பார் திறப்பு விழாவால் பாக்யாவுக்கு வந்த ஆஃபர்.. பழனிசாமி என்ன இப்படி சொல்லிட்டாரு? எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 28ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் பாக்யாவின் ரெஸ்டாரண்ட் பக்கத்தில் பார் திறக்க இருக்கும் நிலையில் அதனால் பாக்யாவுக்கு சமையல் ஆர்டர் கிடைக்கிறது. மறுபக்கத்தில் பழனிச்சாமி தன்னுடைய காதலை வெளிப்படுத்துகிறார் என்ன நடந்தது என்பது விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் வீட்டில் எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தாத்தா எழிலிடம் உனக்கு ஏதாவது சந்தேகம்னா என்கிட்ட கேளு. நான் கண்டிப்பா சொல்லித் தரேன் என்று சொல்ல எழில் படம் முடிகிற வரைக்கும் உங்ககிட்ட தான் கேட்பேன். எந்த அப்டேட்டா இருந்தாலும் உங்ககிட்ட சொல்லுறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி போகிறார்.

பிறகு பாக்யா ஜெனி இடம் இன்னிக்கு நீயே வீட்ட பாத்துக்கோ. அமிர்தா நீ என்கூட ரெஸ்டாரண்ட் வந்துடு என்று சொல்கிறார். பிறகு ஜெனி இடம் தாத்தாவிற்கு சாப்பிடுவதற்கு முன்னாடியும் சாப்பிட்டதுக்கு பின்னாடியும் மாத்திரை கொடுக்கணும் மறந்துடாத என்று சொல்கிறார். அதற்கு ஜெனி எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன் என்று சொல்ல, அமிர்தா நிலா பாப்பாவை நான் கூட்டிட்டு போறேன் என்று சொல்ல அதற்கு ஜெனி வேண்டாம் நானே நிலாவையும் சேர்த்து பார்த்துகிறேன் என்று சொல்கிறார்.
சரத்குமாருக்கு அவ்ளோ கஷ்டம் இருக்கு! "நட்புக்காக" படத்தில் முதல் நாளில்.. எமோஷனலான கேஎஸ் ரவிக்குமார்
அதற்கு அமிர்தா ஒரு குழந்தையை சமாளிக்கிறதே கஷ்டம். இதுல நிலாவை வேற சமாளிக்கிறது கஷ்டம் என்று சொல்ல அதற்கு ஜெனி நான் பாத்துக்குறேன் என்று சொல்கிறார். பிறகு ஜெனி வீட்டில் இருக்க குழந்தை அழுது கொண்டே இருக்கும் போது, தூங்கிக் கொண்டிருந்த ராமமூர்த்தி எழுந்து நான் குழந்தையை தூக்க வரவா என்று கேட்க, ஜெனி வேண்டாம் நான் பார்த்துக்கிறேன். குழந்தையை தூங்க வச்சுட்டு உங்களுக்கு சாப்பாடு கொடுக்கிறேன் என்று சொல்கிறார். பிறகு குழந்தையை தூங்க வைக்க போது ஜெனியும் தூங்கி விடுகிறார்.

மறுபக்கத்தில் பழனிச்சாமி ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். செல்வி பார் விஷயம் பற்றி பேச்சு கொடுக்க பாக்யா பக்கத்துல ஒரு பார் வருது சார் என்று சொன்னதும் பழனிச்சாமி ஓ அப்படியா? அதுக்கான வேலைகள் தான் போயிட்டு இருக்கா? என்று கேட்கிறார். நானும் ஓனர் கிட்ட பேசிட்டேன். பாரை வேற எங்கேயாவது வைக்க முடியுமா? என்று கேட்டேன். அவர் வேணும்னா ரெஸ்டாரன்ட்டை என்கிட்ட கொடுத்துருங்க. நானே பாத்துக்குறேன் என்று சொல்கிறார் என்று பாக்கியா சொல்ல,
பழனிச்சாமி அப்படித்தான் அவங்க சொல்லுவாங்க. ஓனர்கிட்ட பேசி பிரண்டாக வேண்டியது தான். அக்கம் பக்கத்து கடைக்காரங்க கிட்ட நல்லா பேசி பழகுங்க என்று பாக்யாவை கூப்பிட்டு சென்று பார் ஓனரிடம் பேசுகிறார். பார் ஓனரிடம் தன்னை பாக்கியாவின் பிரண்டு என்று பழனிச்சாமி அறிமுகப்படுத்திக் கொண்டே கடை திறப்பு வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என்று கேட்க, அவர் ஒரு சமையல் ஆர்டர் கொடுத்திருந்தோம்.

என் மச்சான் தான் ஏற்பாடு பண்ணுனான். ஆனா இப்போ அந்த ஆளு வெளியூர் போனதுனால சமைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதான் என்ன பண்ணுறதுன்னு தெரியாம இருக்கேன் என்று சொல்ல அதற்கு பழனிச்சாமி பாக்கியா மேடம் இருக்காங்களே அவங்க சமைப்பாங்க என்று பாக்கியாவை பற்றி பெருமையாக பேச, பார் ஓனர் ஆர்டர் பாக்கியாவிடமே கொடுத்து அதற்கான அட்வான்ஸ் பணத்தையும் கொடுக்கிறார்.

அப்போது பாக்கியா பாரில் குடிச்சிட்டு இங்க வருவாங்க. எதுவும் பிரச்சனை நடக்காதா? என்று கேட்க பழனிச்சாமி நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அப்படி எதுவும் நடக்காது. ஒருத்தர் ரெண்டு பேரு தான் அப்படி இருப்பாங்க. அதை எல்லாம் சமாளிச்சுக்கலாம் என்று சொல்ல, நீங்க நாளைக்கு என்கூட இருப்பீங்களா? என்று பாக்கியா கேட்க, பழனிச்சாமி கண்டிப்பா நான் நாளைக்கு உங்களோட இருக்கிறேன் என்று சொல்கிறார். பிறகு பாக்கியா நடந்து சென்றதும் நாளைக்கு மட்டும் இல்லங்க எப்பவும் உங்க கூடவே இருப்பேன் என்று மைண்ட் வாய்ஸில் சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications