பாக்கியலட்சுமி: ராதிகா வீட்டில் அல்லல் படும் ஈஸ்வரி.. ஜெனி மாறியாச்சு! வெடிக்க போகுது பூகம்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 21 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் இன்றைய எபிசோடில் பாக்கியா அமிர்தாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக ஜெனி கோபப்படுகிறார். மறுபக்கத்தில் எழில் கேரக்டரில் நடித்து வந்த விஜே விஷால் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் எழில் கேரக்டரில் விஜே விஷாலுக்கு பதிலாக நடிகர் நவீன் புது கேரக்டரில் என்ட்ரி ஆகி இருக்கிறார். அவர் புது படத்தின் கதையை ஒரு தயாரிப்பாளர் இடம் சொல்வதற்காக தாத்தா மற்றும் பாக்யாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு கிளம்புகிறார்.

இதை தொடர்ந்து ராமமூர்த்தி நான் ரெஸ்ட் எடுக்க போகிறேன் என்று சொல்ல பாக்கியா நான் ரெஸ்டாரண்டுக்கு போகாம வீட்டுல இருந்து உங்களை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்ல ராமமூர்த்தி அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ வேலைய பாரு என்று சொல்ல, அதற்கு பாக்கியா சரி மாமா அப்போ அமிர்தா வீட்டிலிருந்து வேலைகளை பார்த்துக்கட்டும் என்று சொல்ல அதற்கு ராமமூர்த்தி நீ சொன்னா கேட்கவா போற என்று சரி சொல்லிவிட்டு கிளம்பி ரூமிற்கு போய் விடுகிறார்.
அதற்கு ஜெனி நான் தான் வீட்டில் இருக்கேன் தாத்தாவை பாத்துக்குறேன் என்று சொல்ல, அதற்கு பாக்கியா நீ குழந்தையை பாத்துக்குவ அமிர்தா வீட்ல இருந்து வீட்டு வேலைகளை பார்த்துக்கட்டும் என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து பாக்யா ஜெனி இடம் இன்றைக்கு பால்காரர் வருவார் பணம் கொடுக்கணும், ஈபி பில் ரீடிங் எடுக்க வருவாங்க, பேப்பர் காரங்க வருவாங்க அவருக்கு காசு கொடுக்கணும்...
மாமாவுக்கு மாத்திரை கொடுக்கணும் என்று பல வேலைகளை சொல்லிக் கொண்டே இருக்கிறார். பிறகு நீ இதை மறந்துடுவ நான் ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்துட்டு போறேன் என்று எல்லா வேலைகளையும் எழுதி அதை ஜெனியிடம் கொடுக்காமல் நான் டேபிளிலேயே வைக்கிறேன் அமிர்தாவுக்கு ஒரு மெசேஜ் போட்டு இருக்கிறேன். அவ பாத்துக்குவா என்று சொல்லி நீ போய் குழந்தையை பார்த்துக்க என்று அனுப்பி வைக்கிறார்.
பாக்கியா தன்னை நம்பாமல் அமிர்தாவை வேலைகளை செய்ய சொன்னதும் ஜெனியின் முகம் மாறுகிறது. பிறகு ஜெனி சோகமாக இருக்க அந்த நேரத்தில் செழியன் வீட்டிற்கு வந்து ஜெனி டல்லாக இருப்பதால் என்ன ஆச்சு என்று கேட்க ஜெனி ஒன்றும் இல்லை என்று சமாளிக்கிறார். பிறகு வீட்டு வேலைகளை நான் பொறுப்பா பார்த்துக்க மாட்டேனா? அதை ஏன் அமிர்தா கிட்ட சொல்றாங்க என்று கேட்க,
அதற்கு செழியன் அமிர்தாவுக்கு அதெல்லாம் பழக்கம் இருக்கு. அதனால அவங்க கிட்ட சொல்றாங்க. நீ இதெல்லாம் நினைச்சு கவலைப்படாத என்று சமாதானம் சொல்கிறார். மறுபக்கத்தில் ராதிகா, மயூ, கமலா எல்லோரும் காபி குடித்துக் கொண்டிருக்கும் போது தூக்கத்தில் இருந்து எழுந்து ஈஸ்வரி காபி காபி என்று கத்த ராதிகா எழுந்திருக்கவும் கமலா உக்காரு என்று உட்கார வைக்கிறார்.
பிறகு நீ போய் ரெஸ்ட் எடு நான் அவங்களுக்கு காபி போட்டு தரேன் என்று ராதிகாவை அனுப்பி வைக்கிறார். இதை தொடர்ந்து பாக்யா ரெஸ்டாரண்டில் இருக்கும்போது பக்கத்தில் இருக்கும் ஒரு கடைக்கு பெயிண்ட் அடித்து ரெடி ஆகி கொண்டு இருக்க அந்த கடையின் ஓனர் பாக்யாவிடம் நீங்கதான் இந்த ரெஸ்டாரண்டின் ஓனரா? நான் பக்கத்துல இருக்குற கடையை வாங்கி இருக்கிறேன்.
இன்னும் கொஞ்ச நாளில் திறந்திடுவேன் அதற்கு ரெடி பண்ணிட்டு இருக்கிறேன் என்று சொல்ல பாக்கியா என்ன கடை வரப்போகுது என்று கேட்க அதற்கு அவர் இங்கே பார் திறக்கப் போறேன் என்று சொல்கிறார் அதோடு இனிமே உங்களுக்கு வியாபாரம் நன்றாக நடக்கும். பார் வரவங்க எல்லாம் உங்க ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டு தான் போவாங்க என்று சொல்ல பாக்கியா இந்த விஷயத்தை பற்றி செல்வி மற்றும் கடையில் இருக்கும் எல்லாரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்.
எல்லோரும் பார் இங்க வருவது சரியா இருக்காது... அதனால பார் இங்க வர விடக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதை எப்படியாவது தடுத்து நிறுத்தனும் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications