பாக்கியலட்சுமி: அம்மா மீது கொலை பழி சொன்ன கோபி.. ஈஸ்வரி எடுத்த முடிவு.. பாக்கியா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 20ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராதிகா கர்ப்பம் கலைந்ததற்கு காரணம் ஈஸ்வரி தான் என்று கமலாவோடு சேர்ந்து கோபியும் சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். அதே நேரத்தில் பாக்கியா ஈஸ்வரி விஷயத்தில் முக்கிய முடிவு எடுத்திருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி ராதிகாவை நலம் விசாரிக்க ராதிகா என் மூஞ்சிலேயே முழிக்காதீங்க, நான் உங்ககிட்ட ஒன்னே ஒன்னு தான் கேட்கிறேன் நீங்க இந்த இடத்தை விட்டு வெளியே போயிருங்க என்று துரத்தி விட கோபி வெளியே வந்ததும் ஹாஸ்பிடலுக்கு வந்த ஈஸ்வரி ராதிகாவுக்கு எப்படி இருக்கு என்று கேட்க, கோபி நீங்க எதற்கு இங்கே வந்தீங்க? என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே ராதிகா எப்போ எப்படி இருக்க பரவாயில்லையா? என்று ராதிகா ரூமிற்குள் ஈஸ்வரி போய் விடுகிறார்.

அதோடு ராதிகா கையை பிடித்து ஈஸ்வரி ஆறுதல் சொல்ல போகும்போது ராதிகா எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான். உங்களால தான் என் குழந்தை இல்லாமலே போயிடுச்சு. இப்போ உங்களுக்கு சந்தோஷமா என்று கோபப்படுகிறார். அப்போது கமலா வந்து ராதிகாவை புடிச்சு தள்ளுனதை நான் ஏன் ரெண்டு கண்ணால பார்த்தேன் என்று சொல்ல, ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். நான் எதுவும் பண்ணல நீங்க புரியாம பேசுறீங்க என்று ஈஸ்வரி சொல்ல, நீங்க தான் எல்லாமே பண்ணுனீங்க என்று ராதிகாவும் அதிர்ச்சி கொடுக்கிறார்.
கமலா இந்த அம்மாவை வீட்டுக்குள்ள சேர்க்க வேண்டாம் என்று நான் எவ்வளவோ சொன்னேன் கேட்டீங்களா? கொலைக்காரி கூடவே வைத்திருக்கோம் என்று சொல்ல, நீயெல்லாம் ஒரு பொம்பளையா என்று அவமானப்படுத்தும் போதும் கோபி அமைதியாகவே நிற்க ராதிகா வெளிய போயிடுங்க என்று கோபப்படுகிறார். ரூம்மை விட்டு வெளியே வந்த ஈஸ்வரி கோபியிடம் நான் எதுவும் பண்ணல. நீயாவது என்னை நம்பு என்று அழுகிறார்.

ஆனால் கோபி ஆரம்பத்தில் இருந்தே நீங்க இந்த குழந்தை வேண்டாம் கலைச்சிடு கலைச்சிடுன்னு சொல்லிட்டே இருந்தீங்க. பிடிக்காத வாழ்க்கையில் இருந்து வெளியே வந்து பிடிச்ச வாழ்க்கையை வாழ தொடங்கினேன். குழந்தை உருவானதும் இந்த குழந்தை வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தீங்க. இப்ப நீங்க நினைச்ச மாதிரியே இந்த குழந்தை இல்லாம போயிடுச்சு. என் குழந்தை செத்து போயிடுச்சு.. உங்களுக்கு சந்தோஷமா? என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

அப்போது நான் எதுவுமே பண்ணல என்று ஈஸ்வரி அழுது புலம்பி அப்படியே ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்கிறார். அந்த நேரத்தில் பாக்யா ஈஸ்வரியை பார்க்க ராதிகா வீட்டிற்கு வந்து கதவை தட்ட திறக்காததால் ஈஸ்வரிக்கு போன் பண்ணுகிறார். அப்போது ஈஸ்வரி அழுதப்படியே அங்கு நடந்ததை மறைத்து விடுகிறார். ஆனால் ஈஸ்வரி அழுததை போனில் கேட்ட பாக்கியா ஈஸ்வரிடம் மேலும் மேலும் துருவித் துருவி கேள்வி கேட்க ஈஸ்வரி ஃபோனை வைத்து விடுகிறார்.
அதனால் செழியனை வைத்து கோபிக்கு போன் செய்ய அவர் அம்மா இங்கே தான் வந்தாங்க ஆனா இப்போ பக்கத்துல இல்ல பக்கத்தில் எங்கேயாவது போயிருப்பாங்க என்று சொல்கிறார். அதனால் பாக்கியா ஈஸ்வரி எங்க போனாங்க தெரியலையே என்று குழப்பத்தில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications