பாக்கியலட்சுமி: ஈஸ்வரி மீது விழுந்த கொலை பழி.. பாக்யா வேற இப்படி சொல்றாங்க! ராதிகா கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 19ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராதிகாவிற்கு வயிற்றில் அடிபட்டதால் கரு கலைந்து விட்டது என்று மருத்துவமனையில் சொல்ல அதை கேட்டு கோபி அதிர்ச்சியாகி இருக்கிறார். அப்போது ராதிகா ஈஸ்வரி மீது குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் டாக்டர் ராதிகாவை பரிசோதனை செய்து கொண்டிருக்க வெளியில் எல்லோரும் பதற்றத்தோடு இருக்க, கோபி அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது என்று மயூவிடம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது கமலா அது எப்படி எதுவும் ஆகாமல் இருக்கும் வயிற்றில் பிள்ளையை வைத்துக்கொண்டு கீழே விழுந்து இருக்கா என்று கோபப்படுகிறார்.

பிறகு டாக்டர் கோபியையும் கமலாவையும் உள்ளே கூப்பிட்டு குழந்தை கலைந்து விட்டதாக சொல்ல, இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். வெளியில் வந்த கமலா மயூவை பிடித்துக் கொண்டு உனக்கு தம்பியோ தங்கச்சியா வரும்னு ஆசையாக காத்திருந்தேன். இப்ப எதுவும் இல்லாமல் போயிடுச்சு என்று கதறி அழுகிறார். பிறகு ராதிகாவை பார்க்க போன கோபி கையை பிடித்துக் கொண்டு ஆறுதல் சொல்ல போக ராதிகா உங்களை பார்க்கவே புடிக்கல,

இந்த குழந்தை வேண்டாம் என்று சொன்னீங்க இப்போ எதுவும் இல்லாம போயிடுச்சு என்று கோபப்படுகிறார். கமலா எல்லாத்துக்கும் காரணம் உங்க அம்மா தான் என்று அதிர்ச்சி கொடுக்க கோபி வாய்க்கு வந்ததெல்லாம் பேசாத எங்க அம்மா அப்படி எதுவும் செய்ய மாட்டாங்க என்று சொல்ல அவங்க ராதிகா கீழே விழும்போது பின்னாடி நின்னுட்டு இருந்தாங்க என்று கமலா சொல்ல, ராதிகா யோசித்துப் பார்த்து அவங்க தான் என்ன புடிச்சு தள்ளுனாங்க என்று கோபியிடம் கோபப்படுகிறார்.

வெளியே வந்த கோபி ஈஸ்வரி ஏற்கனவே சொன்ன விஷயங்களை நினைத்து பார்த்து அம்மா தான் இப்படி பண்ணிட்டாங்களா என்று நம்புகிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரி போன் போட்டு ராதிகாவிற்கு என்ன ஆச்சு குழந்தைக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே என்று கேட்க கோபி எப்படி எதுவும் ஆகாமல் இருக்கும்? அந்த குழந்தையே இல்லாமல் போயிடுச்சு. இப்போ உங்களுக்கு சந்தோஷமா? என்று திட்டுகிறார்.

இதை அடுத்து ஈஸ்வரி பாக்யாவிடம் வந்து விஷயத்தை சொல்லி நான் தான் காரணம் என்று சொல்றாங்க என்று புலம்ப பாக்கியா அவர் ஏதோ வருத்தத்தில் சொல்றார். நீங்க அதை எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க, அந்த வீட்டில யாருமே இல்ல நீங்க எங்க வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட அதற்கு ஈஸ்வரி வேண்டாம் நான் அந்த வீட்டுக்கு போறேன் என்று கிளம்பி போகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications