பாக்கியலட்சுமி: செஃப் வைத்து பாக்யா போட்ட பிளான்.. சிக்கிய கோபி! பாவத்திற்கு சம்பளம் இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 13ஆம் தேதிக்கான எபிசோடில் பிரியாணி ஆர்டரில் கோபி செய்த தில்லு முல்லு வேலை பாக்கியாவிற்கு செஃப் மூலம் தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே செஃப் பற்றி எல்லா உண்மைகளும் தெரிந்த பாக்யா எடுத்த ரிஸ்க்கை இன்று எல்லோருக்கும் பாக்கியாவே அம்பலப்படுத்தி இருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் வேலையில் அலுப்பு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பாக்கியா அங்கு வேலை செய்யும் பெண்களை பாட்டு பாட சொல்லிக் கொண்டிருக்கிறார். வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் பாக்கியா எழில் பட பூஜையில் நடந்ததை பற்றி யோசித்து அழுது கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் வந்த செல்வி படம் பூஜை பற்றி கேட்க இப்போதைக்கு இதை பற்றி பேச வேண்டாம் வேலையை பாரு என்று அனுப்பி விடுகிறார். பிறகு காலையில் வேலை முடிந்து வண்டி வந்ததும் எல்லாவற்றையும் அனுப்பி வைக்கின்றனர். வேலை செய்தவர்களை அழைத்து ஆர்டர் முடிக்க நீங்க மட்டும் துணை இல்லை என்றால் இந்த ஆர்டர் செய்து முடித்திருக்க முடியாது, நீங்க யார் என்று எனக்குத் தெரியாது எல்லோரும் ரொம்ப நன்றி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் செஃப்க்கு கோபிநாத் கால் செய்கிறார். அப்போது பாக்கியா அதை கவனித்து போனை ஸ்பீக்கரில் போடு என்று சொல்கிறார். மேலும் செல்வியிடம் பிரியாணி பிரச்சனையில் என்ன நடந்தது என்று இப்போது தெரியும் என்று சொல்லிக்கொண்டு போனை செஃப்பை அட்டென்ட் செய்ய சொல்கிறார்.
அப்போது கோபிநாத் லட்டுல என்ன கலந்தீங்க? பிரியாணியில் பழைய கறியை கலந்தீங்க என்று எல்லா விஷயத்தையும் உளறி விடுகிறார். இன்னும் கொஞ்ச நேரத்தில் பாக்யா ரெஸ்டாரண்டை பூட்டி விடுவார்களா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த கேட்டு செல்வி செஃப்பை இழுத்து அடிக்கிறார். ஆனாலும் பாக்கியா தடுத்து நிறுத்துகிறார்.

அதோடு எனக்கு ஏற்கனவே எல்லா விஷயமும் தெரியும். அந்த செஃப் வேலைக்கு வரலை என்றதும் நான் அவருடைய வீட்டிற்கு சென்றேன். அப்போது நம்முடைய ஹோட்டலில் சமைத்த பிரியாணியை நான் அவருடைய மகளுக்கு சர்ப்ரைஸாக அனுப்பி வைத்திருந்தேன். அதனால் அவருடைய உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று அவருடைய மனைவி என்னிடம் அழுது கொண்டு உண்மைகளை சொன்னார்.
பிறகு பணத்திற்கு ஆசைப்பட்டு தான் செய்த பாவத்தினால் தன்னுடைய மகள் பாதிக்கப்பட்டு விட்டால் என்று செஃப் அழுது கொண்டு பேசியதால் அவரை வேலைக்கு கூப்பிட்டேன். அதோடு வழக்கம் போல கோபியிடன் பேசுங்கள். தனக்கு மட்டும் விசுவாசமாக இருங்கள் என்று சொல்லி தான் அவரை வேலைக்கு எடுத்தேன் என்று ரகசியங்களை உடைக்கிறார்.

அதோடு ஈஸ்வரி நான் ஆயுத பூஜைக்கு உணவு தயாரிக்கும் போது விளக்கு ஏற்றி வைக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்ததற்கு ஈஸ்வரி மற்றும் செஃப்பை அழைத்துக் கொண்டு ஒரு ரூமிற்கு சென்று என்ன பேசினோம் என்பதையும் பாக்கியா சொல்கிறார்.
அப்போது ஈஸ்வரி நான் ராசி இல்லாதவள் என்னால்தான் உனக்கு பிரியாணி ஆர்டர் பிரச்சனை ஆகிவிட்டது என்று சொல்ல, அதற்கு பாக்கியா அந்த பிரச்சனை வந்தது உங்களால் அல்ல உங்களுடைய மகனால் உண்மையை சொல்லுங்க செஃப் என்று சொல்ல, செஃப் எல்லா உண்மைகளையும் சொல்கிறார்.
இதனால் ஈஸ்வரி நான் இப்படி ஒரு கேவலமான மகனை பெற்றிருக்கிறேன் என்று சொல்லி அழுது கொண்டுதான் பிறகு மனம் மாறி ஆயுத பூஜைக்கு விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார். இதை எல்லாம் தெரிந்து கொண்டதும் உள்ளிருக்கும் ஊழியர்கள் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். பிறகு பாக்கியா நான் கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாக கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications