பாக்கியலட்சுமி: இனியாவுக்கு அடுத்த பிரச்சனை.. ராதிகா கொடுத்த அதிர்ச்சி! ஈஸ்வரி இப்படி பேசிட்டாங்களே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 30-ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் இனியா தன்னுடைய தோழிகளோடு பப்புக்கு போய் பிரச்சனைகளில் சிக்கியது தெரிந்து கோபி வீட்டிற்கு வந்து பாக்யாவை திட்டி விட்டு இனியாவை தன்னோடு கூப்பிட்டு இருக்கிறார். அடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி இனியாவை தன்னோடு கூப்பிட்டு, அதற்காக பாக்கியா நீங்க அப்பா என்ற கடமையை மறந்து போய்விட்டு இப்பொழுது நான் குழந்தையை சரியா வளர்க்கலை என்று என் மீது பழியை போடுறீங்களா? என்று பல்வேறு கேள்விகளை கேட்டு திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு கோபி நீ ரொம்ப ஓவரா பேசுற என்று சொல்லிவிட்டு இனியாவை தன்னோடு அழைக்க இனியா நான் வரல என்று சொல்கிறார்.

ஆனாலும் விடாத கோபி டாடி கூட வாடா என்று சொல்ல, இனியா நான் அம்மா கூடவே இருக்கேன் என்று அதிர்ச்சி கொடுக்க ஈஸ்வரி ஏற்கனவே உன்னோடு வந்து நாங்க பட்ட அவமானங்களும் பிரச்சனைகளும் போதாதா? இனிமே யாரும் உன் கூட வர மாட்டாங்க நாங்களே இனியாவை பாத்துக்குவோம். இனியாவை பாத்துக்குறதுக்கு நாங்க எல்லாரும் இருக்கோம் என்று அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே துரத்துகின்றனர்.

வீட்டு வாசலில் நின்று கோபி பீல் பண்ணி விட்டு பிறகு கிளம்பி போகிறார். பிறகு ராதிகா வீட்டிற்கு வந்த கோபி ராதிகாவிடம் நடந்த விஷயத்தை சொல்ல ராதிகா என்னுடைய கஷ்டங்களை சொல்லும்போது உங்களுக்கு பெரிய விஷயமாக தெரியல... ஆனா நீங்க மீண்டும் மீண்டும் உங்களுடைய குடும்பம் தான் வேண்டும் என்று அங்க போய் அவமானப்பட்டுட்டு வரீங்க நான் இப்போ உங்களுக்கு ஆறுதல் சொல்லனுமா? என்று ராதிகாவும் திட்டி விடுகிறார்.

மறுபக்கத்தில் இனியா காலேஜுக்கு வந்த இடத்தில் அவருடைய கேங்கை பிரின்ஸ்பால் உள்ளே கூப்பிட்டு இனிமே உங்களுக்கு இந்த காலேஜில் இடம் கிடையாது நாளைக்கு உங்க பேரன்ட்ஸ் வந்தவுடன் டிசி வாங்கிக்கோங்க. அதுவரைக்கும் கிளாசுக்கு போகக்கூடாது என்று அதிர்ச்சி கொடுக்க எல்லோரும் பிரின்சிபாலிடம் எவ்வளவோ கெஞ்சி பார்க்கின்றனர். ஆனால் அவர் முடியாது என்று கறாராக சொல்ல அடுத்து என்ன செய்யலாம் என்று வெளியே நின்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த கட்டத்தில் ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்யாவை கூப்பிட்டு இருவரும் நாங்க இனி இனியாவை பார்த்துகிறோம் என்று சொல்கின்றனர். தினமும் இனியாவை காலேஜ் கொண்டு போய் விட்டுவிட்டு மறுபடியும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துரலாம் அதற்காக ஒரு ஆட்டோ ஏற்பாடு பண்ணுங்க.. நாமும் பாக்கியாவிற்கு துணையாய் இருக்கணும்.
எல்லா வேலையையும் பாக்கியாவே தலையில் தூக்கி போட்டுட்டு சுமந்துட்டு இருந்தா எப்படி...? நாமும் அவளுக்கு துணையாய் இருக்கணும் என்று ஈஸ்வரி சொல்ல ராமமூர்த்தி சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications