பாக்யா உருப்படியாக பேசிய வார்த்தை.. கதையில் ஏற்பட்ட மாற்றம்.. இன்று நடந்த அதிரடி.. பலருக்கு பாடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 6-ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். சில மாதங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி சீரியலில் லாஜிக்கே இல்லாமல் கதை நகர்ந்து வந்த நிலையில் இன்றைய எபிசோடில் பாக்கியா ஜெனி இடம் பேசிய வார்த்தைகள் மற்றும் அறிவுரைகள் பாராட்டும் வண்ணம் இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராமமூர்த்தி இனியாவுக்கும் ஜெனிக்கும் தான் முதன்முதலில் ஈஸ்வரியை தியேட்டருக்கு கூட்டிட்டு போன சம்பவத்தை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ஜெனி போனையே நோண்டிக் கொண்டிருக்கிறார். பிறகு ராமமூர்த்தி கதை சொல்லி முடித்து போன பிறகு இனியா ஜெனியிடம் போன்ல என்ன பார்த்துட்டு இருக்கீங்க என்று கேட்க அதற்கு செழியன் லைவ் லொகேஷன் அனுப்பினான் அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார்.

இதைப்பற்றி இனியா பாக்கியாவிடம் சொல்கிறார். மறுபக்கத்தில் ஈஸ்வரி மயூவிடன் சிப்ஸ் சாப்பிடுறியா என்று சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் கமலா இவ கூட பேசாதே என்று மயூவை உள்ளே அனுப்புகிறார். பிறகு வழக்கம் போல ஈஸ்வரிக்கும் கமலாவிற்கும் வாக்குவாதம் வருகிறது. அங்கு ராதிகாவும் கோபியும் வந்து என்ன பிரச்சனை என்று கேட்க, இருவரும் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு ரூமிற்கு போய்விடுகின்றனர்.

மயூவிடம் ராதிகா என்ன பிரச்சனை என்று கேட்க மயூவும் ஒன்னும் இல்லை என்று சொல்லி விடுகிறார். இதைத்தொடர்ந்து பாக்யா, ஜெனி, அமிர்தா மூவரும் கிச்சனில் இருக்க ஜெனி இன்றைக்கு தான் நான் நன்றாக தூங்கினேன். பாப்பா நல்லா தூங்குனதால் தான் என்னால் தூங்க முடிந்தது என்று சொல்லிக் கொண்டிருக்கும் இப்போது பாக்கியா ஜெனியை வாக்கிங் போக கூப்பிடுகிறார்.

அதற்கு ஜெனி புடவை கட்டிக் கொண்டு வரவா என்று கேட்க வேண்டாம் நீ வாக்கிங் போற மாதிரி டிரஸ் போட்டுட்டு வா என்று சொல்ல, ஜெனி டிரஸ் மாற்றி விட்டு வர செழியன் அதை பார்த்து அசந்து போய் நிற்கிறார். பாக்யாவும் கண்ணு பட்டுரும் என்று சொல்கிறார். பிறகு பாக்யாவும் வாக்கிங் போய்க் கொண்டிருக்கும் போது உன்னிடம் கொஞ்சம் பேசணும் என்று பாக்யா சொல்ல என்னவென்று ஜெனி கேட்டதும் நீ எப்பவும் செழியனை பற்றியே யோசிச்சிட்டு இருக்கியா? என்று கேட்க, அதற்கு ஜெனியும் ஆமாம் என்று சொல்கிறார்.

அதற்கு நீ ஏதாவது படிக்க போறியா? இல்லனா வேலைக்கு போக போறியா? என்று பாக்கியா பக்குவமாய் பேசுகிறார். அதற்கு ஜெனியும் ஆமாம் நான் சும்மாவே இருப்பதால்தான் செழியன் பற்றி யோசித்துக் கொண்டே இருக்கிறேன் என்று சொல்லி, நானும் இனி ஏதாவது வேலைக்கு போகணும் இல்லனா வீட்டில் இருந்து வேலை பார்க்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

சில மாதங்களுக்கு முன்புவரைக்கும் இந்த சீரியலில் லாஜிக்கே இல்லாமல் கதை பயணித்துக் கொண்டிருந்தது. இதனால் இந்த சீரியலுக்கு அதிகமான நெகட்டிவ் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று எபிசோடில் ஒரு மாமியார் தன்னுடைய மருமகளிடம் தெரியும் மாற்றத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விடாமல் அவருடைய மனதை மாற்ற வேண்டும் என்று அவருடைய மனதிற்கு பிடித்த மாதிரி அவர்களுடைய வாழ்க்கையை திருப்ப பார்க்கிறார்.

வீட்டுக்குள்ள அடைந்து கொண்டு கணவனுக்கு சேவை செய்து கொண்டிருந்தால் நல்ல மனைவி என்றெல்லாம் இல்லை உன்னுடைய கனவை நோக்கி நீ ஓட வேண்டும் உன்னுடைய வாழ்க்கையை நீதான் வாழ வேண்டும் என்று பாக்யா பேசியது அருமையாக இருந்தது. அதிலும் சீரியலில் மருமகள் என்றால் புடவை கட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் இருக்கும் நிலையில் இன்று பாக்கியா தன்னுடைய மருமகளை ட்ராக் சூட் மற்றும் டீசர்டோடு வாக்கிங் கூட்டிட்டு போவது பிறகு அவருடைய மனதை பக்குவமாக மாற்றுவது என்று கதை நல்ல திருப்புமுனை பெற்றிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+