சரத்குமாருக்கு அவ்ளோ கஷ்டம் இருக்கு! "நட்புக்காக” படத்தில் முதல் நாளில்.. எமோஷனலான கேஎஸ் ரவிக்குமார்
சென்னை: இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் கேஎஸ் ரவிக்குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் சரத்குமார் குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் சரத்குமார் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் அவருக்கு சினிமாவில் தனக்கு உண்டான வேலையை சரியாக செய்து விடுவார் என்று பாராட்டி இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு ட்ரெண்டிங் இருக்கிறது தாங்கள் நடிக்கும் திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நேரத்தில் பல நடிகர்கள், நடிகைகள் தொடர்ச்சியாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சரத்குமார் நடிப்பில் ஹிட்லிஸ்ட் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சரத்குமார் மற்றும் அந்த திரைப்படத்தில் இருக்கும் கே.எஸ் ரவிக்குமார் இருவரும் சேர்ந்து பல பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கே எஸ் ரவிக்குமார் பேசிக்கொண்டிருக்கும் ஒரு சரத் குமாருக்கு குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் சரத்குமார் இடத்தில் வேறு ஒருவர் இருந்தால் அவரால் இவ்வளவு பிரச்சனைகளை தாண்டி வந்திருக்க முடியுமா? என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு சரத்குமார் அவருடைய வாழ்க்கையில் பிரச்சனைகளை பார்த்திருக்கிறார்.
பினான்சியல் ஆக மட்டுமல்லாமல் குடும்பத்திற்குள்ளும் பல பிரச்சனைகள் இருந்தது. அதுபோல அவருடைய சினிமா, அரசியல் என்று எல்லா இடத்தில் இருந்தும் அவருக்கு ஒரு நேரத்தில் பிரஷர் ஏற்பட்டது. அது எல்லாமே எங்களுக்கு தெரியும். ஆனால் அவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அவர் வெளியே சிரித்தபடி தான் பேசிக் கொண்டிருப்பார். எவ்வளவு சிரித்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறாரோ அந்த நேரத்தில் அவர் அவ்வளவு பிரச்சனையில் இருக்கிறார் என்று அர்த்தம், அது அவரோடு நெருக்கமாக இருக்கிறவர்களுக்கு தான் தெரியும்.
"நட்புக்காக" திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த திரைப்படத்தின் முதல் நாள் சூட்டிங் நடைபெறும் போது என்ன சூழ்நிலை என்பது யாருக்கும் தெரியாது. காரணம் அந்த திரைப்படத்தின் சூட்டிங் நாளை நாங்கள் குறித்து பூஜைக்கு எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருந்தோம்.
அதற்கு முதல் நாள் தான் நாடாளுமன்ற தேர்தல் ரிசல்ட் வெளியானது. அதில் எம்பி போஸ்ட்க்கு நின்ற சரத்குமார் தோல்வி அடைந்து விட்டார். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சரத்குமார் தோல்வி என்று ரிசல்ட் வந்திருக்கிறது அடுத்த நாளே இவரால் நடிக்க வர முடியுமா? அவர் எப்படி வருவார் என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் சொன்ன நேரத்தில் சரியாக பூஜையில் கலந்து கொண்டார்.
முதல் நாளில் அவருக்கு அப்பா கேரக்டரில் நடிப்பதற்காக கெட்டப் போட்டு இருந்தது. அப்போது அவருடைய பல் எல்லாம் கருப்பு கலரில் மாற்ற வேண்டும் என்று சொல்லி இருந்தோம். அதில் அவர் முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தார். எனக்குள் ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. நேற்று ரிசல்ட் தோல்வி என்று வந்திருக்கிறது இன்று அவர் அதைப் பற்றி கொஞ்சம் கூட பேசவில்லையே என்று.. ஆனால் அவர் அன்று மட்டுமல்ல அதற்குப் பிறகும் அந்த ரிசல்ட்டை பற்றி எதுவுமே பேசவில்லை.
நடிப்புக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்தார். அதனாலயோ என்னவோ நட்புக்காக திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த திரைப்படத்தில் அவர் இரண்டு கேரக்டரில் நடித்திருந்தார். அதுவும் மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு கிடைத்தது என்று அந்த பேட்டியில் ரவிக்குமார் பேசி இருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications