால் இனியாவின் போன் சுவிட்ச் ஆப்பில் இருப்பதால் அடுத்து செழியனுக்கு போன் செய்து பார்க்க செழியன் போனை எடுக்கிறார்.

அவரிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க, செழியன் நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சொல்லி ராதிகா தான் இனியா ஜெயிலுக்கு போகாமல் காப்பாற்றியது என்று சொல்ல கோபி ராதிகாவை நினைத்து பெருமைப்படுகிறார். பிறகு ராதிகாவுக்கு நன்றி சொல்வதற்காக வீட்டுக்கு வந்து ரூம் கதவை தட்ட ராதிகா கதவை திறக்காமல் அமைதியாகவே இருக்கிறார். மறுபக்கத்தில் பாக்கியா தண்ணீர் எடுத்துக்கொண்டு ரூமுக்கு வர அழுது கொண்டிருந்த இனியா கண்களை துடைக்க அப்போது இனியா தூங்குவது போல் இருக்கிறார்.

பாக்கியா இனியாவின் தலையை கோரி விடவும் இனியா கண் திறந்து அம்மாவை கட்டிப்பிடித்துக்கொள்கிறார். பிறகு மீண்டும் இனியா மன்னிப்பு கேட்க, அதற்கு பாக்யா பிரண்ட்ஸ் கூப்பிட்டாங்கன்னா எங்க வேணாலும் போயிடுவியா? நாளைக்கு விஷத்தை கொண்டு வந்து கொடுத்து கம்பல் பண்ணி குடிக்க சொன்ன நீ குடிச்சிடுவியா என்று திட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications