பாக்கியலட்சுமி: அசிங்கப்படுத்திய எழிலிடம் கோபி கேட்ட கேள்வி.. பாக்யாவால் அதிர்ச்சியில் ஈஸ்வரி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 11ம் தேதிக்கான எபிசோடில் கோபி, எழிலிடம் தன்னை அவமானப்படுத்தியதற்காக பேசுகிறார். அதோடு பாக்கியா ஈஸ்வரிக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி எழிலிடம் வாழ்த்துக்கள் சொல்கிறார். அதோடு என் மீது இருக்கிற கோபத்தில் நீ உங்க அம்மா பற்றி பக்கம் பேசினா. நீங்க எல்லாரும் என்ன அசிங்கப்படுத்தினீங்க, அவமானப்படுத்துவீங்க.. ஒவ்வொரு முறையும் என்னுடைய கடமைகளை செய்ய விடாமல் தடுக்கிறீங்க.

எங்க அப்பாவுடைய இறுதி சடங்கில் நான் கலந்து கொள்ள கூடாது என்று நீங்க எல்லாரும் பிளான் போட்டு தடுத்தீங்க. அதற்கு பழிவாங்க தான் நான் இப்படி நடந்து கொண்டேன். ஆனால் நீ இந்த இடத்திலும் உங்க அம்மாவை விட்டுக் கொடுக்காம பேசிட்டே என்று சொல்கிறார்.
அதற்கு எழில் நீங்க செஞ்சது எவ்வளவு கேவலமான செயல் தெரியுமா? ஒருத்தங்க சந்தோஷப்படுற இடத்தில் அவங்கள நிற்க வைக்காம தடுத்து நிறுத்திட்டீங்க, எனக்கு முன்னாடியே உங்கள பத்தி தெரிஞ்சு இருந்தா நான் வேற மாதிரி முடிவு எடுத்து இருப்பேன். இதை இதை நான் சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன் என்று சொல்கிறார்.

அதற்கு கோபி பிரச்சனை என்றால் நான் வேண்டும் ஆனால் மற்ற விஷயம் என்றால் உங்க அம்மா வேணுமா? என்று எழிலுக்கு பதிலடி கொடுக்கிறார். இதைத்தொடர்ந்து பாக்யா வீட்டிற்கு வரும் வருகிறார் அப்போது ஈஸ்வரி பாக்யாவிடம் பங்க்ஷன் எப்படி நடந்தது என்று கேட்டுக்கொண்டே இருக்க அதற்கு பாக்கியா பங்க்ஷனுக்கு நான் போகவில்லை ரெஸ்டாரண்டில் வேலை இருந்தது என்று சொல்கிறார்.

ஆனாலும் ஈஸ்வரி பங்க்ஷன் பற்றி துருவி துருவி கேட்டுக் கொண்டிருக்க அதற்கு பாக்கியா வாங்க ரெஸ்டாரண்டுக்கு போகலாம் என்று ஈஸ்வரியை கூட்டிக்கொண்டு வருகிறார். பிறகு ரெஸ்டாரண்டில் ஆயுத பூஜை ஆர்டர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பாக்கியா ஈஸ்வரியை கூட்டிக்கொண்டு ரெஸ்டாரண்ட் வந்ததும் செல்வி ஃபங்ஷனில் என்ன நடந்தது? யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார். அப்போது பாக்கியா ஏதோ சமாளித்துக் கொண்டு ஈஸ்வரி இடம் முதலாவது ஆர்டர் செய்ய சொல்கிறார். ஆனாலும் ஈஸ்வரி மறுக்கிறார்.

எல்லாரையும் வெளியே அனுப்பிவிட்டு செஃப், ஈஸ்வரி, பாக்யா மூன்று பேரும் ஏதோ பேசுகிறார்கள். அடுத்ததாக ஈஸ்வரி எல்லாரையும் அழைத்து சாமி கும்பிட்டு பூஜைக்கான ஆர்டரை ஆரம்பித்து வைக்கிறார். பிறகு இந்த ஆர்டர் உனக்கு நல்லபடியா நடக்கும் என்று ஈஸ்வரி சொல்ல, இதை பார்த்த செஃப் நக்கலாக சிரிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications