போகிற போக்கில் கோபி செய்த சம்பவம்.. ஈஸ்வரி மீண்டும் மாறிட்டாங்களே! ஆனால் ராதிகா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 16ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி குடும்பத்தினர் கூறியிருக்கும் நிலையில் கோபி தன்னோடு ஈஸ்வரியையும் கூட்டிட்டு போக போகிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராமமூர்த்தி பாக்யாவிடம் நாளைக்கே நாங்க இருக்கிறது உனக்கு பிடிக்கலைன்னா எங்களையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்லி தான் ஆகணும். ஏன்னா அதுக்கு காரணம் நாங்க கோபியோட அம்மா அப்பா என்று சொல்ல அதற்கு பாக்யா நான் எந்த நேரத்திலும் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். ஏன் மாமா இப்படி எல்லாம் பேசுறீங்க என்று சொல்ல எழிலும் அப்படியெல்லாம் இல்லை நீங்க எங்களுக்கு தாத்தா பாட்டி என்று சொல்கிறார்.

பிறகு ஈஸ்வரி ரூமில் இருக்கும்போது அங்கு வரும் கோபி ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். அதோடு நடக்கிறது எல்லாத்தையும் பார்க்கிறதுக்கு எனக்கு செத்துடலாம் போல இருக்கு என்று அழுகிறார். அதை பார்த்து ஈஸ்வரி மனம் மாறுகிறார். அப்போது இவங்க எல்லாரும் என்னை பத்தி பேசுறதை விட நீங்க எனக்கு சப்போர்ட்டாகவே இல்லை என்று நினைக்கும் போது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு.
நானும் இந்த வீட்டை விட்டு இனி போக போறேன். நீங்களும் என் கூடவே வந்துருங்க என்று சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். ஆனாலும் விடாத கோபி நீங்க என்கூட வந்து தான் ஆகணும் நீங்க இல்லன்னா நான் செத்துடுவேன் என்று சொல்ல ஈஸ்வரி வேறு வழி இல்லாமல் சரி என்று ஒத்துக் கொள்கிறார். பிறகு பாக்யாவும் எழிலும் கிச்சனில் பேசி சிரித்து கொண்டிருக்கின்றனர்.
அங்கு வரும் கோபி என்னை அசிங்கப்படுத்தி விட்டு நீங்க சந்தோசமா இருக்கீங்களா? உங்களுக்கு ஆப்பு வைக்க போறேன் என்று சொல்லுகிறார். அப்போது எழில் நாங்க உங்களை அசிங்கப்படுத்துறோம்னு தெரியுதில்ல அப்புறம் எதற்காக இந்த வீட்ல இருக்கிறீங்க வெளியே போங்க என்று சொல்ல உனக்கு வாழ்க்கையில் ஒரு பெரிய பிரச்சனை வந்துச்சுல... கணேசன்... அந்த நேரத்தில் நான் உன் கூட நின்னேன்.
அதெல்லாம் மறந்து போச்சா? ஆனா நீ என்னை கேவலப்படுத்தி வெளியே அனுப்புற என்று எழில் இடம் சொல்ல அதற்கு எழில் நீங்க இப்படி சொல்லிக் காட்டுவதிலே தெரியுது உங்க மனசுல எவ்வளவு வக்கிரம் இருக்குதுன்னு என்று பதிலடி கொடுக்கிறார். அந்த நேரத்தில் பாக்யாவுக்கு செல்வி போன் பண்ணி பாக்யாவை ஹோட்டலுக்கு கூப்பிட எழில் என்னாச்சுன்னு கேட்டதும் ரெஸ்டாரண்டில் ஏதோ பிரச்சனையாம் என்னை சீக்கிரமா வர சொல்லுறா நான் போய் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு,
எழிலிடம் தேவையில்லாதவர்களிடம் தேவையில்லாத விஷயத்தை பேசிகிட்டு நீ நிற்காத நீ உன்னுடைய வேலையை போய் பாரு என்று சொல்ல கோபி என்னை நீங்க ரெண்டு பேரும் அசிங்கப்படுத்திக்கிட்டே இருக்கீங்க இல்ல.. நான் உங்களுக்கு பெரிய ஆப்பா வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி ராதிகாவிடம் வருகிறார். ராதிகா தன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து விட்டு போவோமா என்று கேட்க,
அதற்கு கோபி நம்ம கூட எங்க அம்மாவும் வரப்போறாங்க என்று சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார். அதோடு ஏன் இந்த தேவையில்லாத வேலை பாக்குறீங்க? உங்க அம்மாவுக்கு என்னை பிடிக்காது. எனக்கு அம்மாவை பிடிக்காது, நான் இப்போ கர்ப்பமாக இருக்கிறதும் பிடிக்காது. இப்போ அவங்க வந்தா பிரச்சனை தான் என்று சொல்கிறார். ஆனாலும் கோபி பிடிவாதமாக அம்மா கூட வருவாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications