பாக்கியலட்சுமி சீரியலில் எத்தனை நாளைக்கு இப்படியே பண்ணுவீங்க? மீண்டும் பழைய நிலைமைக்கு வந்த கதை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 1ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ராதிகா கர்ப்பமாக இருப்பதை வீட்டில் சொல்லலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் கோபி வீட்டில் உண்மையை சொல்லாமல் ஒவ்வொரு நாளும் திணறிக் கொண்டிருக்கிறார். இது பார்க்கும் ரசிகர்களை கடுப்பாக்கி இருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராதிகா தன்னுடைய ரூமில் சின்ன சின்ன வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வரும் கோபி நீ வேலையெல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ராதிகா பிசினஸ் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று விசாரிக்க, அதற்கு கோபி பிசினஸ் நல்லா போகிறது. இப்படியே போனா சீக்கிரமா இன்னொரு பிராஞ்ச் ஆரம்பித்து விடலாம்.

ஆனால் நான் நம்ம வீட்டு கிச்சனுக்கு போனேன். பாக்கியா என்னமோ நான் பெரிய தப்பு பண்ணுற மாதிரி என்னை முறைச்சுக்கிட்டே இருந்தா. நம்ம பிசினஸை பார்த்து அவளுக்கு பொறாமை என்று பேச, அதற்கு பாக்கியா அவங்களுக்கு நான் கர்ப்பமாக இருக்கிற விஷயம் தெரியும். அவங்க என்னுடைய நடவடிக்கையை பார்த்து சந்தேகப்பட்டு கேட்டாங்க. நானும் உண்மையை சொல்லிட்டேன் என்று சொல்ல,
அதற்கு கோபி நீ எதுக்கு அவ கிட்ட சொன்ன? இல்லன்னு சொல்ல வேண்டியது தானே என்று சொல்ல அதற்கு ராதிகா அப்படி என்னால சொல்ல முடியல. இனி பாக்யாவுக்கு தெரிஞ்சு இந்த விஷயம் அவங்க மூலமா மத்தவங்களுக்கு தெரியறதுக்கு முன்னாடி நாமளே சொல்லணும். மறைந்து மறைந்து என்னால மாத்திரை சாப்பிட்டுகிட்டு இருக்க முடியாது. கூடிய சீக்கிரம் சொல்லிடுங்க என்று சொல்ல கோபி கண்டிப்பா சொல்லிடுறேன் என்று சொல்கிறார்.
அடுத்ததாக இனியா விமலுடன் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் சாட் செய்து கொண்டிருக்க பாக்யா யாரது என்று கேட்க விமல் காலையிலிருந்து இரவு வரைக்கும் ஜோக்கா சொல்லிக்கிட்டே இருக்கான் என்று சொல்ல அதற்கு பாக்கியா அவன் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது என்று கேட்க, அதற்கு இனியா அவன் தான் எனக்கு மெசேஜ் பண்ணுனான். பழனிசாமி அங்கிள் கிட்ட இருந்து வாங்கி இருப்பான் போல என்று சொல்கிறார்.
அதற்கு பாக்கியா அவனை ஒருமுறைதான் பார்த்து இருக்க, அளவா பேசு என்று அட்வைஸ் செய்ய அதற்கு இனியா நீயும் தான் பழனிச்சாமி சார்கிட்ட பேசுற என்று திருப்பி கேட்க, நான் என்ன பார்த்ததுமா பிரண்டாகி பேசிட்டு இருக்கிறோம் என்று பாக்கியா பதில் கொடுக்கிறார். மறுநாள் காலையில் பாக்கியாவும் செல்வியும் கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும்போது ஈஸ்வரி காபி குடித்துக்கொண்டிருக்க கையில் பால் பாக்கெட்டுடன் ராதிகா கிச்சனுக்கு வருகிறார்.
ஃபோனில் இன்னைக்கு ஆபீஸ் வரல வீட்டில் இருந்து வேலை பார்க்க போறேன் என்று பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து ஈஸ்வரி இன்னும் உனக்கு உடம்பு சரி ஆகலையா? என்று கேட்க அதற்கு ராதிகா இப்ப பரவாயில்ல வாந்தி கொஞ்சம் கம்மியா இருக்கு. போகப் போக சரியாகிரும் என்று சொல்கிறார். பிறகு ஈஸ்வரி இருப்பதால் ராதிகா சமைக்காமல் வெளியே கிளம்ப பாக்யா பத்து நிமிஷத்தில் சமையல் முடிஞ்சிடும் என்று சொல்ல, ஈஸ்வரி இருப்பதை கண்ணைக் காட்டி சொல்லிவிட்டு ராதிகா வெளியே செல்கிறார்.
அப்போது வாக்கிங் போயிட்டு வீட்டுக்கு வந்த கோபி ராதிகாவிடம் ஆல் தி பெஸ்ட் சொல்லு அம்மா கிட்ட விஷயத்தை சொல்லப் போறேன் என்று ஓவர் பில்டப் செய்துவிட்டு கிச்சனுக்கு வர அங்கு பாக்கியாவும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு ஈஸ்வரியை வெளியே கூப்பிட்டு விஷயத்தை சொல்ல முடிவெடுக்க ஈஸ்வரி எனக்கு கால் வலிக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் பாக்கியா இடைஞ்சல் செய்கிற மாதிரி பேசிக்கொண்டே இருக்க இதனால் கோபி விஷயத்தை சொல்லாம நீங்க பொறுமையா எழுந்து வெளியே வந்த பிறகு பேசிக்கலாம் என்று வெளியே வர அங்கு ராதிகா கோபியை பார்த்து முறைத்துக் கொண்டு திரும்பி விடுகிறார். பிறகு கோபப்பட்டு தன்னுடைய ரூமுக்கு போய் விட கோபி பின்னாடியே போய் ராதிகாவை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார்.
அப்போது ராதிகா நீங்க விஷயத்தை சொல்லுங்க. பிறகு நாம நம்ம வீட்டுக்கு போயிடலாம். நீங்க, நான், மயூ, பிறக்க போற குழந்தை எல்லோரும் ஒண்ணா சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்கிறார். உதவிக்கு எங்க அம்மாவும் இருப்பாங்க என்று சொல்ல கோபி இதுவும் நல்ல ஐடியா தான் என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து ரூமை விட்டு வெளியே வந்த கோபி அம்மாவிடம் எப்படி விஷயத்தை சொல்வது என்று விதவிதமாக பேசி பார்க்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications