நான் அப்படித்தான் இருப்பேன்! ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுத்த பாக்யா.. திட்டிய ராதிகா.. உடைபட்ட உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 7-ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஜெனி மார்டன் உடையில் வாக்கிங் வந்ததை பார்த்ததும் ஈஸ்வரி கோபப்பட்டு பாக்கியாவை திட்ட, அதற்கு பாக்யா எதிர்பார்க்காத பதிலை சொல்லிவிட்டு போகிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் வாக்கிங் வந்த இடத்தில் பாக்யாவும் ஜெனியும் ஈஸ்வரி உட்கார்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியாகின்றனர். இருவரும் ஈஸ்வரி கண்ணில் படாமல் எஸ்கேப் ஆகிவிட வேண்டும் என்று முயற்சி செய்ய ஈஸ்வரி அவர்களை பார்த்து விடுகிறார். அதோடு ஜெனியை பார்த்து என்ன ட்ரெஸ் இது என்று கோபப்பட, அந்த நேரத்தில் கோபி அங்கு வந்து ஜெனியிடம் நலம் விசாரிக்கிறார்.

பிறகு கோபி போனதும் பாக்யா நைட் எல்லாம் தூங்கலையா அத்தை? கண்ணெல்லாம் சிவந்து போய் இருக்கு என்று ஈஸ்வரியிடம் பேச்சை மாற்ற ஆனாலும் அசராத ஈஸ்வரி நீ பேச்சை மாற்றுறியா? இது என்ன டிரஸ்? என்று கோவப்பட அதற்கு பாக்யா நம்ம புடவை கட்டி பழகிட்டோம். அவ ஃப்ரீயா டிரஸ் போடட்டுமே என்று சொல்ல, இதெல்லாம் உன் வேலை தானா என்று ஈஸ்வரி கேட்க, ஆமாம் என்று பாக்யா சொல்கிறார்.

நான் இல்லன்னதும் உன் இஷ்டத்துக்கு ஆடுறியா? என்று ஈஸ்வரி கேட்க ஆமா அப்படித்தான் ஆடுவேன். உங்களுக்கு பொறாமையா இருந்தா நீங்க வீட்டுக்கு வந்துருங்க என்று பாக்கியா சொல்ல, நான் என் பையனோட தான் இருப்பேன் என்று ஈஸ்வரி பதில் சொல்கிறார். பிறகு உனக்கு ரெஸ்டாரண்டுக்கு போக டைம் ஆகலையா? நீ போ என்று பாக்யாவை ஈஸ்வரி அனுப்புகிறார்.
பிறகு கோபி வந்ததும் ஈஸ்வரி வீட்டில் கமலா பேசியதை எல்லாவற்றையும் சொல்ல நீங்க வாங்கம்மா இதுக்கு ஒரு முடிவு கட்டுரேன் என்று கூட்டிட்டு போய் எங்க அம்மா மனசு கஷ்டப்படுற மாதிரி நீங்க பேசினீங்களா? என்று கமலாவிடம் கேட்க, கமலா நான் அப்படி ஒன்றும் பேசலையே என்று சொல்ல, ஈஸ்வரி சத்தியமா இவ பேசினா என்று சொல்கிறார். அதற்கு கோபி எங்க அம்மா பொய் சொல்ல மாட்டாங்க என்று ஈஸ்வரிக்கு சப்போர்ட்டாக கமலாவை திட்டி விட்டுப் போகிறார்.

பிறகு ராதிகா நீ அப்படி சொன்னியா அம்மா என்று கேட்க, கமலா இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ராதிகா மயூவை கூப்பிட்டு விசாரிக்க மயூ உண்மையை சொல்லிவிட ராதிகா அம்மாவை பிடித்து திட்டுகிறார். அடுத்ததாக பாக்கியா ரெஸ்டாரண்டில் இருக்கும் போது பார் வைத்தவர் வந்து கடையை காலி பண்ணிக் கொண்டிருக்க அவரிடம் பாக்யா மீதம் தரவேண்டிய பணத்தை தாங்க என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது அவர் தர முடியாது என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் பழனிச்சாமி வர பழனிச்சாமி பார் ஓனரிடம் பேச அவர் உடனே பணத்தை கொடுத்து விட்டு போகிறார். பிறகு பாக்கியா அவரிடம் விமலை இனியாவோட காலேஜ்ல பார்த்தேன் என்று போட்டுக் கொடுக்க பழனிச்சாமி விமல்கிட்ட இதை பற்றி பேசுறேன் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications