பாக்யாவை பழிவாங்க நினைத்து சிக்கலில் சிக்கும் கோபி.. ராமமூர்த்தியே இப்படி சொல்லிட்டாரு? செம சீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 17ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் கோபியோடு ஈஸ்வரியின் வீட்டை விட்டுப் போகும்போது பாக்யா தடுக்காததால் ஈஸ்வரி கோபித்துக் கொண்டு போக ராமமூர்த்தி எதிர்பாராத பதிலை சொல்கிறார்.

இந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி ராமமூர்த்தி இடம் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் தனியா வாங்க என்று கூப்பிட அதற்கு ராமமூர்த்தியும் நானும் உங்கிட்ட சில விஷயங்களை கேட்கணும் என்று உன் பிள்ளை இவ்வளவு பெரிய கேடுகெட்ட வேலை பண்ணியிருக்கிறான். அதை தெரிஞ்சும் நீ என்கிட்ட இருந்து மறைச்சிருக்க என்ன என்று திட்ட அதற்கு ஈஸ்வரி மத்தவங்க தான் அவங்க மேல கோபப்படறாங்கன்னா நீங்களுமா?

Baakiyalakshmi Serial May 17th promo and episode full update

அவன் நம்ம பெத்த பையன் என்று சொல்ல ராமமூர்த்தி மேலும் கோபப்படுகிறார். அதற்குப் பிறகு ராமமூர்த்தி ஈஸ்வரி இடம் நீ இப்படி எல்லாம் பேசிட்டு இருந்தா அவன் கூடவே கிளம்பி போறேன்னு சொல்லிடுவேன் என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி நீங்க என்ன சொல்றது நான்தான் அவன் கூட போகப்போகிறேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதற்கு ராமமூர்த்தியும் தாராளமா போ நீ அங்க போய் அனுபவிச்சா தான் உனக்கு இந்த வீட்டோட அருமையும் பாக்கியாவோட அருமையும் புரியும் என்று பதிலடி கொடுக்கிறார். அதற்கு ஈஸ்வரி நீங்க எப்படா எனை இங்கிருந்து அனுப்பலாம்னு தான் காத்து இருந்தீங்களா? என்று கேட்க, நீ ஒரு முடிவு எடுத்துட்டு அதுக்கு மத்தவங்களை குறை சொல்லாத என்று திட்டுகிறார். அடுத்ததாக கோபி ராதிகாவுடன் பெட்டியோடு கீழே வர நாங்க வீட்டை விட்டு கிளம்புறோம் எல்லாரும் சந்தோஷமா இருங்க என்று சொல்லி அம்மாவை கூப்பிட செழியன் பாட்டி உள்ள இருக்காங்க நீங்க போங்க நாங்க சொல்லிக்கிறோம் என்று சொல்கிறார்.

கோபி மீண்டும் அம்மாவை சத்தமா கூப்பிட அதற்கு எழில் இப்ப புரிஞ்சு போச்சு இப்ப பாட்டி வந்து என் புள்ள கூட தான் நான் இருப்பேன்னு சொல்லுவாங்க அதானே உங்க பிளான் என்று பேச, கொஞ்சம் அமைதியா இரு டா என்று கோபி திட்டி கொண்டு இருக்கும் போது ஈஸ்வரி பெட்டியோடு வெளியே வர அதை பார்த்து எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். இது என்ன பாட்டி டாடியோட பெட்டியா? என்று கேட்க,

கோபி அது டாடியோட பெட்டி இல்லடா பாட்டியோட பெட்டி அவங்க என்கூட தான் வராங்க என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சியோடு இருக்கின்றனர். அடுத்து கோபி எங்க அம்மா யார் கூட இருக்கணும்னு நான் தான் முடிவு பண்ணனும். என்கூட வந்து இருங்கன்னு ஒரு வார்த்தை தான் சொன்னேன் அவங்க என் மேல இருக்கிற பாசத்தால வரேன்னு சொல்லிட்டாங்க என்று சொல்லி கோபி ஈஸ்வரியோடு கிளம்ப ராமமூர்த்தி அவ போகட்டும் அமைதியா இருங்க என்று சொல்கிறார்.

பிறகு எல்லோரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது பாக்கியா அங்கு வர இனியா பாட்டியும் வீட்டை விட்டு போறாங்க என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். அப்போது கோபி அத்தை என்ன விட்டுட்டு போகாதீங்கனு கெஞ்சு.. நீ கெஞ்ச கெஞ்ச எங்க அம்மா என்கூட வரப்போறதை பார்க்கும்போது எனக்கு சந்தோசமா இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே பாக்கியா எதுவும் பேசாமல் வழி விட்டு நிற்க ஈஸ்வரியும் கோபியும் பல்பு வாங்குகின்றனர்.

அடுத்து வாசலில் நின்றபடியே ஈஸ்வரி என்னுடைய பிள்ளையை விட்டுட்டு என்னால இருக்க முடியாது பாக்யா என்று சொல்ல அதற்கு பாக்கியா நான் எதுவும் சொல்லலையே அத்தை என்று பதிலடி கொடுக்க அப்ப நான் எப்போ வெளியே போவேன்னு நீ காத்துட்டு இருந்தியா? என்று ஈஸ்வரி கேட்க, ராமமூர்த்தி நீ ஒரு முடிவு எடுத்துட்டு பாக்கியவை பேசாத என்று திட்டி போக சொல்கிறார்.

அடுத்ததாக ராதிகா வீட்டிற்கு ராதிகா வந்ததும் அவருடைய அம்மா நீ மட்டும் தனியா வந்திருக்க மாப்பிள்ளை வரலையா? என்று கேட்க பின்னாடியே கோபி இரண்டு பெட்டியோடு வர கோபியை பார்த்ததும் மயூ சந்தோஷப்படுகிறார். பிறகு கமலாவும் ஈஸ்வரியும் ஒருத்தருக்கு ஒருத்தர் முறைத்துக் கொள்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+