ஜெனி கேட்ட சரியான கேள்வி! இது பலருக்கும் பாடம்.. கடைசியில் ரசிகர்கள் சொன்னதே நடந்துவிட்டது!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 28ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் மன்னிப்பு கேட்ட செழியனிடம் ஜெனி நடந்து கொண்ட விதம் இன்று அனைவரையும் பாராட்ட வைத்திருக்கிறது. இதுவரைக்கும் இந்த சீரியலில் பல சொதப்பல்கள் நடந்திருந்தாலும் இன்று செழியன் மற்றும் ஜெனி பேச்சுவார்த்தை தெளிவாக இருந்தது.
அதே நேரத்தில் செழியன் மற்றும் ஜெனி பிரச்சனை இன்றைய எபிசோடில் முடிவுக்கு வந்திருக்கிறது. இதை தொடர்ந்து இனி பாக்யாவிற்கு என்ன பிரச்சனை வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் இனி பாக்கியா பிசினஸில் தான் பிரச்சனை வர இருக்கிறது.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் செழியனும் ஜெனியும் ஒரே ரூமுக்குள் ஒருவரை ஒருவரை பார்த்ததும் ஜெனி கோபப்பட்டு நீ தான் வெளியே பூட்டிட்டு வந்தியா என்று திட்ட அதற்கு செழியன் வெளியே பூட்டிட்டு எப்படி உள்ளே வர முடியும்? என்று பதில் சொல்ல, அதற்கு நீ என்ன வேணாலும் பண்ணுவே என்று ஜெனி கோபப்படுகிறார். அதோடு கதவை திறக்க சொல்லி கத்தி கொண்டு இருக்க, செழியன் இதுவரைக்கும் நான் எவ்வளவோ முறை உன் கிட்ட பேச முயற்சி பண்ணுனேன்.

ஆனா என்னால பேச முடியல இந்த முறை தயவு செய்து நான் பேசுவதை கொஞ்சம் கேளு என்று கெஞ்ச அதற்கு ஜெனி கோபப்படுகிறார். உன்னை எனக்கு எவ்வளவு வருஷமா தெரியும்? எவ்வளவு லவ் பண்ணி போராடி கல்யாணம் பண்ணுனோம் அப்படி இருந்தும் உனக்கு அந்த மாலினி முக்கியமா போயிட்டாளா? என்று ஜெனி கோபப்பட்டு கத்த அதற்கு செழியன் நான் செஞ்சது தப்புதான் என்ன மன்னிச்சிடு என்று காலில் விழுந்து கெஞ்ச அதற்கு ஜெனி மன்னிக்க முடியாது என்று சொல்கிறார்.

அதற்கு செழியன் நீ இல்லன்னா நான் செத்துப் போயிருவேன் என்று சொல்ல, அதற்கு ஜெனி நான் உன் கூட இருந்தா செத்துப் போயிடுவேன் என்று சொல்லி கத்தி பேசுகிறார். இதையெல்லாம் வெளியே இருந்து பாக்யா, எழில், மரியம் எல்லோரும் கேட்டு பதறுகிறார்கள். ஜெனி கதவைத் தட்ட மரியம் கதவை திறக்கப் போகிறார். அதற்கு பாக்யா வேண்டாம் கொஞ்சம் வெயிட் பண்ணலாம் என்று சொல்லுகிறார்.
பிறகு செழியன் நான் என்ன பண்ணா என்னை நம்புவே என்று சொல்லி கெஞ்ச அதற்கு ஜெனி நீ என்ன பண்ணாலும் நான் நம்ப மாட்டேன் என்று சொல்ல, மறுபடியும் செழியன் காலில் விழுந்து கெஞ்சுகிறார். அதற்கு ஜெனி பளார் பளார் என்று கன்னத்தில் அறைகிறார். அதோடு உனக்கு எப்படி எனக்கு துரோகம் பண்ண மனசு வந்து என்று மீண்டும் ஜெனி கேட்டு அழுகிறார்.

பிறகு இருவரும் மாறி மாறி குற்றம் சொல்கின்றனர். அதற்கு ஜெனி இதெல்லாம் ஒரு காரணமாக நீ சொல்லுவியா? என்று மீண்டும் சொல்லி செழியனை அடிக்கிறார். பிறகு அங்கே அமைதி நிலவ வெளியே இருப்பவர்கள் பயந்து போய் என்ன ஆச்சுன்னு தெரியலையே என்று கதவை திறந்து பார்க்க, அங்கே செழியன் ஜெனியும் கட்டிப்பிடித்து நிற்க அதை பார்த்து குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications